Wednesday, 18 March 2020

புங்கம் பட்டைக் கசாயம்

நரம்பு நோய்கள் - குறிப்பாக பக்கவாதம் ஏற்படும்போது, மூளையில் இருந்து வர வேண்டிய தகவல்கள் மூளையின் செயல் இழப்பினால் அல்லது மூளையின் சில பகுதிகளில் செயல் இழப்பு ஏற்படும்போது,  வெகுவாகப் பாதிக்கப் படுகின்றது .
அதன் காரணமாக உடலுடைய இயக்கங்கள் குறைந்து போய் விடுகின்றன
முதுகுத் தண்டு  ஒடிந்து விட்டால் அதற்குக் கீழே  இருக்கும் நரம்புகள் முற்றிலுமாக செயல் இழந்து போகும் நிலை ஏற்படுகிறது .
கடுமையான சர்க்கரை நோய் காரணமாக நகர்த்த முடியாத அளவுக்கு தோள்பட்டை வலி ஏற்படுகிறது.
இவை அனைத்தையும் குறைக்கக் கூடிய நீக்கக் கூடிய மருந்து இது.
மிக வேகமாக நரம்புகளையும் மூளை செயல்பாடுகளையும் மாற்றக் கூடியது இந்த மருந்து

உடலில் இருக்கும் கழிவுகளை நீக்கி, மூளைக்கு புத்துணர்ச்சி அளித்து, நரம்பு நோய்களை  நீக்கக் கூடிய, பக்கவாத நோயின் தாக்கத்தைக் குறைத்து, உடலின் இயக்கத்தை மேம்படுத்தக் கூடிய கசாயம் இது.
மருந்து
சுத்தி செய்த கொடி வேலி .........  இரண்டு கிராம்
நாவல் கொட்டை.........  இரண்டு கிராம்
புங்கா மரப் பட்டை .........  இரண்டு கிராம்
திப்பிலி .........  இரண்டு கிராம்
கடுக்காய் .........  இரண்டு கிராம்
கருஞ்சீரகம் .........  இரண்டு கிராம்
ஆகிய ஆறு பொருட்களையும்.
கொடுத்துள்ள அளவின் படி எடுத்து.
 நானூறு மில்லி தண்ணீரில் போட்டு காய்ச்சி .
நூறு மில்லி கசாயமாக சுருக்கி.
இறக்கி வடி கட்டி,
உணவுக்கு சாப்பிடுவதற்கு முப்பது நிமிடங்களுக்கு முன்னதாகக்
குடித்து வர வேண்டும்.
நாள்தோறும் காலை இரவு என இரண்டு வேளைகள் குடிக்க வேண்டும்.
ஒவ்வொரு முறையும் புதிதாகக் கசாயம் போட்டு குடிக்க வேண்டும்.
இரத்த அழுத்தத்தால், இரத்தக் கட்டிகளால், மூளை செயல் திறன் குறைவினால், சர்க்கரை நோயின் தீவிரத்தால், காயங்களால், நேரடியாக மூளை பாதிக்கப் படும்போது போன்ற பல காரணங்களால் பக்க வாதம் ஏற்படுகிறது.

பக்கவாத நோயின் பக்க விளைவுகளான, உடலின் முழு இயக்கமோ, ஒரு பகுதி மட்டுமோ, ஒரு கால் ஒரு கை அல்லது விரல்களின் இயக்கமோ மிகுந்த அளவில் பாதிக்கப் படும்.
சில நேரங்களில் கை கால்களின் இயக்கங்கள் சரியானாலும் பேச்சு வராமல் போயி விடும்.
சில நேரங்களில் பேச்சு நன்றாகவரும், ஆனால் கை கால்களின் இயக்கம் பாதிக்கப் பட்டு விடும்.
இவை தொடர்பான பிரச்சினைகளைக் குறைக்க குணப் படுத்த இந்தக் கசாயம் மிகப் பெரிய மருந்தாக் உதவும்
சில வருடங்கள் அல்லது பல வருடங்கள் ஏன் பத்து பதினைந்து வருடங்களாகப் பக்கவாதத்தால் பாதிக்கப் பட்டவர்களைக் கூட   அந்த நோயின் தாக்கத்தைக் குறைத்து, உடலின் இயக்கங்களில் இருக்கும் பலவீனங்களை மாற்றி,
ஓரளவுக்கு அவர்களின் அன்றாட செயலைகளை அடுத்தவர்களின் உதவி இன்றி அவர்களே செய்து கொள்ள உதவிய மருந்து இது .
நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளில் மிகப் பெரிய மாற்றங்களை தரும் நல்ல மருந்து இது.

ஆண்களுக்கு
ஆண்களின் மிகப் பெரிய பிரச்சினையான எழுச்சி இன்மை பிரச்சினைக்கு தீர்வாக பிரச்சினையை நிரந்தரமாக நீக்கிக் கொள்ள உதவும் மருந்து இது
புகை மது மற்றும் போதை பிரச்சினைகளால் வரும் எழுச்சி இன்மை பிரச்சினைக்கும் தீர்வாக அமைகிறது இந்தக் கசாயம்.

பெண்களுக்கு
கருப்பை வீக்கம் என்ற அடினோமயோசிஸ் மிகப் பெரிய தொந்தரவு ஆகும்  மாத விடாய் கால்ங்களில் அதி உதிரப் போக்கு,
மேனோபாஸ் காலங்களில் ஏற்படும் அதி உதிரப் போக்கு
 ஒரு மாதத்தில் இரண்டு முறை மூன்று முறை உதிரப் போக்கு,
 சிலருக்கு மாதம் முழுவதுமே கடுமையான உதிரப் போக்கு இருப்பது ,
சில நேரங்களில் மூன்று மதங்கள் ஆறு மாதங்கள் தொடர்ந்து உதிரப் போக்கு இருந்து கருப்பை அறுவை சிகிச்சை ஒன்றே வழி என்ற நிலையிலும்,
அந்தப் பிரச்சினைகளையும் தீர்த்துக் குணம் தரும் நல்ல மருந்து இது.
படிப்பபடியாக கருப்பையில் இருக்கும் கழிவுகள் நீங்கி ,கருப்பை வீக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் நீங்கி, அடினோமயோசிஸ் சம்பந்தப் பட்ட பிரச்சினைகள் குறைந்து, அறுவை சிகிச்சை இல்லாமலேயே அதி உதிரப் போக்கு பிரச்சினையும் சரி செய்யும் மருந்து இது 
இதை ஒரு மருந்தாக மட்டுமே சாப்பிட்டு வர மேற்கூறிய பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு நலமுடன் வாழ முடியும் .

குறிப்பு
கொடி வேலியை சுத்தி செய்ய
கொடி வேலியை உடைத்து சுண்ணாம்பு தண்ணீரில் அல்லது பசுங்கோமியத்தில் பதினாறு நாட்கள் ஊற வைத்து எடுக்க வேண்டும்

No comments:

Post a Comment