Monday, 14 May 2018

அருகம்புல்

அருகம்புல் மருந்தாக சாப்பிடும் முறை
அருகம்புல் ...............  ஒருபிடி
மிளகு ..............  ஆறு எண்ணம்
சீரகம் ..........  அரைத்தேக்கரண்டி

சேர்த்து மிக்சியில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி கிடைக்கும் சாறு இரு நூறு மில்லி தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வரலாம் 
வேறு முறை
அருகம்புல் ...............  ஒருபிடி
மிளகு ..............  ஆறு எண்ணம்
சீரகம் ..........  அரைத்தேக்கரண்டி





ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி எட்டில் ஒருபங்கு கசாயமாக்கிக் பனை வெல்லம் சேர்த்துக் குடித்துவரலாம்
வேறு முறை
நன்றாகக் கழுவி சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி எடுத்த அருகம்புல்....  அரை கிலோ
சீரகம்  ......  ஐம்பது கிராம்
மிளகு   ..  இருபத்தி ஐந்து கிராம்

மூன்றையும் சேர்த்து நன்கு அரைத்து சூரணமாக்கி வைத்துக் கொண்டு நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் கலந்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி சூரணம் சாப்பிடலாம்
அல்லது
சூரணத்தில் ஒரு தேக்கரண்டி எடுத்து நான்கு கோப்பை தண்ணீரில்  போட்டுக் காய்ச்சி அரைக் கோப்பை தீநீராக்கி  பனை வெல்லம் சேர்த்து  குடிக்கலாம்

டீ காப்பி குடிப்பது போலக் குடிக்கலாம்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பனக்கற்கண்டு சேர்க்காமல் குடிக்கலாம் குழந்தைகளுக்கும் குடிக்கலாம்
தொடர்ந்து நாள்தோறும் ஒருவேளை ஒரு மண்டலம் குடித்து வர வேண்டும்

இவ்வாறு குடித்து வர
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் LDL வெளியேறும்
குடித்த பின் இரண்டு மணி நேரத்தில் மலம் முழுவதுமாக வெளியேறும் உடலில் உள்ள கழிவுகள் நீங்கும்
இரத்த அழுத்தம் சீராகும்
இதய நோய்கள் வராது
சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்
குதிகால் வலி எரிச்சல் கை தூக்க முடியாமை மூட்டு வலி அடிபட்ட வலி தசை வலி நரம்பு தொடர்பான வலி நீங்கும்
நோய்கள் அணுகாது
சிறுநீரகக் கோளாறுகள் சிறுநீரக கிறிஸ்டல் கல் சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல் சரியாகும்


கொழுப்பின் அளவு பராமரிக்கப் படும்
நினைவாற்றல் மேம்படும்
நோய் எதிர்ப்புத்தன்மை கூடும்
உடல் இளமையோடும் ஆரோக்கியத்தோடும் இருக்கும்

படை நமைச்சல் சொறி நீங்க அருகம்புல்  கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து போட்டுக் குளித்து வர சரியாகும்
அருகம்புல் நாட்டு ரோசா பூக்கள் சேர்த்து அரைத்துக் கிடைக்கும் விழுதைப் போட்டு வர முகப் பரு கரும்புள்ளி தேமல் பழுத்த முகப் பரு முழுமையாக சரியாகும்
சித்தா மருந்துக் கடைகளில் கிடைக்கும் அருகன் தைலம் தலைக்கு தேய்த்து வர பொடுகு சரியாகும் கால் இடுக்குகள் அக்குள்களில் வரும்  புண்கள் ஆறும்
கண் நோய் உள்ளவர்கள் அருகம்புல்லுடன் சம அளவு மஞ்கள் சேர்த்து அரைத்து கிடைக்கும் விழுதை மெல்லிய துணியில் பூசி மூடிய கண்ணின் மேல் போட்டு வைத்தால் கண் எரிச்சல் அடங்கும்

No comments:

Post a Comment