தேவையானவை:
துருவிய கேரட் - ஒரு கப், ஓடு நீக்கி வெள்ளையாக துருவிய தேங்காய் - ஒரு கப், சர்க்கரை - 2 கப், நெய் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் நெய் விட்டு... கேரட், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். பாதி வதங்கிய பின் சர்க்கரை சேர்க்க... கலவை இளகும். இதை கை விடாது நன்கு கிளறி, கையில் ஒட்டாத பதத்துக்கு கலவை இறுகி வரும்போது இறக்கி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டுக்கு மாற்றி வில்லைகள் போடவும்.
No comments:
Post a Comment