Sunday, 29 April 2018

ஆண்மை தரும் அமுக்கரா

அமுக்கராவை பாலில் வேகவைத்து, பிறகு காயவைத்து பொடி செய்துகொள்ளவும், இதில், ஐந்து கிராம் பொடியை தினமும் காலை மற்றும் இரவு  உணவுக்குப்பின் இருவேளை சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைபாடுகள் தீரும்.


                அமுக்கரா, பாதாம், பருப்பு, முந்திரி பருப்பு, அக்ரகாரம் தலா 100 கிராம் எடுத்துபொடி செய்து கொள்ளவும் இதில், தினமும் இரவு உணவுக்குப்பின் ஐந்து கிராம் அளவுக்குசாப்பிட்டுவந்தால் உடலுறவில்  ஈடுபாடு அதிகரிக்கும்.

                அமுக்கராவை பொடி செய்து தினமும் இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை ரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்.



                   அமுக்கரா, சுக்கு ஏலக்காய், சித்தரத்தை தலா 100 கிராம் எடுத்து  அரைத்து ,தினமும் இரவு உணவுக்குப்பின் பாலுடன் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டுவந்தால் கை, கால், வலி குணமாகும்.
அமுக்கரா, நெருஞ்சில், கோரைக்கிழங்கு தலா 100 கிராம் எடுத்து  அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு இரவு உணவுக்குப்பின் பாலில் கலந்து குடித்துவந்தால் விந்தில் உயிரணுக்கள்  எண்ணிக்கை அதிகரிக்கும்.

No comments:

Post a Comment