Friday, 8 May 2020

ராமானுஜர்

நிச்சயம் அவர் ஒரு மகான், சைவத்துக்கு ஆதிசங்கரர் போல வைணவத்துக்கு அவர் செய்திருக்கும் சேவை பல ஆயிரம் வருடங்களுக்கு போதுமானது.

அந்த காலம் கொஞ்சம் குழப்பமானது, ராஜேந்திர சோழனுக்கு பின் சோழ அரசு வலுவிழந்திருந்தது. சைவத்தின் காவலான சோழ அரசு வீழும் பொழுது பவுத்தம் மறுபடி தளைக்க முழு பலத்தோடு முயன்றுகொண்டிருந்தது

பவுத்தம் இக்கால கிறிஸ்தவ மிஷனரிகளின் முன்னோடி, நிலையற்ற அரசும் குழப்பமான மக்களும் நிறைந்த இடத்தில் அது கால்பதிக்கும்,

அடிதட்டு மக்களை சாதி, சமூக அமைப்பினை சொல்லி மெல்ல மடைமாற்றும்,

சாதி இல்லை, கல்வி உண்டு, சம உரிமை உண்டு, பலி இல்லை, கடவுள் ஒருவரே, புத்தன் காட்டியதே வழி, பார் அமைதி அமைதி, போர் இல்லை சண்டை இல்லை, எல்லோரும் சமம் என மெல்ல வலைவிரிக்கும்

மெல்ல வலைவிரித்து புத்த அரசின் ஆட்சியின் ஒரு பகுதியாக அந்த பகுதியினை இணைக்கும், இல்லை உள்நாட்டில் குழப்பம் விளைவித்து முழு புத்தநாட்டுக்கு வலுசேர்க்கும், அது அரசியல்

இன்று கிறிஸ்த்தவம் செய்வதை அன்று பவுத்தம் செய்தது

இதனை மூவேந்தர்களும் அடக்கி ஒடுக்கி பவுத்தர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருந்தனர், ஆனால் மெல்ல தலையெடுக்க முயன்றது பவுத்தம்

அப்பொழுதுதான் அந்த மகான் உதித்தார், திருப்பெரும்புதூரில் பிறந்தவர் ஒரு கட்டத்தில் துறவுதான் தன் வாழ்க்கை என முடிவு செய்து தனக்குரிய குருவினை சந்தித்தார்

யாதவ பிரகாசர் எனும் அந்த குரு நல்ல குருவே ஆனால் அவரின் அத்வைத கொள்கை இவருக்கு சரியாக படவில்லை பின் நாதமுனி என்பவரை சரணடைந்து தன் சந்தேகங்களை தீர்த்து, துவைதம் அத்வைதம் எனும் இரு கொள்கைகளை தாண்டி விஷிட்டாத்வைதம் எனும் ஒரு தத்துவத்தை சொன்னார்

துவைதம், அத்துவைதம் ஆகிய இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து நமக்கு அவர் அளித்த பொக்கிஷம் தான் விசிட்டாத்துவைதம். உயிர்க்கும், உயிரற்றவைகளுக்கும், உலகுக்கும் உள்ளுரைப் பொருளாக உள்ளவன் நாராயணனே என்னும் தத்துவமே விசிட்டாத்துவைதம்.

ஜீவாத்மா, பரமாத்மா, உலக பொருட்கள், இயங்குபவன் இயங்காதவன, கண்ணுக்கு தெரிவது தெரியாதது என எங்கும் நீக்கமற பகவான் நிறைந்திருக்கின்றான் என்பது விசிட்டாத்துவைதம், கீதை சொல்வதும் இதனையேதான்

(ஆன்மா பரமாத்மா ஒன்றென அறிவிப்பது அத்துவைதம். ஆன்மா பரமாத்மா வேறென அறிப்பது துவைதம். அதாவது உப்பும் நீரும் தனிதனியாக இருந்தால் துவைதம், ஒன்றாக கலந்தால் அத்வைதம்)

அந்த ராமானுஜரின் போதனைகள் மெல்ல வலுபெற்றன, அவருக்கு சைவ சமய வெறுப்பு இருந்ததாக தெரியவில்லை ஆனால் தன் கொள்கைகளில் உறுதியாக இருந்திருக்கின்றார், விசிட்டாத்துவைதம் அவரின் மகா உறுதியான கொள்கையாகவும் அதை கொண்டு வாதத்தில் எல்லோரையும் தோற்கடிப்பதாகவும் இருந்திருக்கின்றது

இந்தியா முழுக்க சுற்றினார், வைணவம் அவரால் செழித்தது, சென்ற இடமெல்லாம் வைணவத்தை வளர்த்தார், ஒன்றல்ல இரண்டல்ல அவரின் சாதனைகள்

இந்தியாவெங்கும் பவுத்தம் ஆட்சி செய்த காலத்தில் ஆதி சங்கரர் சைவம் பரப்பி இந்துமத மறுமலர்ச்சிக்கு அரும்பாடுபட்டார், அவரின் வழியில் வைணவத்தை தளிர்க்க செய்தவர் ராமானுஜம்

இருவருமெ சமஸ்கிருத பண்டிதர்கள், அதனாலே தமிழகத்தினை சேர்ந்த இவர்கள் அகில இந்திய அடையாளாங்களாக உயர்ந்தார்கள்

ராமானுஜரின் போதனைகளும் தத்துவங்களும் அவரின் சாதனைகளும் ஒரு பக்கத்தில் சொல்ல கூடியது அல்ல, அவை ஆயிரம் ஏடுகளையும் தாண்டி செல்லும் அளவு மகா பெரியவை

120 ஆண்டுகள் நிறைவாழ்வு (ஜாதகபடி ஒரு மனிதனின் ஆயுள் 120 ஆண்டுகளே) வாழ்ந்த அவர் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் வைணவத்துக்காய் உழைத்தவரென்றால் அதை ஆயிரம் ஏடுகளில் கூட சொல்லமுடியாது

அவரின் மிக சிறந்த சாதனைகளை மட்டும் பார்க்கலாம்

ஒரு நல்ல குரு எப்படி இருக்க வேண்டும் எல்லா மக்களையும் எப்படி கடவுளிடம் சேர்க்க வேண்டும் என்பதில் அவர் சரியாக இருந்தார், சாதிவேற்றுமை பார்க்கவில்லை, அது அவரிடம் கிஞ்சித்துமில்லை

பவுத்தர்கள் கடைநிலை மக்களை இந்துமத கொடுமை பாரீர், புத்தத்தில் சேருவீர் என அழைத்தபொழுது எல்லா மக்களும் நாராயணன் அம்சமே, அவர்கள் "திருகுலத்தோர்" என சொல்லி பெயரிட்டு வைணவத்தில் சேர்த்தார்

இந்த "திருகுலத்தோர்" என்பதுதான் பின்னாளில் காந்தி "ஹரிஜனங்கள்" என அம்மக்களை நோக்கி அழைக்க காரணமாயிற்று, அடிதளமாயிற்று.

ஆலய நுழைவு உரிமையினை எல்லா மக்களும் பெற வேண்டும் என முதன் முதலில் சொன்னவர் அந்த துறவிதான்., இந்து துறவிதான்

தமிழை முன்னிலைபடுத்தினார் ராமானுஜர் , ஆம் அவர் வழிபட்ட அல்லது நிர்வாகியாகியாக இருந்த கோவில்களிலெல்லாம் திருப்பாவை முதல் நாலாயிர திவ்விய பிரபந்தம் முதல் பாட உத்தரவிட்டார்

தமிழை வழிபாட்டு மொழியாகவும், முதன்மை மொழியாகவும் நிறுத்தியவர் அவரே. சமஸ்கிருதமும் தமிழும் இரு கண்கள் என்பதில் தெளிவாய் இருந்தார்

ராமானுஜரின் மிகபெரும் சாதனை நிர்வாகம், திருச்சி திருவரங்கத்தில் அவர் நிர்வாகியாக இருந்தாலும் தென்னகத்தின் எல்லா வைணவ தலங்களுக்கும் அவர் மிகபெரும் ஆதார சக்தியாய் இருந்தார், மிக தூய நிர்வாகத்தை கொடுத்ததால் "உடையவர்" என அவரை போற்றி நின்றது சமூகம்

எள்முனையின் ஒரு முனையேனும் அவரிடம் நிர்வாக குற்றமில்லை, ஒரு நல்ல துறவி எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தார்

இறையருள் அவரிடம் கொட்டி கிடந்தது, அது காவேரி போல் தத்துவ ஆறாய் ஓடியது, இறைவனின் எல்லா நிலைகளையும் அவனின் தத்துவத்தையும் விளக்குவது அவருக்கு சிரமாக இருந்ததே இல்லை

அவர் இயற்றிய ஸ்ரீபாஷ்யம் அவருடைய தலைசிறந்த படைப்பு. இன்னும் அவரின் வேதாந்த சங்கிரகம். எனும் உபநிடத தத்துவங்களை சொல்லும் நூல் , வேதாந்த சாரம், மற்றும், வேதாந்த தீபம் எனும் பிரம்ம சூத்திரத்தைப்பற்றிய சுருக்கமான உரைகள் கொண்ட நூலும் சிறந்தவை

மகா உச்சமாக கீதா பாஷ்யம். இது விசிட்டாத்துவைதத்தையொட்டி எழுதப்பட்ட ராமானுஜரின் உரை, தமிழில் கீதைக்கு உள்ள மிக சிறந்த உரைகளில் அது மகத்தானது

இது போக நித்யக்கிரந்தங்கள் எனும் அன்றாட வைதீகச்சடங்குகளும், பூசை முறைகளும் கொண்ட நூல், கத்யத்ரயம்., ஸ்ரீரங்க கத்யம் , வைகுண்ட கத்யம் ஆகியவை தலை சிறந்த படைப்புக்கள்

தென்னகம் முழுக்க வைணவத்தை செழுக்க செய்த ராமனுஜரின் போதனைகள் வட நாட்டிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின, .

இராமானந்தர் விசிட்டாத்துவைதத்தை ஏற்று காசியில் ஒரு புரட்சி செய்தார், ஜாதிவேற்றுமை பாராது கபீர்தாசர், ரவிதாசர், முதலிய பல சீடர்கள் மூலம் வைணவத்தைப் பரப்பினார்.

செருப்பு தைக்கும் குடும்பத்தில் பிறந்தவர் ரவிதாசர். ரவிதாசர் யாரென்றால் பக்த மீராவினை வைணவ மார்க்கத்தில் இழுக்க காரணமாமாயிருந்தவர். பிற்காலத்தில்யிருந்தவர்

மிகபெரும் ராமபக்தரும் வட இந்தியா முழுக்க பெரும் மாற்றம் கொடுத்தவருமான துளசிதாசரும் ராமானுஜரின் போதனையால் கவரபட்டு வைணவம் செழிக்க பாடுபட்டவரே

ராமானுஜர் ஏற்றிவைத்த ஜோதி சாதாரணம் அல்ல, அந்த ஆச்சாரிய பரம்பரை எனும் வைணவ பரம்பரையில் மிக பெரும் தாக்கத்தை ஏற்றி வைக்க வந்தவர், வந்து அதை மகா செம்மையாக செய்தவர்

ஒரு வகையில் ராமானுஜர் எழும்பி பெரும் வைணவ ஜோதியினை ஏற்றி வைக்காவிட்டால் இன்று ராமர்கோவில் சாத்தியமா, இல்லை மதுராவில் இருக்கும் ஆலயம் சாத்தியமா? என்றால் இல்லை என்றுதான் தலையாட்ட வேண்டியிருக்கின்றது

அந்த அளவு வைணவம் இங்கு தாழகிடந்தது, வகை வகையான குழப்பங்கள் மிஞ்சியிருந்தன. புத்தமும் சமணமும் அப்படி குழப்பி அடித்திருந்தன‌

ராமானுஜர் வராமல் அக்காலம் அப்படியே கடந்திருந்தால் பின்னாளைய ஆப்கானியர் ஆட்சியில் எதெல்லாமோ மறைந்து சுவடின்றி அடிபட்டு இந்தியாவில் இருந்தே அகன்றிருக்கும்

இந்தியாவின் குழப்பமான காலகட்டத்துக்கு முன் மிகபெரும் அஸ்திவாரமிட்டு பல கட்டுமானங்களை செய்துவிட்டு சென்றவர் ராமானுஜர், அதில்தான் இன்று ராமர்கோவில் சாத்தியமாகியிருக்கின்றது

இதனாலே அவர் பகவானின் அவதாரம் அல்லது அவரால் அனுப்பபட்டவர் என நம்புகின்றார்கள் வைணவர்கள்

அந்த வைணவ தலைமகன் இறந்த பின்பு அவர் ஏற்படுத்திய பெருவழி வடகலை தென்கலை என பிரிந்தது பிரிந்தாலும் அவருக்கான இடம் இன்றுவரை அப்படியே இருக்கின்றது

ராமானுஜரை வாழும் பொழுது மகான் என வணங்கிய சமூகம் அவரை காலெமெல்லாம் அதே கோலத்தில் பார்க்க விரும்பியது, அனுமன் ராமனை பார்த்து கொண்டே இருக்க விரும்பியது போல் விரும்பியது

இதனால் 3 திருமேனி எனும் அவரின் உருவம் உருவாக்கபட்டது, முதலாவது மேல்கோட்டை எனும் மைசூருக்கு அருகில் உள்ள ஊரில் உருவாக்கி வைக்கபட்டது , திருப்பெரும்புதூரில் இரண்டாவது

மூன்றாவது அவர் கடைசி காலங்களை கழித்த திருச்சி திருவரங்கத்தில் அவரின் பூத உடலானது பல வகை மூலிகைகளை சேர்த்து பாடமாக்கபட்டு வைக்கபட்டிருக்கின்றது

மானிட சடலங்கள் கோவிலுக்குள் அனுமதிக்கபடுவதில்லை, இந்துக்கள் வரலாற்றிலே ஒருவரின் சமாதி நிலையும் பூத உடலும் கோவிலுக்கு நிலைபெற்றிருப்பது திருவரங்கத்தில் மட்டுமே

காரணம் அவரை அவதார திருமகனாகவே அச்சமூகம் ஏற்று அவருக்கு நிலையா இடம் கொடுத்தாகிவிட்டது

இன்றும் திருச்சி திருவரங்கள்த்தில் முதல் பூஜை ராமானுஜருக்கே, ஆலய கணக்கு வழக்கும் அவர் முன்னாலேதான் வாசித்து காட்டபடும்

எந்த அளவு அவர் மாபெரும் புரட்சியினை செய்திருந்தால், எந்த அளவு அவர் மக்கள் மனதை தொட்டிருந்தால் இந்த மாபெரும் அந்தஸ்து அவருக்கு கொடுக்கபட்டிருக்கும்?

ஆம் அவர் செய்த விஷயங்களும், காட்டிய வழிகளும், போதனைகளும் எக்காலமும் உயர்வானவை, கால காலத்துக்கும் தேவைபடுபவை

அவர் ஏன் காலா காலாத்துக்கும் இந்தியாவுக்கு வேண்டும் என்றால் வைணவ மதம் எனும் இந்து பிரிவின் மாபெரும் தத்துவ உண்மைகளை எளிதாக சொன்னவர் அவரே

எல்லா மக்களையும் அணைத்து இந்துமதத்தை காக்க வேண்டும் என சொன்னவரும் அவரே, பவுத்த ஆபத்தில் இருந்து மக்களை காத்தவர் அவரே அதற்கு வழிகாட்டியவர் அவரே

அதே பவுத்த ஆபத்து வேறு மதம் வடிவில் இன்று வாலை நிமிர்ந்தி நாக்கை சுழற்றி வரும் காலமிது , இந்த காலகட்டத்தில் ராமானுஜரின் கொள்கைகள் போதனைகள் மகா அவசியம் தேவை

இன்று சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாள், ராமானுஜரின் அவதார பெருநாள்

அந்த மகான் இங்கு செய்திருக்கும் புரட்சி பெரிது, இந்து மதத்துக்கு செய்திருக்கும் தொண்டு கடல் போல் பெரிது

தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டு வானம் போல் பெரிது

எல்லாவற்றுக்கும் மேல் அவரின் அந்த மனம், அது கடவுளின் மனம்.

ஆம், அவரின் குருநாதர் அவருக்கொரு மந்திரம் உபதேசித்து இது சொர்க்கம் அடையும் மந்திரம், யாருக்கும் சொல்லகூடாது என்றார். ராமானுஜரோ ஓடி சென்று திருகோஷ்டியூர் கோபுரம் மேல் ஏறி நின்று எல்லோருக்கும் அந்த மந்திரத்தை உபதேசித்தார்

ஆத்திரமடைந்த குரு ஏன் இப்படி செய்தாய்? குரு மறுப்பு உன்னை நரகில் தள்ளிவிடும் என சீறினார், அமைதியாக சொன்னார் ராமானுஜர் " குருவே நான் ஒருவன் நரகம் போவதால் இவர்கள் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள் அல்லவா? அது போதும்"

இப்படி ஒரு மனம் யாருக்கு வரும்? ராமானுஜரை தவிர யாருக்கு சாத்தியம்

காலமுள்ள காலம் வரை அவர் ஏன் நிலைத்திருப்பார் என்றால் இதற்காகத்தான், ஒவ்வொரு இந்துவும் படிக்க வேண்டிய வரலாறு அவர்.

இதுவரை 9 அவதாரங்களை எடுத்து உலகை காத்தார் பகவான். ஆனால் அவ்வப்போது மதத்தை காக்க பாரதம் காக்க சில வடிவில் வந்து கொண்டே இருப்பார், அதில் ஒன்று ராமானுஜர் வடிவம்.

கண்களை மூடி ஆழ சிந்தியுங்கள், வடக்கே அவர் ஏற்றி வைத்த வைணவ ஜோதி கொஞ்சம் அல்ல அதில்தான் ரவிதாசர் முதல் மீரா வரை, துளசிதாசர் வரை வந்தார்கள், அதில்தான் ராம பக்தி, கிருஷ்ண பக்தி புத்துயிர் பெற்றது

அதில் மீண்டிருப்பதுதான் ராமர் ஆலயம், அவ்வகையில் காலமுள்ள காலமும் நிலைத்திருப்பார் ராமானுஜர்

நாலாயிர திவ்ய பிரபந்தமும், ஆழ்வார்களின் பாடலும் ஆலயங்களில் ஓதபடும் வரை, தமிழுக்கும் தமிழ் பக்தி படைப்புக்கும் அவர் ஆற்றிய தொண்டுகள் வரலாற்றில் நிலைத்திருக்கும்

சங்கரர், மத்தவாச்சாரி வரிசையில் என்றும் நிலைத்திருக்கும் அந்த மாபெரும் அவதாரத்துக்கு , பாரத கண்டத்தின் வைணவத்துக்கு தூணும் கூரையுமாய் நின்று, அது காலம் காலம் செழிக்க வழி செய்த அந்த மாபெரும் அவதாரததின் அவதார நாளில் அவரை வணங்குகின்றார்கள் உலக இந்து மக்கள்..

அதில் மீண்டிருப்பதுதான் ராமர் ஆலயம், அவ்வகையில் காலமுள்ள காலமும் நிலைத்திருப்பார் ராமானுஜர் எனும் அந்த யதிராஜர்

ஆம் ராஜமுனி , ராஜதுறவி அவர்

நாலாயிர திவ்ய பிரபந்தமும், ஆழ்வார்களின் பாடலும் ஆலயங்களில் ஓதபடும் வரை, தமிழுக்கும் தமிழ் பக்தி படைப்புக்கும் அவர் ஆற்றிய தொண்டுகள் வரலாற்றில் நிலைத்திருக்கும்

சங்கரர், மத்தவாச்சாரி வரிசையில் என்றும் நிலைத்திருக்கும் அந்த மாபெரும் அவதாரத்துக்கு , பாரத கண்டத்தின் வைணவத்துக்கு தூணும் கூரையுமாய் நின்று, அது காலம் காலம் செழிக்க வழி செய்த அந்த மாபெரும் அவதாரததின் அவதார நாளில் அவரை வணங்குகின்றார்கள் உலக இந்து மக்கள்..  

No comments:

Post a Comment