திருவண்ணாமலை மாவட்டம், போளூரிலிருந்து 4 கி.மீ. மேற்கே, ஜமுனாமரத்தூர் ஜவ்வாது மலைக்கு செல்லும் சாலையில் மாம்பட்டு கிராமம் அமைந்துள்ளது. இவ்வூருக்கு வருபவர்களை வாவென்று அழைப்பதைப் போன்று, அண்ணாமலையார் மற்றும் ஸ்ரீசுயம்பு நாதேஸ்வரர் என இரட்டை சிவாலயம் இத்திருத்தலத்தில் அமைந்துள்ளது.
ஆலய தரிசனம் ஆயிரம் புண்ணியம் என்பார்கள். அதேபோல் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். ஆம், இராஜகோபுர திருப்பணியை எதிர்நோக்கி இருக்கும். இத்திருத்தலம் சுமார் 2.85 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
அதில் ஆகம முறைப்படி 25 செண்ட் பரப்பளவில் தெற்கு நோக்கிய நுழைவு வாயிலுடன் எழுநூறு ஆண்டுகள் தொன்மை வாய்ந்த அருள்மிகு. பெரியநாயகி ஊடனுறை ஸ்ரீசுயம்பு நாதேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
நுழைவு வாயிலின் எதிரே 22 அடி உயரத்தில் துவஜஸ்தம்பாக: கார்த்திகை தீபக்கற்தூண் காட்சி தருகின்றது. இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களும் திருக்கோயிலின் துவஜஸ்தம்பாக நினைத்து தரிசித்து வணங்குகின்றனர்.
வடக்கு நோக்கியவாறு அமைந்துள்ள நுழைவு வாயிலின் வழியே உள்ளே சென்றால் இரட்டை சிவப்பதிகளை தனது கருவறைகளாக அமைத்துக் கொண்டு காட்சி தரும் சிவபெருமானை தரிசித்து மகிழலாம்.
ஈசன் எம்பெருமானை தரிசிக்க வருகை தரும் அன்பர்கள் ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் கண்ணில் படும் முதல் சிவப்பதியை அடுத்து, இலயத்தின் மையத்தில் அமைந்துள்ள தொன்மையும் புராதனமும் மிக்க ஆலய மூலவ முதல்வர் ஸ்ரீசுயம்பு நாதேஸ்வரர் என்று திருநாமத்தில் சர்வேசன் சுயம்பு லிங்க சொரூபராய் சிவப்பதி கொண்டு காட்சி தருவதை காணலாம்.
இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் மூலவரின் திருநாமங்கள் ஸ்ரீதான்தோன்றீஸ்வரமுடைய நாயனார், ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் என்றும் ஸ்ரீசுயம்பு நாதேஸ்வரர் என்றும் கூறப்பட்டுள்ளன. அவ்வாறே மக்களும் ஸ்ரீசுயம்பு நாதேஸ்வரர் என்ற திருநாமத்திலேயே ஈசனை இன்று வணங்கி வருகின்றனர்.
இச்சிவப்பதி ஆகம முறைப்படி கோஷ்ட தெய்வங்கள் சூழ மூலவர் கருவறையும், உமையாளை இடபாகம் வைத்த ஈசன் இங்கும் அம்பாள் அருள்மிகு.பெரியநாயகிக்கு, தனது ஆலய இடதுபுறம் தனிச்சந்நிதி கொடுத்து அம்மையப்பராய் காட்சி தந்தருள்கின்றனர்.
அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு மூர்த்தகம்,தலம்,தீர்த்தம் மூன்றும் அமைத்து பூலோகத்தில் ஒம்பூதத் தலங்கள், பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள், தன் அடியார்களால் போற்றிப் பாடப்பட்ட திருமுறைத் தலங்கள் என பாரதத்தில் ஆங்காங்கே ஆலயங்கள் அமைந்துள்ளன. மேலும் காரண காரியமாகவும் பூலோகத்தில் சுயம்பு மூர்த்தமாய் (அருவுருவமாய்) எழுந்தருளி ஆலயங்கள் கொண்டும் ஈசன் அருள்பாலிக்கிறார்.
அந்த வகையில் சிவபெருமானின் அபயம், வரதம், அருளும் அஸ்தங்களில் உள்ள மான், மழு, ஊடுக்கை, சூலம், அங்க அணிகலன்களாக உள்ள பிறை,நாகம்,ருத்ராட்சம்,சலங்கை ஆகிய முத்திரைகளின் பெயர்களில் ஈசன் இடப்பிறையூர் (ஏடப்பிறை), திரிசூலபுரம் (திரிசூரி), மழுவம்பாடி (மாம்பட்டு) என ஏர் பெயர்களுடன், இப்பகுதி கிராமங்களில் சிவாலயங்கள் அமைந்துள்ளதை காணலாம்.
இதில் மழுவம்பாடி, எழுவாம்பாடி என்றழைக்கப்படும் மாம்பட்டு என்னும் கிராமத்தில் தொன்மையான காலத்தில் சிறுபாறைக் கல்லின் மேல் சிவபெருமான் சுயம்புவாய் (அருவுருவமாய்) தோன்றி மக்களுக்கு காட்சித் தந்தருளினார்.
மக்களும் இறைவனுக்கு சிறு ஆலயம் அமைத்து பூஜித்து வழிபட்டு வந்தனர். மலைகள், இரண்யங்கள் (காடுகள்) சூழ்ந்த இம்மண்ணிய பூமி ஈசன் சுயம்புDSC_0738வாய் தோன்றியதால் புண்ணிய பூமியானது.
இப்புண்ணிய பூமியில் ஸ்ரீசுயம்பு நாதேஸ்வரர் ஏழுந்தருளி வரும் சிவத்தலம் ஏப்படி? சைவம் வளர்த்த சான்றோர்களான நந்தி அருள் பெற்ற நாதர்கள், தொகையடியார்கள், பதிணெண் சித்தர், 63 நாயன்மார்களின் பன்னிரு திருமுறை தந்த இருபத்தி எழுவர், இதில் சமயக்குரவர் நால்வர், சந்தானக்குரவர் நால்வர் உள்ளிட்ட சமய சான்றோர்களின் கண்களில் படாமல் போனது என்று தெரியவில்லை.
இருப்பினும், இத்திருத்தலம் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். நமக்கு ஆலயம் கட்டித் தந்த காலம் 700 ஆண்டுகளுக்கு முன் என்பது மட்டும் கிடைக்கப் பெற்றுள்ள செய்தியாகும்.
தமிழகத்தை ஆட்சி செய்த கரிகால சோழ மன்னன் வடக்கு பகுதியை 24 நான்கு கோட்டங்களை கொண்ட தொண்டை மண்டலமாக அமைத்து ஆட்சி செய்தார்.
பின்னர் இப்பகுதியை ஆட்சி செய்து வந்த களப்பிரர், பல்லவர், சோழர், பாண்டிய மன்னர்கள் மற்றும் படவேடு இராஜ்ஜியம் அமைத்து ஆட்சி செய்த சம்புவராய மன்னர்கள் மற்றும் விரிஞ்சாபுரம், வேலூர் நகரம் ஆகியவற்றை கைப்பற்றி ஆட்சி செய்த விஜயநகர நாயக்க மன்னர்கள் பல்குன்றக் கோட்ட போளூர் பகுதியையும் ஆட்சி செய்து வந்தனர்.
படவேடு இராஜ்ஜியம் அமைத்து ஆட்சி செய்த சம்புவராய மன்னர்களில் சகலோக சக்கரவர்த்தி வென்று மண்கொண்ட ஏகாம்பர சம்புவராய மன்னர் கி.பி.1321 முதல் கி.பி.1339 வரை ஆட்சி செய்தார். பாண்டிய பேரரசு கி.பி.1321-ல் வீழ்ச்சியுற்று சிதைந்தது.
அதுவரை குறுநில மன்னர்களாக இருந்த சம்புவராயர்களின் ஆட்சி இவரது ஆட்சிக்காலத்தில் கி.பி.1323-ல் சுதந்திரமாக கோலோச்சத் தொடங்கினார். படவேடு இராஜ்ஜியம் எழுச்சிப் பெற்றது.
இவரது ஆட்சிக் காலத்தில் இப்பகுதியில் மண்டகொளத்தூர், வட மாதிமங்கலம், சம்புவராயநல்லூர், ஐகாம்பர நல்லூர், அய்யம்பாளையம், மற்றும் மாம்பட்டு போன்ற கற்பாறையினை ஆவுடையராகக் கொண்டு அதன் மேல் அருவுருவ லிங்க பாண ரூபராய் எழுந்தருளி காட்சித் தந்து வரும் ஈசனை கண்டு தரிசித்தார்.
இப்பகுதி வாழ்மக்களின் வேண்டுகோளை ஏற்று கி.பி.1338-ல் சந்நிதிகள், கோஷ்ட தெய்வங்கள், பிரகார சந்நிதிகள் சூழ மதில் சுவருடன் கூடிய திருக்கோயிலை கட்டித் தந்தார்.
வென்று மண்கொண்ட ஏகாம்பரநாத சம்புவராய மன்னர் மாம்பட்டு திருத்தல திருப்பணியை செய்த போது, ஈசன் சுயம்புவாய் தோன்றிய இடத்திலேயே ஆலய கருவறையும் அதே ஆவுடையார் கல்லை குடைந்து ; அதே சுயம்பு மூர்த்தத்தையே அதனுள் அமைத்து அஷ்டபந்தனம் சாத்தி, மகா கும்பாபிஷேகம் நடத்தினார்.
அன்று முதல் நிலமான்யம் நன்கொடைகளின் வருவாயைக் கொண்டும், திருவிழாக்கள் நடத்தியும் இறைவனை வணங்கி வந்துள்ளனர்.

No comments:
Post a Comment