சைவ சித்தாந்தத்தைக் கற்றறியாது இலிங்கத்திற்குப் பொருள் கூற இயலாது.
சொரூப நிலையிலிருந்து உயிரின்பால் தொடக்குக் கொண்டு ஐந்தொழிலாற்ற சிவபெருமான் தடத்த நிலையில் எடுத்த தூய உருவ நிலையே இன்று நாம் காணும் மகேசுவர மூர்த்தங்களாகும்.
ஒரு பொருள் சொரூபத்திலிருந்து வேற்றொரு உருவத்திற்குப் பரிணாமம் பெற்று வருமேயானால் சொரூபம் அழிந்து விடும். இது பரிணாம கோட்பாட்டின் இலக்கணமாகும்.
சொரூப நிலையிலிருந்து உருவ நிலைக்கு விரிவடைய இடையே சிவபெருமான் எடுப்பதே அருவுருவ நிலையாகிய இலிங்கமாகும். ஆகையால் சிவபெருமானுக்கு அருவுருவத் திருமேனி என்பது ஒரு காரணக் காரிய நிலையாகும். விரிவடையும் தன்மையால் (பரிணாம கோட்பாட்டிற்கு முரணாக) காரணப் பொருளான அருவம் ஒழியாது அருவுருவம் தோன்றும்.
அருவம் காரணமாகவும் அதிலிருந்து விரித்தியடைந்த நிலையே அருவுருவ நிலையான இலிங்கமாகும். அருவுரும் காரணமாகி அதிலிருந்து விரித்தியாகியதே மகேசுவர மூர்த்தங்கள் குறிக்கும் திருமேனிகளாகும்.
இதனைச் சேக்கிழார் பெருமான் சாக்கியர் புராணத்தில் கீழ்காணுமாறு விளக்குகின்றார்:
" காணாத அருவினுக்கும் உருவினுக்குங் காரணமாய்
நீணாக மணிந்தார்க்கு நிகழ்குறியாஞ் சிவலிங்கம்
நாணாது நேடியமால் நான்முகனுங் காணநடுச்
சேணாருந் தழற்பிழம்பாய்த் தோன்றியது தெளிந்தாராய் "
(சாக்கியர் புராணம் : 12 : 34 : 7)
' கண்ணுக்குப் புலப்படாத அருவத் திருமேனிக்கும், கண்ணுக்குப் புலப்படும் உருவத் திருமேனிக்கும் மூலமான இருப்பிடமாய், நீண்ட பாம்பை அணிந்த சிவபெருமானை அறிந்து வழிபடுவதற்குச் சிறந்த அடையாளமாய குறியாய் விளங்கும் சிவலிங்கம், நாணமில்லாது தேடிய திருமாலும் நான்முகனும் காணுமாறு, அருளால் அவர்கள் நடுவே விண்ணையும் கீழ் உலகத்தையும் அளாவும், அனல் பிழம்புத் தூணாகித் தோன்றும் வடிவமே இலிங்க வடிவம் ஆகும் எனும் தெளிவு கொண்டவராய்....’
(தருமை ஆதின நூல் பொழிப்புரை)
ஆகையால் சொருபத்திலிருந்து உருவத் திருமேனி எடுப்பதற்கு இடையே காரணமாய் அமைவதே அருவுருவத் திருமேனியாகிய இலிங்கமாகும் என்பது சேக்கிழார் பெருமானின் விளக்கமாகும். இவ்வாறான விளக்கத்தை கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே தமிழ்ச் சைவர் தெளிவாக எடுத்துரைத்து விட்டனர்.
தமிழில் கற்றறியாத மேற்கத்தியர் சமசுகிரத மொழியில் இயற்றப்பட்ட வடமொழி புராணங்களில் ‘குறியீடு’ என்னும் விளக்கத்தை தவறாகப் புரிந்து கொண்டு தவறான விளக்கத்தைக் கற்பித்துக் கொண்டனர். அது மேற்கத்தியர் செய்த தவறு. நாமும் அத்தகைய தவற்றைச் செய்யாதிருக்கவே இவ்விளக்கம் பதிவேற்றப்படுகின்றது.

No comments:
Post a Comment