Sunday, 17 May 2020

யார் சித்தன் ? சித்தர் நிலை பற்றி...!

1. முயற்சி திருவினையாக்கும்.
2. பயிற்சி, முயற்சி செய் திருவினையாக்கும்.
3 சிவ சத்தி யோகப்பயிற்சி செய் திருவினையாக்கும்.
4 சிவ சத்தி பயிற்சியில்தான் மனம் என்ற வாசி அடங்கும்.
5 வாசி வசமானால் காயம் சுத்தி ஆகும்.
6 காயம் சுத்தியானால் மனம் என்ற மூலம் அடங்கும்.
7 மனம் என்ற மூலம் அடங்கினால், முத்தி சித்தி பெறலாம்.
8 சிவ சத்தி பயிற்சியில்தான் மனம் என்ற மூலம் அடங்கும்.
9 மூலம் என்ற மனம் அடங்கி காயம் சுத்தியானால், ஞானம் என்ற இறையை காணலாம்.
10 இறை என்ற சீவன் சிவனை அறியும்.
11 சிவனை அறிந்தால் ரசவாதம் சித்திக்கும்.
12 ரசவாதம் சித்தியானால் பிறப்பு, இறப்பு தவிர்க்கலாம்.
13 ரசவாதம் தெரிந்தால் சித்தன்.
14 சித்தன் தான் சிவபெருமான்.
15 சித்தன் தான் மரணமென்ற பெருநோய்யை தீர்க்க முடியும்.
16 மரணமில்லாத பெரு வாழ்வு வாழ்வதுவே சித்தர் நிலை.
17 சித்தர் நிலையில் தான், "நான் தான் அவன்", "அவன் தான் நான்" என்று சொல்ல முடியும்.



சித்தன் என்றால்.... கோரக்கர் கூறுவது,

காலமதில் கடியரவின் விடமும் ஏறா
கடுந்தீயின் சூடேறா சலமுங் கொல்லா
ஞாலமதில் சமாதிபெற மண்ணுந் தின்னா
நடுவனவ னுனதருகே வரவே மாட்டான்
வேலனைய கத்திவாள் வெட்டு மேறா
விடந்தலைமேற் கொண்டவனும் விமலி யாத்தாள்
சீலமுடன் ஞானப்பால் தந்து கந்தே
யீரெட்டாம் வயதுமெப்போ திருந்து வாழ்வாய்.

No comments:

Post a Comment