Thursday, 17 May 2018

ராகி லட்டு

தேவையான பொருட்கள்:
ராகி (கேழ்வரகு) மாவு – ஒரு கப்
சர்க்கரை – ஒரு கப்
நெய் – கால் கப்
சூடான பால் – 2 அல்லது 3 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
முந்திரி – 5




செய்முறை:
சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பவுடராக்கவும். வாணலியில் நெய் சேர்த்து முந்திரியை வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் ராகி மாவைச் சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போகும்வரை நன்கு வறுத்து ஆறவைக்கவும்.
மாவு சூடு ஆறியதும் அதில் சர்க்கரைப் பவுடர், வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், சூடான பால் சேர்த்து நன்கு கலக்கவும். கையில் நெய் தடவிக்கொண்டு, மாவை லட்டுகளாகப் பிடிக்கவும்.

No comments:

Post a Comment