Friday, 8 May 2020

திருச்சிற்றம்பலம்

அருள்தரும் திருஆரூர் அல்லியம்பூங்கோதை அம்மை உடனுறை அருள்மிகு புற்றிடங்கொண்ட நாதாப் பெருமான்  திருமலரடிகள் போற்றி போற்றி!!

எம்பிரான் விறன்மிண்ட நாயனார் திருமலரடிகள் போற்றி போற்றி

ஹரஹர நமப் பார்வதிபதயே!!
ஹரஹர மகாதேவா!!

தென்னாடுடைய சிவனே போற்றி!!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!



ஏகம்பத்துறை எந்தாய் போற்றி!!
பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி!!

தென்தில்லை மன்றினுல் ஆடி போற்றி!!
இன்று எனக்கு ஆரமுது ஆனாய் போற்றி!!

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!!
சீரார் திருவையாறா போற்றி!!

அண்ணாமலை மலை எம் அண்ணா போற்றி!!
கண்ணார் அமுதக் கடலே போற்றி!!

பராய்த்துறை மேவி பரனே போற்றி!!
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி!!

ஆடக மதுரை அரசே போற்றி!!
கூடல் இலங்கு குருமணி போற்றி!!

சீரார் பெருந்துறை நம் தேவனடி போற்றி!!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!!

காவாய்கனகத் திரளே போற்றி!!!
கயிலை மலையானே போற்றி போற்றி !!!

பெருமான் திருவடிக்கு தேவாரம்

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பெருமான் திருவடிக்கு திருவாசம் எனும் தேன்

உடையாள் உன்றன் நடுவிருக்கும்
    உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
    இருப்ப தானால் அடியேன்உன்
அடியார் நடுவுள் இருக்கும்
    அருளைப் புரியாய் பொன்னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து
    முடியும் வண்ணம் முன்னின்றே

பெருமான் திருவடிக்கு திருவிசைப்பா

நீறணி பவளக் குன்றமே நின்ற
நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே வேறணி புவன போகமே யோக வெள்ளமே மேருவில் வீரா ஆறணி சடைஎம் அற்புதக் கூத்தா அம்பொன்செய் அம்பலத் தரசே ஏறணி கொடிஎம் ஈசனே உன்னைத் தொண்டனேன் இசையுமா றிசைய.

பெருமான் திருவடிக்கு திருப்பல்லாண்டு

மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட்  செய்மின் குழாம்புகுந் தண்டங்கடந்த பொருள்அள வில்லதோர்
ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே
பல்லாண்டு கூறுதுமே.

பெருமான் திருவடிக்கு பெரியபுராணம்

ஞால முய்ய நாமுய்ய  நம்பி சைவ நன்னெறியின் சீல முய்யத் திருத்தொண்டத்  தொகைமுன் பாடச் செழுமறைகள் ஓல மிடவும் உணர்வரியார்  அடியா ருடனாம் உளதென்றால் ஆலம் அமுது செய்தபிரான்
அடியார் பெருமை அறிந்தார்ஆர்.

தென்னாடுடைய சிவனே போற்றி!!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி!!
பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி!!

தென்தில்லை மன்றினுல் ஆடி போற்றி!!
இன்று எனக்கு ஆரமுது ஆனாய் போற்றி!!

காவாய் கனகத் திரளே போற்றி!! கயிலைமலையானே போற்றி போற்றி!!

அருள்தரும் திருஆரூர் அல்லியம்பூங்கோதை அம்மை உடனுறை அருள்மிகு புற்றிடங்கொண்ட நாதாப் பெருமான்  திருமலரடிகள் போற்றி போற்றி!!

No comments:

Post a Comment