Wednesday, 18 March 2020

கபசுரக் குடிநீர்

கரோனாவை குணப்படுத்தும்
சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு "யுகி' என்ற முனிவர் கண்டுபிடித்த "கபசுரக் குடிநீர்' (தூள்) சித்த மருந்து பலன் அளிக்கும். நிலவேம்பு, கண்டுபாரங்கி என்று அழைக்கப்படும் சிறுதேக்கு, சுக்கு, திப்பிலி, லவங்கம், ஆடாதொடை வேர், கற்பூரவள்ளி, சீந்தில், கோரைக்கிழங்கு, கோஷ்டம், அக்ரஹாரம் ஆகிய மூலிகைகளை சம அளவில் எடுத்து"கபசுரக் குடிநீர்' தயாரிக்கப்படுகிறது. இந்த "கபசுரக் குடிநீர்' அனைத்து சித்த மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.



தொண்டை கரகரப்பு ஏற்படும் ஆரம்ப நிலையில் சித்த மருத்துவரிடம் சென்று "தாளிசாதி வடகம்" (மாத்திரை) சாப்பிட்டாலும் நிவாரணம் கிடைக்கும். வைரஸ் காய்ச்சல் என உறுதிப்படுத்தப்படும் நிலையில் "கபசுரக் குடிநீரை' கஷாயமாக காய்ச்சிக் குடித்தால் பலன் கிடைக்கும்.

அதாவது, நான்கு தேக்கரண்டி தூளை, 200 மில்லி லிட்டர் நீரில் கலந்து கொதிக்க வைத்து, வடிகட்டுவதன் மூலம் கிடைக்கும் 60 மில்லி லிட்டர் கஷாயத்தை வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாள்கள் குடிக்க வேண்டும்.

நோய் தடுப்பு மருந்தாகவும் இதை பயன்படுத்தலாம். 

No comments:

Post a Comment