Wednesday, 18 March 2020

ஈரல் வீக்க நோய் கசாயம் அல்லது பெருங்காயக் கசாயம்

ஈரல் நோய்கள், ஈரல் வீக்கம், ஈரலில் கொழுப்பு படிந்திருக்கிறது, போன்ற பிரச்சினைகள் பெரிய அளவில் காணப் படுகின்றது.
ஈரலில் ஏற்படுகின்ற நோய்களையும், தேவையற்ற கொழுப்பு படிமானங்களையும் மாற்றி, ஈரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அரு மருந்து இது.
வீட்டு சமையல் அறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டு, வீட்டில் இருக்கும் அனைவருமே பயன்படுத்தி நலமடைய உதவும் மருந்து இது.
ஈரல் நோய் இருப்பவர்கள், ஈரல் நோய் வரக்கூடாது என்று எண்ணுபவர்கள், முக்கியமாக தினமும் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், அனைவரும் சாப்பிட வேண்டிய மிக சிறந்த மருந்து இது .

மருந்து
பெருங்காயம் தூள் ........  இரண்டு கிராம் (எண்ணெய் அல்லது நெய்யில்                               .                            பொரித்து எடுத்த பெருங்காயம் )
வெந்தயம் தூள் ........  இரண்டு கிராம்
கடுகு தூள் ........  இரண்டு கிராம்
மஞ்சள் தூள் ........  இரண்டு கிராம்

ஆகிய நான்கு    பொருட்களையும்.
கொடுத்துள்ள அளவின் படி எடுத்து.
 நானூறு மில்லி தண்ணீரில் போட்டு காய்ச்சி .
நூறு மில்லி கசாயமாக சுருக்கி.
இறக்கி வடி கட்டி,
உணவுக்கு சாப்பிடுவதற்கு முப்பது நிமிடங்களுக்கு முன்னதாகக்
குடித்து வர வேண்டும்.
நாள்தோறும் காலை இரவு என இரண்டு வேளைகள் குடிக்க வேண்டும்.
ஒவ்வொரு முறையும் புதிதாகக் கசாயம் போட்டு குடிக்க வேண்டும்.
கடுமையான கசப்பு சுவையுடன் கொஞ்சம் காரம் கலந்த கசப்பு சுவையுடன் கூடிய கசாயம் இது
வீட்டில் இருக்கும் வயதானவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், மற்ற  நோய்களுக்காக அதிகமான மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டு இருப்பவர்கள், ஈரல் நோய் பாதிப்பினால் அவதிப் பட்டுக் கொண்டிருப்பவர்கள், பெற்றோருக்கு ஈரல் நோய் இருந்தது, எனக்கு வராமல் தடுக்க வேண்டும், தடுப்பு முறைமருந்து வேண்டும் என்று நினைப்பவர்கள், தினசரி மது அருந்துபவர்கள், அனைவருக்கும் பயன் தர வல்லது இந்த மருந்து.
ஈரல் நோய்களை மட்டுமல்ல, ஈரல் வீக்க நோய்களை மட்டுமல்ல, ஈரல் சம்பந்தப் பட்ட எல்லா உறுப்புகளையும் பலப் படுத்தக் கூடிய மருந்து இது.

உடலில் ஏற்படுகின்ற ஈரல் சம்பந்தப் பட்ட, செரிமான மண்டலம் சம்பந்தப்பட்ட, வயிறு உப்புசம் சம்பந்தப் பட்ட, இரத்தத்தில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு விகிதங்களில் இருக்கும் மாறுபாடுகள் சம்பந்தப்பட்ட எல்லாவிதமான பிரச்சினைகளையும் நீக்கக் கூடிய, ஈரல் நோய்களை நீக்கக் கூடிய மிகப் பெரிய அருமருந்து இது.
ஈரல் நோய் இல்லை ஆனால் நோய் வராமல் .தடுக்க என்ன செய்ய வேண்டும் நிலையில் இந்தக் கசாயம் நல்ல மருந்து.
தொடர்ந்து நூறு நாட்கள் சாப்பிட்டு வர, செரிமானத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை உணர முடியும்.
குழந்தைகள் பெரியவர்கள் வயதானவர்கள் சர்க்கரை நோயாளிகள் அனைவருமே பயன்படுத்தி வர,
வாய்வு கோளாறுகள் செரிமானக் கோளாறுகள் நீங்கி
ஈரல் நோய்கள் வாராமல் தடுக்கும் அரு மருந்து இது
இதை ஒரு மருந்தாக அல்ல மூலிகை தேநீராக தொடர்ந்து தினமும் குடித்து வர
ஈரல் வீக்கம் மற்றும் ஈரல் மேல் படிந்திருக்கும் கொழுப்புக்கள் வேகமாகக் கரைந்து விடும் .
வீங்கி இருக்கும் ஈரல் மற்றும் ஈரல் வீக்கம் மறைந்து போய் விடும்.
மலசிக்கல் சரியாகி விடும் .
நெஞ்சு எரிச்சல்,
வயிறு எரிச்சல்,
எதுக்களிப்பு நோய்,
புளித்த ஏப்பம்,
கனத்த வயிறு,
போன்ற பலவகையான பிரச்சினைகளை தீர்த்து,
 தேவையற்ற கொழுப்பு விகிதாச்சார மாறுபாடுகள் இல்லாமல்
உடலைப் பலபடுத்தக் கூடிய
அழகான அரு மருந்துகளில் மிக சிறந்த மருந்து இது. 
ஈரல் நோய்களை தடுக்கக் கூடிய,
ஈரல் நோய்களால் ஏற்படும் பக்க விளைவுகளை தடுக்கக் கூடிய,
ஈரலுடைய புதிய செல்களின் உற்பத்தியை தூண்டி,
ஈரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய,
நல்ல மருந்து இது .
நோய் உள்ளவர்கள், நோய் இல்லாதவர்கள், அனைவருமே
 இதை மருந்தாக அல்ல
மூலிகை தேநேராகப் பயன்படுத்தி
ஈரல் சம்பந்தப் பட்ட தொந்தரவுகள் ஏற்பாடாமல் காப்பாற்றிக் கொள்ள முடியும்
ஈரல் நோய்கள் இருந்தால் குணப் படுத்திக் கொள்ளவும் முடியும்.
எனவே இதை ஒரு மருந்தாக அல்ல மூலிகைதேநீராகப் பயன்படுத்தி ஈரல் நோய்களில் இருந்து விடுபட்டு குணமாகி நலமுடன் வாழலாம்.

No comments:

Post a Comment