நமச்சிவாய!!
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருந்தக்கூலி தரும்!!
திருவள்ளுவர் ஐயாவின் இத்திருக்குறளின் பொருளாக நாம் விளங்கியது தெய்வத்தால் முடியாத காரியம் என்று இருந்தாலும் தான் முயற்சி செய்தால் நடத்திமுடிக்க முடியும் என்பதாகும்..
ஆனால் சற்று ஆழ்ந்து சிந்தித்தோமானால் பரம்பொருள் தத்துவத்தோடு இணைந்து பொருந்திப்பார்த்தால் வேறு அர்த்தமே தரக்கூடிய நம்பிக்கை அளிக்கக்கூடிய நற்சிந்தனை முத்தாக விளங்கக்கூடிய தத்துவம் பின்வருவன..
🙏 நாம் எந்த ஒரு செயலை செய்தாலும்
ஏதேனும் தடை ஏற்பட்டால் மனம் தெய்வம் துணை நிற்கவில்லையே என்று சோர்ந்து போய்விடும் நிலையில், துவண்டுவிடாமல் மனம் கோணவிடாமல் தெய்வம் எப்போதும் துணைநிற்கும் நடக்கவேண்டிய நன்மை நடந்தே தீரும் என்று முயன்று மனதை தெய்வத்தின்பால் நிலை நிறுத்தினால் *அந்த முயற்சியின் பலனாக நிச்சயம் நாம் செய்யும் செயலுக்கு கூலி கிடைக்கும்🙏
தெய்வத்தால் ஆகாது என மனம் எண்ணும்போதெல்லாம் முயற்சி செய்து மனதை அலையவிடாமல் திசை திரும்பவிடாமல் ஓரிறையின்கண் நிறுத்தினால் நாம் பொய்யாக (தெய்வம் துணைநிற்கவில்லையே என்று நினைத்த நம் மெய் வருந்துமளவுக்கு) கூலி கிடைக்கும்...
தன்முனைப்பாக எச்செயலையும் செய்யலாகாது... மனச்சோர்வை முயன்று விலக்கி ஓரிறையை முழுதுமாக முன்னிருத்தி எச்செயலை செய்தாலும் அதற்கான நற்கூலி உண்டு என்ற அறிய தத்துவமாக இக்குறளின் பொருள் விளங்குகிறது..
அவனருளாளே அவன்தாள் வணங்கி
நற்றுணையாவது நமச்சிவாயவே!!!

No comments:
Post a Comment