Thursday, 17 May 2018

தட்டை

தேவையான பொருட்கள்:
அரிசிமாவு — (லேசாக சூடு செய்தது) 3 கப்
உளுந்துமாவு — 1/4 கப்
வெண்ணெய் — 25 கிராம்
கடலைபருப்பு (ஊற வைத்தது) — – 2 மேசைக்கரண்டி
கருவேப்பிலை — 1 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் – — 1 1 /2 மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள் — – 1/2 தேக்கரண்டி
உப்பு — தேவையான அளவு
எண்ணெய் — பொரிப்பதற்கு




செய்முறை:
எண்ணெய் தவிர மீதமுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு பாலிதீன் பேப்பர் எடுத்து மேலே எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
ஒரு உருண்டை எடுத்து பேப்பர் மேலே வைத்து, மெல்லியதாக வட்ட வடிவில் தட்டிக் கொள்ளவும்.
போர்க் வைத்து இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக அழுத்தி விடவும். (உப்பாமல் மொறுமொறுவென்று இருப்பதற்காக)
தட்டி வைத்திருக்கும் தட்டையை , சூடான எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.

No comments:

Post a Comment