Saturday, 2 November 2019

முடி வளர்ச்சிக்கு

அதிமதுரத்தை பாலில் அரைத்துப்பூசுவதால் முடி வளறும்
இது நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்
வாரம் ஒருமுறை குளிக்கலாம்
பாலும் ஒரு சத்துப் பொரருளாக முடி வளர்ச்சிக்கு பயனளிக்கிறது.

கோழிமுட்டையின் வெள்ளைக்கருவை வாரம் ஒரு முறை பூசி குளிக்கலாம்
வீட்டிலேயே சில எண்ணை தயாரிப்புகள் செய்யலாம்

அருகம்புல்லின் வேர்35 கிராம்
சீரகம் 5கிராம்
மிளகு 5 கிராம்
அனைத்தையும்  லேசாக நசுக்கி
வெள்ளை துணியில் முடியவும்
கண்ணாடி பாட்டிலில்300 மில்லி தேங்காயெண்ணை எடுத்து அதில் இந்த முடிச்சை போட்டு வெயிலில்  வைக்கவும்10 நாள் பிறகு எண்ணையை எடுத்து பூசி வரவும்
ஏதாவது ஒரு முறையை பினன்பற்றினால் அதிலேயே தொடர வேண்டும் அடிக்கடி மாற்றக்கூடாது



வேறு முறை

கீழ்க்கண்ட இலைகள் பொருட்கள் சேகரிக்கவும்
மருதாணி இலை கைப்பிடி
செம்பருத்தி பூ உலர்ந்தது கொஞ்சம்
கையாந்தரரை இலை கைப்பிடி
கருவேப்பிலை கொஞ்சம்
காய்ந்த நெல்லிக்காய் தூள் 20கிராம்
அனைத்தையும் அம்மியில் அரைக்கவும்
ரொம்ப தண்ணீராக  சட்டினி மாதிரி
 இருந்தால்  சற்று வெயிலில் வைத்து
பாதி உலர்ந்த உடன் எடுங்கள்
கையினால் உருண்டையாக உருட்டும் பதம் . சுண்டைக்காய் போல் உருட்டுங்கள்
500மில்லி தேங்காய் எண்ணெய் பாட்டிலில் எடுத்து அதில் இந்த உருண்டைகளைப் போடுங்கள் ஒரு ஸ்பூன் வெந்தயம் போடுங்கள்
வெயிலில் 10 நாள் வையுங்கள்
இதை தலைக்கு பூசி வர முடி வளரும்

No comments:

Post a Comment