Thursday, 17 May 2018

தேங்காய் வெல்ல உருண்டை

தேவையானவை: 
தேங்காய்த் துருவல் - ஒரு கப், வெல்லத்தூள் - கால் கப், ஏலக்காய்த்துள் - 2 சிட்டிகை, நெய் – சிறிதளவு, அரிசி மாவு - 2 டீஸ்பூன்.
செய்முறை:
பாத்திரத்தில் வெல்லம் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துக் கரைய விடவும். பிறகு வடிகட்டி மீண்டும் கரைசலை அடுப்பிலேற்றி உருட்டுப் பதம் வரும் வரை காய்ச்சவும். அதனுடன்
தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, சிறு தீயில்வைத்துக் கிளறவும். கலவை கெட்டியாகிப் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது, அரிசி மாவு சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியதும் கையில் சிறிதளவு நெய் தடவிக்கொண்டு சிறிய உருண்டைகளாக உருட்டவும். தேங்காய் வெல்ல உருண்டை ரெடி.

No comments:

Post a Comment