Wednesday, 18 March 2020

ஆஸ்துமா - Wheezing

ஆஸ்துமா அறிவோம்...

ஆஸ்துமா என்பது சுவாசக் குழாயில் ஏற்படும் பிரச்சினை ஆகும்.
இதில் மூச்சு உள்ளிழுப்பதிலும் வெளி விடுவதிலும் சிரமம் ஏற்படுவதோடு Wheezing எனப்படும் சிறப்பு ஒலியும் இணைந்து காணப்படும்.

ஆஸ்துமா பாதிப்பு (Attack)என்றால் என்ன..?

நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கும் மூச்சுக்குழாயில் உட்பக்க சுவரானது குளிர் காற்று புகை அல்லது தூசு இவற்றின் தாக்குதல் ஏற்படும் வேளையில் ஒவ்வாமை(Allergy) ஏற்பட்டு திடீரென வீக்கம் அடைந்து இறுக்கமாகிவிடும் நிலையே ஆஸ்துமா பாதிப்பு (Asthma Attack) என்று அழைக்கப்படும்.

அளவுக்கு அதிகமாக வழவழப்பான சளி திரவமும் இந்த வேளையில் திடீரென சுரந்து மூச்சுத் திணறல் பாதிப்பை மேலும் அதிகரிக்கிறது.
(ஒருவர் திடீரென ஆஸ்மா பாதிப்புக்கு உள்ளாவது இப்படியே..)

எல்லா மூச்சு திணறலும்   ஆஸ்துமா நோய் தானா?

மூச்சுக்குழாய் இறுக்கமடைந்து அல்லது உள்சுவர் வீக்கமடைந்து மூச்சுத் திணறல் ஏற்படும் எல்லா வகை பாதிப்பும் ஆஸ்துமா என்ற பொது பெயரிலேயே அழைக்கப் படும்.

ஆஸ்துமா நோயில் வகைகள் உண்டா?

வகை.1
ஆஸ்துமா பாதிப்பு உடைய பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பிறக்கும்போதே ஒவ்வாமை (Atopic Allergy)   தன்மையோடு இருக்கும் சூழ்நிலையில் அதிக அளவு பாதிப்புக்கு உள்ளாகிறது.
இத்தகைய குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பதோடு ரத்தத்தில் IgE அளவும் உயர்ந்து காணப்படும்.

 வகை:2
இயல்பாக இருந்த ஒரு நபருக்கு அடுக்குத் தும்மல் மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் காலம் தாழ்த்தும் வேலையில் தொண்டையை மற்றும் மூச்சுக் குழாயை சென்றடையும் சளி திரவமானது நாள் செல்லச் செல்ல கிருமித் தொற்று ஏற்பட்டு மூச்சுக் குழாயின் உட்சுவரில் வீக்கம் தொடர்ந்து மூச்சு திணறல் ஏற்படுத்தும் நிலை.

(இரண்டாம் வகை ஆஸ்துமா நோயானது அடுக்குத் தும்மல்.. மூக்கில் நீர் வடிதல்.. போன்ற பிரச்சினைகளுக்கு சரியான நேரத்தில் சிகிட்சை செய்து குணம் பெறலாம்.

சிகிச்சை முறைகள்:
உடனடி நிவாரணம் பெற நவீன மருத்துவத்தில் பல விதமான இன்ஹேலர் ரோட்டாஹேலர் வகைகள் பயன்படுத்தப்படுகின்றது.

சித்த மருத்துவம்

முதல் வகை ஆஸ்துமா நோய் பாதிப்பை கணிசமாக கட்டுப்படுத்த இயலும். முற்றிலுமாக குணப்படுத்த இயலாது.

இரண்டாம் வகை ஆஸ்துமா நோய் தீவிர பாதிப்பு ஏற்படாமல் தடுக்க சித்த மருத்துவம் மிகச் சிறப்பாக உதவுகிறது.
நோய் பாதிப்புக்கு ஏற்ற சித்த மருந்துகளை பிரயோகித்து மிகச்சிறந்த பலனை அடையலாம்....

No comments:

Post a Comment