Saturday, 2 November 2019

சுகப் பிரசவ கசாயம்

அறுவை சிகிச்சையை  தவிர்த்து இயற்கையான முறையில் சுகப் பிரவசம் ஆக உதவி செய்யும் மிகப் பெரிய மருந்து இது.
கர்ப்பமாக இருப்பவர்கள் ஐந்தாவது மாதம் முதல் இந்த மருந்தைப் தொடர்ந்து பயன்படுத்தி நலம் பெறலாம்.
தாயின் ஆரோக்கியத்தை சேயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி சுகப் பிரசம் ஆக உதவும் மிக சிறந்த மருந்து

சுகப் பிரசவ கசாயம்  செய்யும் முறை

திரிபலா சூரணம் ............ இரண்டு கிராம்
அதி மதுரம் ............. இரண்டு கிராம்

ஆகிய இரண்டு   பொருட்களையும் கொடுத்துள்ள அளவின்படி எடுத்து
நானூறு மில்லி தண்ணீரில் போட்டுக் காய்ச்சி
நூறு மில்லி கசாயமாக சுருக்கி
இறக்கி வடிகட்டி
ஒரு வேளை மருந்தாக
உணவுக்கு அரை மணி நேரம் முன்னதாகக் குடித்து வர வேண்டும்.
தினமும் காலை இரவு என இரண்டு வேளைகள் உணவுக்கு அரை மணி நேரம் முன்னதாகக் குடித்து வர வேண்டும்.
ஒவ்வொரு வேளையும் புதிதாக செய்து சாப்பிடுவது நல்லது.
இனிப்பு கலந்த துவர்ப்பு சுவையுடன் கூடிய கசாயம் இது.
எந்த தயக்கமும் இன்றி இதை ஒரு தேநீர் போல குடித்து வரலாம்.



ஆஸ்துமா நோய்க்கும் மிக சிறந்த மருந்து இது
உடலில் இருக்கும் கொழுப்புக்களை நீக்கும் மிக சிறந்த மருந்து
அடி வயிறு என்ற தொப்புள் கொடிக்கு கீழே இருக்கும் பகுதிகளில் ஏற்படும் நோய்கள்
உடலில் அதிக இறுக்கம் ஏற்படுத்தும் ( மசில் ஸ்டிப்னஸ் ) நோய்கள் அனைத்துக்கும் இது ஒரு மிக சிறந்த மருந்து.
தினமும் காலை மதியம் இரவு என மூன்று வேளைகள் இந்த மருந்தைக் குடித்து வர தைராய்டு பிரச்சினையை கட்டுப் படுத்தும் மருந்தாகவும் இது பயன்படுகிறது.
இநிதக் கசாயத்தைக்  குடித்து வார சர்க்கரை நோயின் தீவிரமும் குறையும்

No comments:

Post a Comment