Thursday, 17 May 2018

கரூர் கரம்

தேவையானவை:
கரம் செய்ய:
பொரி - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
பீட்ரூட்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
தட்டை - 4
வறுத்த வேர்க்கடலை - 5 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்
சட்னி செய்ய:
தேங்காய்த்துருவல் - 5 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 7 (பெரியது)



செய்முறை:
சட்னிக்கு கொடுத்த இரண்டையும் மிக்ஸியில் சேர்த்து கெட்டியாக அரைத்து உப்பு கலந்து வைக்கவும். பச்சைமிளகாய் காரம் தூக்கலாக இருக்க வேண்டும்.
செய்முறை:
ஒரு பவுலில் தட்டையை நொறுக்கிக் கொள்ளவும். மற்றொரு பவுலில் பீட்ரூட் துருவலுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் எலுமிச்சைச்சாறு கலந்து வைக்கவும். பரிமாறும் போது இவற்றை பொரி வேர்க்கடலையுடன் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் கெட்டியாக அரைத்த சட்னி 2 டீஸ்பூன், நொறுக்கிய தட்டை, பீட்ரூட் கலவையை சேர்த்துக் கரண்டியால் கலக்கி விட்டால் ‘கரூர் கரம்’ ரெடி.
குறிப்பு:
கரம் செய்ய தேவையானவற்றையும் சட்னியையும் ஸ்நாக்ஸ் டயத்துக்கு முன்னரே ரெசி செய்து கொள்ளவும். பரிமாறும்போது ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கலந்து கொடுக்கவும். ஒட்டுமொத்தமாக தயார் செய்தால் நமர்த்துப் போய் சொதசொதப்பாகிவிடும்.

No comments:

Post a Comment