Sunday, 29 April 2018

முடி கொட்டும் பிரச்னை

நாம் சாப்பிடும் உணவில் உள்ள வைட்டமின் குறைபாடு, பரம்பரைக் காரணங்கள், மரபணு மாற்றம், தலைக்கு பயன்படுத்தும் ஷாம்புவில் உள்ள ரசாயனம், கேன்சர், சர்க்கரை நோய்க்கு எடுத் துக் கொள்ளும் சிகிச்சை முறைகள், ஊட்டச்சத்து இல்லாத உணவு, மன அழுத்தம், சுற்றுச் சூழல் மாசு, வயது முதிர்வு உள் ளிட்ட பல காரணங்களால் முடி கொட்டும் பிரச் னை உள்ளது. முடிப்பிரச்னை அலோப்சியா என அழைக்கப்படுகிறது. ஒருவருக்கு 100 முடிகள் வரை உதிர்வது சாதாரண விஷயம்.



தைராய்டு ஹார்மோன் குறைபாட்டினாலும் முடி உதிரும். காப்பர், ஜிங்க், அயோடின், வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளிட்ட குறைபாடுகள் இருந்தால் முடி உதிரும் பிரச்னை அதிகரிக்கும். சிவப்பு, மஞ்சள் வண்ணக் காய்கள் மற்றும் பழங்கள் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு கீரை கட்டாயம் சேர்க்கவும். கேரட், எலுமிச்சை, தக்காளி, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறி கள் சேர்க்கவும். அன்னாசி, பப்பாளி, ஆரஞ்சு சேர்க்கலாம். ஆட்டு ஈரல், மீன் மற்றும் மீன் எண்ணெய், பால், முட்டை கட்டாயம் சேர்க்கவும். சோயா மற்றும் சோயா பொருட்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பாலாடைக்கட்டி, இளநீர், மோர், பனீர், நிறைய சேர்த்துக் கொள்ளலாம். காளான் சாப்பிடுவதன் மூலம் சத்துக் குறைபாட்டை தவிர்க்கலாம். பீன்ஸ், பாலாக்கீரை மற்றும் மொச்சை வகைகளையும் சேர்க்கலாம். தினமும் 12 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். மசாஜ், ஆயில் பாத், யோகா மூலம் சத்தான உணவு உட்கொண்டு முடி கொட்டும் பிரச்னையை தடுக்கலாம்

No comments:

Post a Comment