Wednesday, 18 March 2020

கரிசலாங்கண்ணி

மருத்துவப் பயன்கள் -: இது இருவகைப் பூக்கள் உடையது
மஞ்சள், வெள்ளை. மஞ்சள் பூ பூப்பது மஞ்சள் காமலைக்கும் வெள்ளைப் பூ பூப்பது ஊது காமாலைக்கும் நல்ல குணத்தைத் தருகின்றன. கற்பகமூலிகை இதுவாகும். இதன் பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுலையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்கிறது.  உடல் தாதுக்களை உரமாக்குகிறது. உடலை பொன்போல் மாற்றுகிறது.

மஞ்சக் காமாலை -: மஞ்சள் பூவுடைய கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சம அளவில் அரைத்து நெல்லி அளவு பசும்பாலில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 7 - 10 நாளில் மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகும். ஆனால் பளி, காரம் நீக்கி பத்தியம் இருக்கவேண்டும்.


கண்மை - :தூய்மையான வெள்ளைத் துணியில் கரிசலைச் சாறுவிட்டு உலர்த்தி, அத்துணியை எரித்துச் சாம்பலாக்கவும். இச்சாம்பலை ஆமணக்கு எண்ணெயில் மத்தித்து கண்ணில் தீட்ட கண் ஒளிபெறும். சிறந்த கண் மையாகும்.

குழந்தை இருமல் -: இதன் சாறு பத்துச் சொட்டு+ தேன் பத்து துளி கலந்து வெந்நீரில் கொடுக்க குழந்தையின் இருமல், சளி குணமாகும்.

காது வலி -: இதன் சாறு காதில் விட காதுவலி தீரும்.

தேள் கடிக்கு இலையைத் தின்னவும். அரைத்துக் கடிவாயில்கட்டவும் விடம் இறங்கும்.

நாள்பட்ட காமாலை -: முதல் நாள்காலை 10 மி.லி. எனத்தொடவ்கி 20, 30, 40, என 10 நாள் கூட்டி அதே விகிதப்படி 100 மி.லி ஆனதும் 90, 80, 70 என 10 நாள் குறைத்து ஆக இருபது நாள் சாப்பிட நாள்பட்ட முற்றிய காமாலையும் தீரும். பத்தியம் இருத்தல் வேண்டும். புளி, காரம், ஆகாது.மோரில் சாப்பிடவும்.

முடிவளர -: எள் நெய் அல்லது தேங்காய் எண்ணையில் இதன் இலையை அரைத்துப் போட்டு கதிரொளியில் 8 நாள் புடமிட்டு வடித்துத் தலைக்குத் தேய்க்க முடி வளரும்.

வேர் வாந்தியுண்டாக்கியாகவும், நீர்மலம் போக்கியாகவும்பயன் படுத்தப் படுகிறது. வேர், ஆடுமாடுகளுக்குண்டாகும் குடல் புண் மற்றும் வெளிப்புண்ணை ஆற்றும் கிருமிநாசினியாகவும் பயன்படத்தப் படுகிறது.

இதனால் குரலுறுப்பு நோய், குணமடைந்து குரல் இனிமையாகும். பல் நோய் குணமாகும். இதன் வேர் பொடி தோலைப்பற்றிய பிணிக்கும் கொடுக்கலாம்.
கரிசாலை சாறு நல்லெண்ணெய் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து அதில் குமரிச்சாறு, நெல்லிக்காய்ச் சாறு வகைக்கு 250 மி.லி.சேர்த்துக் கஸ்தூரி மஞ்சள், சாதிக்காய் வகைக்கு 10 கிராம்பாலில் நெகிழ அரைத்துக் கலக்கிப் பதமுறக் காய்ச்சி வடித்து(கரிசாலைத்தைலம்) வாரம் ஒரு முறை தலையிலிட்டுக் குளித்துவரத் தலைவலி, பத்தக் கிறுகிறுப்ப், உடல் வெப்பம், பீனிசம், காது, கண் நோய்கள் தீரும்.

கரிசாலை, பூக்காத கொட்டைக் கரந்தை ஆகியவற்றின்சமன் சூரணம் கலந்து நாள் தோரும் காலை, மாலை அரைத் தேக்கரண்டி தேனில் சாப்பிட்டு வர இள வயதில் தோன்றும் நரை மாறும்.

No comments:

Post a Comment