Friday, 8 May 2020

மனம் அலை பாய்தல் - ஸ்ரீரமண மகரிஷி

ரமண மகரிஷியிடம் பக்தர் ஒருவர் தனது சந்தேகத்தைக் கேட்க வந்தார்.

அப்பொழுது ரமணர் அணில் குட்டிகள் சிலவற்றிற்கு பஞ்சால் நனைத்து பால் புகட்டிக்கொண்டிருந்தார்...

அவற்றின் வயிறு நிறைந்தவுடன் ஒரு கூடையில் பஞ்சை நிரப்பி மெத்தென்று அதன் மேல் படுக்க வைத்தார்...

சற்றுநேரம் படுத்த குட்டிகளில் ஒன்று குதித்து அங்கும் இங்கும் ஓடியது...

அதை மறுபடியும் பிடித்துப் போட்டார்...


உடனே மற்றொன்று ஓட அதையும் பிடித்துப் போட்டார்...

இப்படி ஒவ்வொன்றாக ஓட ஒருவாறாக எல்லாவற்றையும் பிடித்துப் போட்டு கூடையை மூடினார்...

எல்லாம் அமைதியாக தூங்கின...

வந்த பக்தர் இதையெல்லாம் ஆச்சரியத்துடன் பார்த்தபடி ஸ்வாமி என் மனதை எப்படியாவது அடக்க ஆசைப்படுகிறேன்...

அங்கும் - இங்கும் அலை பாய்கிறது...

என் மனம் தானே தவறு என்று தெரிந்தாலும் அடக்க முடியவில்லையே...

தயவு செய்து அடக்க வழி சொல்லுங்கள் என்று கேட்டார்...

இந்தக் குட்டிகளின் அம்மாவை ஓர் பூனை சாப்பிட்டு விட்டது. இவைகளும் அதைப் பார்த்தன...

தாயில்லாத அணில் குட்டிகள் பசியால் துடிக்காமல் இருக்க பாலும்,

தூங்குவதற்கு வசதியாக அம்மா மடி போல் பஞ்சு போட்டு நான் படுக்க வைத்தாலும்,

அவை அதை மீறி வெளியே ஓடுகின்றன...

வெளியில் பூனை என்ற ஆபத்து இருந்தாலும் அவை வெளியே ஓடுவது போலத்தான் நம் மனதும்,

அது திரும்ப திரும்ப அலை பாயும்...

நாம்தான் தியானம் என்ற கட்டுப்பாட்டை திரும்ப திரும்ப சொல்லி,

நம் மனதை கூடையில் அடைக்க வேண்டும்...

பழக பழக அணில்கள் பஞ்சுக் கூடையை தன்னுடைய இருப்பிடமாக அமைத்து சந்தோஷமாக வாழும் பிறகு கூடையை மூடக்கூட தேவை இருக்காது...

அதே போல் உன்னுடைய மனமும் ஆழ்ந்த தியானத்தை பழக்கிக் கொண்டால்,

பின்னர் அது உன் கட்டுப்பாட்டில் இருக்கும்...

எங்கும் அலை பாயாது என்று கூறினார்.

No comments:

Post a Comment