Wednesday, 18 March 2020

சைனஸ் பிரச்சனையை தீர்க்கும் பிரிதிவி முத்திரை!

பிரிதிவி முத்திரை மூலம் நமது உடலில் உள்ள நிலம் என்ற பூதம் அதனுடைய சரியான விகிதத்தில் உடலில் செயல்படும். அதனால் நமது உடலில் பலவகையான வியாதிகள் வருவதைத் தடுக்கின்றது.

கவலைப்படாதீர்கள், இதோ பலவித பலன்கள் தரும் பிரிதிவி முத்திரை பயிற்சி செய்யுங்கள், வளமாக வாழுங்கள். பஞ்ச பூதங்களில் நிலம் என்ற பூதம் உடலில் சமஅளவில் இருந்தால் வியாதி இருக்காது. மனமும் அமைதியாக இருக்கும். இந்த நிலம் என்ற பூதம் உடலில் அளவிற்கு அதிகமாக இருந்தால் பேராசை ஏற்படும்; மன சஞ்சலம் ஏற்படும்.

பிரிதிவி முத்திரை மூலம் நமது உடலில் உள்ள நிலம் என்ற பூதம் அதனுடைய சரியான விகிதத்தில் உடலில் செயல்படும். அதனால் நமது உடலில் பலவகையான வியாதிகள் வருவதைத் தடுக்கின்றது. உள்ளமும் அமைதியாக இருக்கின்றது.


பிரிதிவி முத்திரை செய்யும் முறை!

விரிப்பில் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி நிமிர்ந்து உட்காருங்கள். வஜ்ராசனம் அல்லது பத்மானசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். கண்களை மூடி ஒரு நிமிடம் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.

பின் பெருவிரல், மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டு அழுத்தம் கொடுக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும். இரு கைகளிலும் இவ்வாறு செய்யவும். முதலில் மூன்று நிமிடங்கள் செய்யவும். பின் 5 முதல் 10 நிமிடங்கள் வரை இந்நிலையில் இருக்கலாம். காலை, மதியம், மாலை, மூன்று நேரம் சாப்பிடும் முன் செய்யலாம் மூன்று வேளை செய்ய முடியாதவர்கள் இருவேளை (காலை, மாலை) செய்யலாம்.

No comments:

Post a Comment