Wednesday, 18 March 2020

கோவைக்காய் இலை

தினம் ஒரு மூலிகை மருத்துவத்தில் இன்று கோவைக்காய் இலை பற்றி பார்ப்போம்.

1.  மதுமேகம்
2 கோவைக் காய்களை தினமும் பச்சையாக சாப்பிட்டு வர மதுமோகம் தடுக்கலாம்.

2.   சொறி, சிரங்கு
கோவை இலைச்சாறை நல்லெண்ணையில் காய்ச்சி தலை முழுகி வர சொறி சிரங்கு படை தீரும்.

3. தாய்ப்பால் பெருக
தாய்ப்பால் பெருக கோவை இலையை வெள்ளைப் பூண்டுடன் நெய்யில் வதக்கி காலையில் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.



4.  வெட்டைச்சூடு குறைய
வெட்டைச்சூடு குறைய கோவை இலைகளை பிழிந்து சாறு எடுத்து தினமும் காலையில் ஒரு ஸ்பூன் அளவு 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வெட்டைச்சூடு குறையும்.

5.  கண் எரிச்சல் குறைய
கோவை இலை கஷாயம் குடித்து வர கண் எரிச்சல் குறையும்.

6.  சிறுநீர் அடைப்பு குறைய
கோவை இலையை வெந்நீரில் போட்டு வடிகட்டி கொடுக்க சிறுநீர் அடைப்பு குறையும்.

7.  வயிற்றுப்போக்கு குறைய
கோவை இலைகளை பிழிந்து சாறு எடுத்து எருமைத் தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

8.  மார்பு சளி குறைய
மார்பு சளி குறைய கோவை கிழங்கை சாறு எடுத்து 10மி.லி குடித்து வந்தால் மார்பு சளி குறையும்.

No comments:

Post a Comment