Wednesday, 18 March 2020

சிறுநீரகக் கசாயம்

மருந்து
நீர் முள்ளி சூரணம் ..........  இரண்டு கிராம்
நெருஞ்சில் வேர் அல்லது முள் சூரணம்  ..........  இரண்டு கிராம்
சோம்பு தூள் ..........  இரண்டு கிராம்
தனியா தூள் ..........  இரண்டு கிராம்
ஆகிய நான்கு  பொருட்களையும்.
கொடுத்துள்ள அளவின் படி எடுத்து.
 நானூறு மில்லி தண்ணீரில் போட்டு காய்ச்சி .
நூறு மில்லி கசாயமாக சுருக்கி.
இறக்கி வடி கட்டி,
உணவுக்கு சாப்பிடுவதற்கு முப்பது நிமிடங்களுக்கு முன்னதாகக்
குடித்து வர வேண்டும்.

நாள்தோறும் காலை இரவு என இரண்டு வேளைகள் குடிக்க வேண்டும்.
ஒவ்வொரு முறையும் புதிதாகக் கசாயம் போட்டு குடிக்க வேண்டும்.
நல்ல நறு மணத்துடன் கூடிய கசாயம் இது.


சிறுநீரக மண்டல நோய்கள் அனைத்தையும் குறைத்து உடலில் இருந்து வெளியேற வேண்டிய கழிவுகளை வெளியேற்றி சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது இது .
சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் சிறுநீரக  அடைப்பு சிறுநீர் குழலில் சுருக்கங்கள் சிறுநீரக செயல் இழப்பு போன்ற பிரச்சினைகளைக் குறைக்கக் கூடிய நோயின் தாக்கத்தைக் குறைக்கக் கூடிய அரு மருந்து இது.
நாற்பது வயதுக்கு மேல் சில பெண்களுக்கு கருப்பை வீக்கம் ஏற்படும்போது சிறுநீர் பையில் ஒரு தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தி,
அழுத்தம் அதிகமாகும்போது, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை, சிறுநீரக தொற்று, சிறுநீர் கழிக்கும்போது வலி, எரிச்சல், சிறுநீர் வருகிறது என்று நினைத்து  கழிவறைக்கு செல்லும் முன்னரே சிறுநீர் கசிந்து விடுவது ஆகிய நான்கு பிரச்சினைகளையும் குறைக்க ,
தும்மும்போதும், இருமும்போதும், நடக்கும்போதும், சிரிக்கும்போதும், தரையில் அழுத்தி கை ஊன்றி எழுந்திருக்கும்போதும், படிக்கட்டுகளில் ஏறும்போதும் ஏற்படும் சிறுநீர் கசிவு ஆகிய பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது இந்தக் கசாயம்.

சிறுநீரகக் கற்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கோடைக்காலங்களில் ஏற்படுகிறது
 ஆனால் சிலருக்கு இது ஒரு நிரந்தரமான பிரச்சினையாக இருக்கிறது
மாதம் ஒரு முறையாவது கல் உருவாகி முறுக்கி முறுக்கி  வலி ஏற்படும் சில நேரங்களில் வாந்தி ஏற்படும்
இது போன்ற பிரச்சினைகளுக்கு தொடர்ந்து நூறு நாட்கள் இந்த கசாயத்தை நாள்தோறும் இரண்டு வேளைகள் மூலிகைத்தேநீராக குடித்து வர சிறுநீரக மண்டலக் கோளாறுகள் படிப்படியாக நீங்கி நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
ஆண்களுக்கு வயதாகும்போது பிராஸ்டேட் சுரப்பி தன்  பலத்தை இழந்து, மிருதுவான நிலையில் இருந்து கடினமாக மாறி பிராஸ்டேட் சுரப்பியின் வீக்கம் தசை அடைப்பு என்ற பிரச்சினையை ஏற்படுத்தி சிறுநீர் வெளி வரும்பாதையில் சுருக்கத்தை ஏற்படுத்தி,
சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை உந்துதல் வரும்போது வேகமாக வராமல் முக்கி சிறுநீரை வெளியேற்ற வேண்டிய நிலை சொட்டு சொட்டாக மூத்திரம் போவது போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தி விடும்.
இந்தப் பிரச்சினையைக் குறைக்க குணமாக்க உதவும் மருந்து இது .

சிறுநீரகக் கற்கள் இருந்து முறையான சிகிச்சை எடுக்காமல் இருப்பதால்
அடிக்கடி சிறுநீர் தொற்று ஏற்பட்டு முறையான சிகிச்சை எடுக்காத காரணத்தால்
அல்லது பரம்பரை காரணமாக வரும் நோயாகவும்
சிறுநீர் குழலில் ஏற்படும் சுருக்கம் என்ற  urethral stricture  நோய் பாதிப்பு ஏற்படும்போது
சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் வரும்போது முட்டிக் கொண்டு வருவது போல அவசரம் இருக்கும் ஒண்ணுக்குப் போய் இருந்தால் அந்தப் பாதையில் கண்ணாடி துகள்கள் கொண்டு அறுத்தால் எப்படி இருக்குமோ அப்படி வலி வேதனை எரிச்சல் இருக்கும் அடுத்த அரைமணி நேரம் உட்காரக் கூட முடியாத வலி வேதனை இருக்கும் .
இந்த urethral stricture  பிரச்சினையை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப் படுத்த உதவும் அரு மருந்து இது.

உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றவும், சிறுநீரக செயலிழப்பு ஏற்படாமல் தடுக்கவும், சிறுநீரக அழற்சி மற்றும் தொற்றுக்களை வேகமாகக் குணமாக்கவும், வயதான காலத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படுகின்ற சிறுநீரக மண்டல தொந்தரவுகளை நீக்கவும்,
  இதை ஒரு மருந்தாக அல்ல மூலிகைத் தேநீராகப் பயன்படுத்தி நலமுடன் வாழ முடியும்
இதை நோய் வந்த பின்பு மருந்தாக மட்டுமல்ல வருமுன் காக்கும் ஒரு நோய் தடுப்பு மருந்தாகவும் வாரம் இரண்டு மூன்று நாட்கள் பயன்படுத்தி நலமடையலாம் .

No comments:

Post a Comment