Sunday, 29 April 2018

சுக்கின் மருத்துவ பயன்கள்


🌿 தேள் கொட்டிய இடத்தில் சுக்கை அரைத்து தடவி சிறிது நெருப்பு சு+டு அதில் காட்டினால் விஷம் இறங்கும்.

🌿 உடலில் வலி, வீக்கம் போன்றவைக்கு சுக்கு சிறந்த தீர்வு எனலாம்.

🌿 சுக்கை பசு மோர் விட்டு அரைத்து சாப்பிட பேதி நிற்கும். சுக்குத்தூளுடன் நீர், வெல்லம் கலந்து சாப்பிட பித்தம் நீங்கும்.

🌿 சுக்கு, மிளகு, வெற்றிலை ஆகியவற்றை சேர்த்து அரைத்து சாப்பிட வாய்வுத்தொல்லை நீங்கும்.




🌿 சுக்கு, ஜாதிக்காய், சீரகம் ஆகியவற்றை 50 கிராம் அளவில் எடுத்து இடித்து உணவுக்கு முன் சாப்பிட அஜீரண கோளாறுகள் நீங்கும்.

🌿 சுக்குப்பொடியுடன் பெருங்காயப்பொடி கலந்து சாப்பிட வயிற்று வலி தீரும்.

🌿 சுக்கு, பெருங்காயம் இரண்டையும் பாலில் உரசி நெற்றியில் பற்று போட தலைவலி தீரும்.

🌿 சுக்கு, திப்பிலி, வால்மிளகு, ஏலம் இவைகளை 5 கிராம் வீதம் எடுத்து வறுத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட குரல் இனிமை பெறும்.

🌿 சுக்கை உலர வைத்து இடித்து பொடியாக்கி அரைத்து தினசரி காலையில் இந்த பொடியால் பல் துலக்கி வர பல்வலி, ஈறுவீக்கம், பல் ஈறில் ரத்தம் வருதல் போன்ற பல் சம்பந்தமான குறைபாடுகள் தீர்வு பெறும்!

No comments:

Post a Comment