தேவையானவை:
உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து மசிக்கவும்)
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்
துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்
துருவிய பீட்ரூட் - ஒரு டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய
கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய புதினா - ஒரு டீஸ்பூன்
பொட்டுக்கடலைப் பொடி - கால் கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்
துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்
துருவிய பீட்ரூட் - ஒரு டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய
கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய புதினா - ஒரு டீஸ்பூன்
பொட்டுக்கடலைப் பொடி - கால் கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயை ஊற்றி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை லேசாக வதக்கவும். பிறகு, பச்சை மிளகாய், இஞ்சி, கேரட், பீட்ரூட் சேர்த்து, உப்பு போட்டு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்கி, ஆறவைக்கவும். இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லித்தழை, புதினா, பொட்டுக்கடலைப் பொடி, ஏலக்காய்த்தூள் (தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு) ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து நீள நீள கபாப் வடிவில் உருட்டவும். இவற்றை கபாப் குச்சிகளில் செருகவும். இவற்றின் மேல் சிறிதளவு எண்ணெயை பிரஷ் செய்து, 220 சென்டிகிரேட்டில் ப்ரீ ஹீட் செய்த `அவனில்’ வைத்து திருப்பித் திருப்பி விட்டு பொன்னிறமாகும் வரை பேக் செய்யவும். (20-லிருந்து
25 நிமிடங்கள் வரை).
25 நிமிடங்கள் வரை).
குறிப்பு: `அவனில்’ பேக் செய்யாமல் ஒரு நான் - ஸ்டிக் ஃப்ரை பானில் (fry pan) சிறிதளவு எண்ணெய் விட்டு, நன்றாக ஃப்ரை செய்தும் எடுக்கலாம்.
No comments:
Post a Comment