Wednesday, 18 March 2020

பொன்னாங்கண்ணி கசாயம்

நிறைய வகை காய்ச்சல்களால் நாம் பாதிக்கப் பாடுகிறோம்.
சாதாரண காய்ச்சல், மலேரியா காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல், டெங்கு காய்ச்சல், சிக்கின் குனியா காய்ச்சல், என பல வகை காய்ச்சல்கள் பாதிக்கின்றன.
சில காய்ச்சல் சாதாரணமாகவும், சில காய்ச்சல் உயிரையே பறிக்கக் கூடிய அளவிலும் இருக்கிறது.
தொற்றுகளால் வரும் காய்ச்சல்களைக் குணப் படுத்த,
ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு
அல்லது

கால நிலை மாறுபாடுகளால் சமூகத்தில் பரவி இருக்கும் காய்ச்சல்,
 எந்த வகையான காய்ச்சலாக இருந்தாலும்,
அதைக் குணப் படுத்த உதவும் அரு மருந்து இது .
காய்ச்சலால் ஏற்படும் எல்லாவித பலவீனங்களையும் குணப் படுத்தக் கூடிய பக்க விளைவுகளையும் நீக்கும் உடல் தேற்றியாக உதவும் அரு மருந்து இது
மருந்து
பற்படாகம் ...........................  இரண்டு கிராம்
அதிமதுரம் ...........................  இரண்டு கிராம்
பேய்ப் புடல் ...........................  இரண்டு கிராம்
சீந்தில் தண்டு ...........................  இரண்டு கிராம்
பொன்னாங்கண்ணி இலை ...........................  இரண்டு கிராம்
( அனைத்துப் பொருட்களையும் சூரணமாகவும் எடுத்துக் கொள்ளலாம் )

ஆகிய ஐந்து பொருட்களையும்.
கொடுத்துள்ள அளவின் படி எடுத்து.
 நானூறு மில்லி தண்ணீரில் போட்டு காய்ச்சி .
நூறு மில்லி கசாயமாக சுருக்கி.
இறக்கி வடி கட்டி,
உணவுக்கு முப்பது நிமிடங்களுக்கு முன்னதாகக்
குடித்து வர வேண்டும்.
நாள்தோறும் காலை இரவு என இரண்டு வேளைகள் குடிக்க வேண்டும்.
ஒவ்வொரு முறையும் புதிதாகக் கசாயம் போட்டு குடிக்க வேண்டும்.
பரவுகின்ற விசக் காய்ச்சலை தடுக்கக் கூடிய மிக சிறந்த மருந்து இது .
ஒரு நாள் விட்டு ஒருநாள் வரும் காய்ச்சல் ,
மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஏற்படும் காய்ச்சல்,
 நான்கு நாட்களுக்கு ஒரு முறை வரும் காய்ச்சல்,
 வாரம் ஒரு முறை வரும் காய்ச்சல்,
என நம்மை தாக்கும் பலவகை காய்ச்சல்களையும்,
 விசக் காய்ச்சல்களையும்,
தொற்றுக்களால் பரவும் காய்ச்சல்களையும்,
 உடலில் கழிவுகள் தேங்கி இருப்பதால் ஏற்படும் காய்ச்சல்கள்,
ஆகிய அனைத்து வகை காய்ச்சல்களுக்கும்
நோய் குணமாகும் வரை,
தொடர்ந்து நாள்தோறும் இரண்டு வேளைகள் இந்த மருந்தைக் குடித்து வர
அவற்றிற்கு மிக சிறந்த தீர்வாக அமைகிறது இந்த கசாயம்.


சிக்கின் குனியா காய்ச்சல் ஏற்பட்டு அதனால் ஏற்படும் மூட்டு வலிகள் பாதிப்புக்களை படிபடியாக சரி செய்யும் மருந்து இது.
தொற்றுக் காய்ச்சல் ஏற்படாமல் தடுக்க
 இதை மருந்தாக அல்ல
மூலிகைத் தேநீராக
வாரம் இரண்டு நாட்கள் குடித்து  வர
நலமுடன் நோய் தொற்று இன்றி வாழ முடியும்
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை காய்ச்சல் இருந்தாலும் சரி காய்ச்சல் வராமல் தொற்றாமல் தடுக்கவும் சரி இந்த மருந்தைப் பயன்படுத்தி நலமடையலாம்.

No comments:

Post a Comment