Friday, 8 May 2020

நீங்கள் தினமும் 108, 1008,10008, 100008,1000008 முறை

*திரு ஐந்தெழுத்து என்னும் பஞ்சாட்சரம் = ந + ம + சி + வா + ய

* திரு ஆறெழுத்து என்னும் சடாட்சரம் = ச + ர + வ + ண + ப + வ

*திரு எட்டெழுத்து என்னும்  அஷ்டாட்சரம்
ஓம் + ந மோ + நா ரா ய ணா ய

நாமம் சொல்லி ஜபம் செய்தீர்கள் என்றால் அந்தமணி நேரங்களில்

1. நீங்கள் மௌன விரதம் இருப்பதாகிறது .

2. நீங்கள் இறைவனுக்கு சம்மதமாக வாழ்ந்ததாகிறது .

3. ஹரிச்சந்திரன் போல் உண்மையை பேசியதாகிறது.

4.  நீங்கள் மரணம் என்கிற பரிட்சைக்குத் தயார் செய்தீர்கள் என்று ஆகிறது.


5. பூஜை செய்ததாகிறது.

6. உங்கள் பாவத்தை போக்கி கொள்ள பிராயசித்தம் செய்ததாகிறது.

7. இறைவனை நோக்கி சில படிகள் முன்னேறியதாகிறது .

8. வேதம் ஓதுவதாகிறது .

9. பெரியோர்கள் சொல் பேச்சு கேட்டதாகிறது .

10. நீங்கள் பக்தராகிறீர்கள் .

11. நீங்கள் மஹான்களால் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள் .

12. உங்கள் புலன்களை ஜெயித்தவர்கள் ஆகிறீர்கள்.

13. தியானம் செய்தவர் ஆகிறீர்கள் .

14. சமாதியில் உள்ளவர் ஆகிறீர்கள் .

15. ஒழுக்கமானவனாக ஆகிவிடுகிறீர்கள் .

16. பாசிட்டிவ்வாக இருக்கிறீர்கள் .

17. உங்கள் போலித்தனமான வாழ்க்கையில் இருந்து விடுதலை அடைகிறீர்கள் .

18. இறைவன் உங்கள் கை யை பிடித்துக்கொண்டு இருக்கிறான் .

19. நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள் .

20. உங்களுக்கு தெரியாமல் உங்களை கோவிந்தன் ரசித்துக்கொண்டு இருக்கிறான் .

21.மஹான்கள் வாயில் வந்த நாமத்தை நாமும் சொல்வதால் அவர்களுடைய பிரசாதத்தை உண்டவர்கள் ஆகிறீர்கள் .

22. இந்த நேரத்தினால் இறைவன் நீங்கள் செய்த தவறுகளை மறந்து நிற்கிறான் .

23. யாகம் செய்தவர் ஆகிறீர்கள் .

24. பகவானையே நீங்கள் கடனாளி ஆக்குகிறீர்கள்.

25. நீங்கள் கங்கையில் குளித்தவர் ஆகிறீர்கள் .

26.அந்த நேரத்தில்  யமுனையில் குளித்தவர் ஆகிறீர்கள் .

27. அந்த  நேரம் காவிரியில் குளித்தவர் ஆகிறீர்கள்.

28. அந்த நேரம் பிருந்தாவன மண்ணில் உருண்டு பிரண்டவர் ஆகிறீர்கள் .

29. அந்த நேரம் கோடி கோடியான புண்யத்தை சம்பாதிகிறீர்கள்.

30. எல்லாவற்றிர்க்கும் மேல் நாமம் வேறு இல்லை பகவான் வேறு இல்லை. அந்த மணி நேரம் இறைவனே உங்கள் நாக்கில் எச்சில் பட்டு கட்டுண்டு இருக்கிறான்.

No comments:

Post a Comment