மதத்தில் புரட்சி செய்த மஹான் ஸ்ரீ ராமானுஜர் . ஸ்ரீ ராமானுஜர் உதித்து இருக்காவிட்டால் ஸ்ரீ வைணவ தர்மத்தை காப்பாற்ற முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ராமானுஜர் காஞ்சிபுரம் அருகில் ஸ்ரீ பெரும்புதூரில் 1017 ஆம் ஆண்டு திருவாதிரை நட்சத்திர நாளன்று பிறந்தார். இவர் லட்சுமணன், பலராமன் ஆக அவதரித்த ஆதிசேஷன் தான் கலி யுகத்தில் ஸ்ரீ ராமானுஜர் ஆக பிறந்தார். ராமானுஜர் ஆதி சேஷன் அவதாரம்.ராமானுஜர் அசூரி கேசவ சோமயாஜி மற்றும் காந்திமதி அம்மையார் பெற்றோர்களுக்கு மகனாக பிறந்தார். இவர் ஆதிசேஷன் அம்சமாக பிறந்ததால் இளையாழ்வார் என்று அழைக்கப்பட்டார். ராமானுஜர் என்றால் ராமனுக்கு தம்பி என்று அர்த்தம். ஆக ஸ்ரீ ராமானுஜர் உரிய வயதில் தன் தந்தையிடம் வேதங்கள் கற்று கொண்டார். அதன் பிறகு அத்வைத வழியில் இருந்த யாதவ பிரகாசரிடம் கல்வி கற்க சேர்ந்தார். அவர் ராமானுஜரின் வேதாந்த அறிவு கண்டு மலைத்து போய், இந்த ராமானுஜன் தன் வழிமுறைக்கு மாற்றாக பரம்பொருளுக்கு விளக்கம் அளிப்பதை ஏற்றுக்கொள்ளாதவாராய் ஸ்ரீ ராமானுஜரை கொல்ல சதி திட்டம் தீட்டியதை தன் உடன் பயிலும் சித்தி மகன் கோவிந்தன் துணையுடன் அறிந்து, ஸ்ரீ ராமானுஜர் உயிர் தப்பி எம்பெருமான் மற்றும் தாயாரின் வேட்டுவ வேடத்தில் வந்து உதவிய காரணத்தால் காஞ்சி மாநகர் வந்து அடைகிறார். பின்னர் யாதவபிரகாசர் கங்கை கரையில் இருந்து கஞ்சிபுரம் வந்து பார்க்கையில் அங்கு ஸ்ரீ ராமானுஜர் இருப்பது கண்டு திகைத்து போய் நிற்கிறார். பின்னர், யாதவ பிரகாசர் மனம் வருந்தி திருத்தம் பெறுகிறார். அந்நாட்களில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுடன் நேரடியாக பேசி வந்த மிகப்பெரிய மஹானாக விளங்கி வந்தவர் திருகச்சி நம்பிகள். அவர்தான் ஸ்ரீ ராமானுஜருக்கு முதல் குரு ஆவார். ஸ்ரீ ராமானுஜர் திருக்கச்சி நம்பிகளை தன் வீட்டுக்கு வந்து எழுந்தருள வேண்டும் என்று வேண்டி கேட்டு
கொண்டதின் பேரில் திரு கச்சி நமபிகள் ஸ்ரீ ராமானுஜர் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வருகை தருகிறார். ஸ்ரீ ராமானுஜரின் மனைவி தஞ்சமாம்பாள் வரவேற்று அமுது படைத்து இலையை தூக்கி வீசி எறிந்து விட்டு, திருக்கச்சி நம்பி அமர்ந்து இருந்த இடத்தை நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்து கொண்டு இருக்கும் நேரத்தில் ராமானுஜர் தன் இல்லம் வந்து தன் மனைவியிடம் " ஆச்சாரியார் வருவதாக சொல்லி இருந்தார் "என்று கேட்ட மாத்திரத்தில் "அவர் அமுது உண்டு சென்று விட்டார் " அதனால் தரை முழுகி கொண்டு உள்ளேன் என்று தன் மனைவி கூறியவுடன் சினத்தின் உச்சிக்கே ஸ்ரீ ராமானுஜர் சென்று விடுகிறார். என்ன காரணம் என்றால் திருக்கச்சி நம்பிகள் அமுது உண்டபிறகு "அவர் உண்ட வாழை இலையில் தானும் உண்ண ஆசைப்பட்டு இருந்தார். அதை தன் மனைவி கெடுத்து விட்டதை நினைத்து சினம் கொண்டார்". ஸ்ரீ ராமானுஜர் ரோ பிராமணர் ஆனால் திருக்கச்சி நம்பிகளோ செட்டியார்(வைசியர் ) வகுப்பை சேர்ந்தவர், அவர் சாப்பிட்ட எச்சி இலையில் தான் சாப்பிட நினைத்த ஸ்ரீ ராமானுஜரின் குருபக்தியை நினைக்கும்போது கண்களில் நீர் பெருக்கு ஏற்படுகிறது. அதுதான் ஸ்ரீ ராமானுஜர். பின்னர் பெரிய நம்பிகளை குருவாக ஏற்றுக்கொண்டு பஞ்ச சம்ஸ்காரம்(சங்கு, சக்கரம் முத்திரைகளை தோளில் பெற்று கொள்வது ) பெற்று கொள்கிறார்.பெரிய நமபிகள் காஞ்சிபுரத்தில் குடி இருக்கும்போது ஸ்ரீ ராமானுஜர் மனைவியும், பெரியநம்பி மனைவியும் நீர் இரைத்து கொண்டு உள்ளபோது பெரிய நம்பி மனைவியின் கயிற்று தலைப்பில் இருந்து நீர் ராமானுஜர் மனைவி குடத்தில் விழுகிறது. இதனை பார்த்து வெகுண்டு தன் குடத்து நீரை பூராவும் கொட்டி விட்டு கோபத்துடன் சினந்து கொள்கிறார். இதனை கேள்விப்பட்ட ஸ்ரீ ராமானுஜர் தன் குருவின் மனைவியிடம் இப்படியா? அபசாரம் செய்வது என்று மனம் வேதனைபட்டு, தன் மனைவியை விட்டு பிரிந்து துறவு பூணுகிறார். ஸ்ரீ ஆளவந்தார் என்ற ஆச்சாரியார் நாதமுனி பரம்பரையில் வந்தவர். அவர் ஸ்ரீ ராமானுஜரை காண ஆவல் கொண்டு ஸ்ரீ ரங்கத்துக்கு வர சொல்கிறார். ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ ரங்கத்தை நோக்கி விரைகிறார். ஆனாலும், அளவந்தாரின் ஆன்மா பிரிந்து விடுகிறது.அப்போது ஆளவந்தாரின் மூன்று விரல்கள் மட்டும் மடிந்து உள்ளன. ஸ்ரீராமானுஜர் மூன்று பிரமாணங்களை கூறுகிறார் . ஸ்ரீ ராமானுஜர் பிராமணங்களை சொல்ல ஆளவந்தாரின் மூன்று விரல்களும் நிமிர்கின்றன.அதன் பிறகு தான் ஏற்றுக்கொண்ட மூன்று பிராமணங்களை தன் வாழ்நாளில் செய்து முடிக்கிறார். பரம்பொருளை பற்றி மேலும் தெளிவு பெற திருக்கோஷ்டி நம்பிகளை குருவாக ஏற்றுக்கொண்டு ஸ்ரீ ரங்கத்தில் இருந்து 17 முறை திருக்கோஷ்டியூருக்கு அலைந்து திரிந்தும் விமோசனம் கிடைக்கவில்லை. மனம் தளராத ராமானுஜர் 18 வது முறை சென்று துவயமந்திரமும் அதற்கான விளக்கமும் பெறுகிறார். அவர் மந்திரம் சொல்லி தரும்போது சில எச்சரிக்கையை செய்கிறார் திருக்கோஷ்டியூர் நம்பி . குருவிடம் மந்திரத்தை பெற்றவுடன் நேராக திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில் கோபுரம் ஏறி சென்று , அங்கு கூடிய அனைத்து மக்களுக்கும் "ஓம் நமோ நாராயணாய ' என்று முழக்கம் செய்து, எல்லோரும் மந்திர முழக்கம் செய்கிறார்கள் .குரு மிக கடுமையாக கடிந்து கொள்கிறார். நான் சொன்னபடி இந்த மந்திரத்தை வெளியில் சொன்னால் உனக்கு நரகம் கிடைக்கும் என்று சொன்னேன் . அதன் படி வெளியில் சொன்ன உனக்கு நரகம் கிடைக்குமே என்று குரு சொன்னபோது கோடிக்கணக்கான பேருக்கு சொர்க்கம் எனும் பரமபதம் கிடைக்கும் போது என் ஒருவனுக்கு நரகம் கிடைத்தால் பரவாயில்லை என்று ராமானுஜர் மறுமொழி கூறியபோது குரு நெகிழ்ச்சி அடைந்து ஸ்ரீ ராமானுஜரை ஆரத்தழுவி கொள்கிறார். அது தான் ஸ்ரீ ராமானுஜர். ஸ்ரீ ராமானுஜர் பிராமணர் அல்லாத உறங்காவில்லி தாசரை சிஷ்யனாக ஏற்றுக்கொள்கிறார். அத்துடன் பிராமணர் அல்லாத திருகச்சி நம்பிகளை குருவாக ஏற்றுகொள்கிறார். இதில் இருந்து அவரின் தர்ம சிந்தனையை நாம் புரிந்து கொள்ள முடியும். இதனால் மதத்தில் புரட்சி செய்த மகான் என்கிறோம். அத்துடன் பிராமணர் அல்லாதோரை "திருகுலத்தார்" என்று அழைத்து, அவர்களுக்கும் சங்கு சக்ர முத்திரை வைத்து கொள்ளவும். பரம்பொருள் நாராயணனுக்கு தாசனாக வரித்து கொள்ளவும், துவைய மந்திரத்தை பெறும் உரிமையும் அளித்தார். பரம்பொருள் ஒருவரே அவர்தான் லட்சுமி நாராயணன் என்ற கொள்கையை வலியுறுத்தும் விசிட்டாத்துவத்தை தந்தார் . குருவை சீடனாக்கிய மஹான் ஸ்ரீ ராமானுஜர். ராமானுஜரின் குரு யாதவ பிரகாசர் மனம் திருந்தி ஸ்ரீ ராமானுஜரை தஞ்சம் அடைந்து ஸ்ரீ வைணவர் ஆனார். அவரை ஏற்று கோவிந்த ஜீயர் என்ற நாமம் கொடுத்து, தன் சீடர் ஆக்கி கொண்டார். இதுவே ராமானுஜரின் சிறப்பு. திருந்தி பணி கொண்டார் ஸ்ரீ ராமானுஜர்.குருவையே சீடர் ஆக்கி கொண்ட பெருமை நம் ராமாநுஜரையே சாரும். அவர் கீதைக்கு ஸ்ரீ பாஷ்யம் செய்தார். அத்துடன் நம்மாழ்வாருக்கு மிகப்பெரிய ஏற்றம் அளித்தார். நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டி பகவான் உற்சவத்தில் முன் செல்ல பகவான் உற்சவத்தில் சம்ஸ்கிருத மந்திரங்களை சொல்வோர் பின்னே செல்ல ஏற்பாடு செய்தார் . இதில் இருந்து நாலாயிர திவ்விய பிரபந்ததுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பது புரியும். தமிழுக்கு எவ்வளவு பெரிய ஏற்றம் வழங்கியுள்ளார் என்பது புரியும் . அவர் தமிழ் நீச பாஷை என்ற கொள்கையை புறம் தள்ளினார். இந்தியா முழுவதும் திருப்பாவை இன்று ஓதப்பட்டு வருவதற்கு காரணம் ஸ்ரீ ராமானுஜர் தான் காரணம். ஸ்ரீ ராமானுஜருக்கு திருப்பாவை ஜீயர் என்ற பெயரும் உண்டு. அத்துடன் ஸ்ரீ ராமானுஜர் வழியை பின்பற்றி வடநாட்டில் ராமானந்தர், கபிர்தஸார், ரவி தாசர் தோன்றி பக்தி மார்க்கத்துக்கு வழி கோலினர்.ஸ்ரீ வைணவம் அனைத்து மக்களுக்கும் ஆனது என்று பொதுமை படுத்தினார் ஸ்ரீ ராமானுஜர் . அத்துடன் மிகப்பெரிய பேரரசு ஆன சோழ அரசன் குலோத்துங்க சோழன் இவரை கொல்ல துணிந்தான். ஆனாலும், அந்த கோடுங்கோலனை எதிர்கொண்டார். அப்போது ஸ்ரீ ரங்கத்தில் இருந்து திருநாராயணபுரம் சென்று அங்கு ஏரி அமைத்து சமூக தொண்டும் செய்ய தவறவில்லை.காந்தியாரும் ஸ்ரீ ராமானுஜர் வழியை பின்பற்றியே தாழ்த்தப்பட்டவர்களை "ஹரி ஜனம்" என்று அழைத்தார். ஆகவே பக்தி இயங்கங்கள் தோன்றவும், சமூக சீர்திருத்தங்கள் மேலோங்கவும் ஸ்ரீ ராமானுஜரே முன்னோடியாக விளங்கினார். ஆகவே, ராமானுஜர் வழியில் நாமும் நடைபோடுவோம். பக்தியை பரப்புவோம். எவ்வளவு இடர் வரினும் நாராயணனன் ஒருவனுக்கே தாசன் ஆக இருப்போம். ஸ்ரீ ராமானுஜர் வழியில் முழுவதுமாக நம்மை சேர்ந்தவர்களை ஆற்றுப்படுத்துவோம். நாராயணனுக்கு இணை இல்லை என்போம்.ஸ்ரீ மன் நாராயணனே கதி என்று கிடப்போம். இன்று ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி தினம். உய்ய ஒரே வழி, உடையவர் திருவடி.

No comments:
Post a Comment