Wednesday, 18 March 2020

சரக் கொன்றை கசாயம்

வாத நோய்களிலேயே மிகவும் மோசமான நோய் முடக்கு வாதம் ஆகும்.
வெறும் வலிகள் மட்டும் அல்ல, மூட்டுகளின் அமைப்பு, மற்றும் இயக்கம், ஆகியவற்றைப் பாதித்து, முடக்கும் நோய் ஆகும்.
காலை எழுந்திருக்கும்போது கைகால்களை மடக்க முடியாமல், நகர முடியாமல், மணிக்கணக்கில் முடக்கிப் போட்டு சிரமம் கொடுக்கக் கூடிய, மருத்துவர்களுக்கே மிக சவாலாக இருக்கக் கூடிய நோய் இது.

இந்த நோய் பரவுவதை தடுக்கக் கூடிய தாக்கத்தை குறைக்கக் கூடிய வலி மாத்திரைகள் இல்லாமல் கட்டுப் படுத்தக் கூடிய கசாயம் இது.
சரக்  கொன்றை மரப் பட்டை சூரணம் .....  இரண்டு கிராம்
திரிகடுகு சூரணம்  ............ஆறு கிராம்

ஆகிய இரண்டு பொருட்களையும் கொடுத்துள்ள அளவின்படி எடுத்து
நானூறு மில்லி தண்ணீரில் போட்டுக் காய்ச்சி,
நூறு மில்லி கசாயமாக சுருக்கி,
இறக்கி,
வடிகட்டி,
ஒரு வேளை மருந்தாக,
உணவுக்கு அரை மணி நேரம் முன்னதாகக் குடித்து வர வேண்டும்.
தினமும் காலை இரவு என இரண்டு வேளைகள் உணவுக்கு அரை மணி நேரம் முன்னதாகக் குடித்து வர வேண்டும்.
ஒவ்வொரு வேளையும் புதிதாக செய்து சாப்பிடுவது நல்லது.
ஸ்டீராய்டு மருந்துகளை விட வேகமாக உடலில் இருக்கும் வலிகளையும் வீக்கங்களையும் இயக்கம் அற்ற தன்மையையும் மாற்றக் கூடிய மருந்து இது.
முடக்கு வாதம் மட்டுமல்ல, காரணம் இல்லாமல் வரக் கூடிய மார்பு வலிகளையும் நீக்கக் கூடிய அழகான அருமருந்து இது .
முடக்கு வாதத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஒரு நாளைக்கு கால்வலி ஒருநாளைக்கு மூட்டு ஒரு நாளைக்கு கை விரல்களில் வலி ஒருநாளைக்கு கழுத்து வலி என்று வலி மாறி மாறி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்
இது தொடர்பான பிரச்சினைகளை குறைக்க குணப் படுத்த இந்தக் கசாயம் உதவும்
உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றி, உடலை பலப்படுத்தி, உடலின் ஆரோக்கியத்தில் மிகப் பெரிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும், வலி அற்ற வாழ்க்கையையும், கொடுக்கும் அரு மருந்து இது.
தோல் நோய்கள் இரண்டு வகைப் படும்.
ஒன்று
அதி பயங்கரமான அரிப்பு ஏற்படும், ஆனால் ஒரு துளி நீர் கூட வராது.
இரண்டாவது வகை
அரிப்புகள் ஏற்பட்டு தண்ணீர் வடியக் கூடிய வகை.
தொடை இடுக்குகளில், உடல் மடிப்புகளில், கால் பாதங்களில் ஏற்படும் அரிப்புகள், சொறிந்து சொறிந்து தண்ணீர் வடியும் அரிப்புகள் ஆகும் .
இந்த இரண்டு வகை அரிப்புகளையும் குறைக்க பெரிய அளவில் உதவும் கசாயம் இது.
ஆஸ்துமா என்ற நுரையீரல் அழற்சி நோய் வரும்போது, கட்டுப் படுத்த முதல் தீர்வாக இயற்கை மருத்துவம் சொல்வது உடலில் கழிவு சேராமல் பார்த்துக் கொள்வதுதான்.
உடலில் கழிவுகளின் அளவு அதிகரிக்கும்போது ஆஸ்துமா தாக்குதல் அதிகமாக இருக்கும் .
ஆஸ்துமா நோயை முழுமையாகக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவும் மருந்து இது .
ஆஸ்துமா நோய்க்காக என்ன மருந்து எடுத்துக் கொண்டிருந்தாலும் கட்டுப்படாமல் இருக்கும் பிரச்சினை, இந்த மருந்தை சேர்த்து எடுத்து வரும்போது, மிக சுலபமாகக் கட்டுப் பட்டு குணம் கிடைக்கும்.
முடக்கு வாதத்தை மட்டுமல்ல மார்புக் கூடு பகுதியில் இருக்கும் உறுப்புகளின் செயல் குறைபாடு காரணமாக வரும் வலிகளையும் நீக்கும் நல்ல மருந்து இது. 
இதை ஒரு மருந்தாக அல்ல மூலிகைத் தேநீராகப் பயன்படுத்தி வர உடல் கழிவுகளை வெளியேற்றி,  உள்ளுறுப்புக்களின் செயல்பாடுகளை சீராக்கி, உடலில் தேவையற்று தேங்கி இருக்கும் நீரை வெளியேற்றி ,பெருங்குடலை சுத்தமாக்கி , உடலின் உள்ளுறுப்புக்களின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தி ஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் அற்புதமான மருந்து இது
ஒரு மண்டலம் தொடர்ந்து மருந்தாக அல்ல மூலிகைத்தேநீராகவே பயன்படுத்தி வர, மூட்டு வலிகளும் வீக்கங்களும் நீங்கி நலமுடன் வாழலாம்.

No comments:

Post a Comment