Sunday, 29 April 2018

பெண்களுக்கு பெரும் பயன் தரும் வெந்தயக்கீரை துவட்டல்

*தேவையான பொருட்கள்*

வெந்தயக் கீரை – ஒரு கப்

தேங்காய்  – ஒரு மூடி துருவியது

துவரம் பருப்பு – 100 கிராம்

சின்ன வெங்காயம் – 1 (பொடியாக அரிந்தது)

காய்ந்த மிளகாய் – 2

சோம்பு – ஒரு தேக்கரண்டி

பொரியரிசி – ஒரு கைப்பிடி

உப்பு – தேவையான அளவு





*செய்முறை*

     துவரம் பருப்பை வேகவிடவும். தேங்காய் துருவலை தனியே வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, வதக்கி கீரையை அலசி நீரை வடியவிட்டு வேகவிடவும். சிறிது தண்ணீர் தெளிக்கவும். சோம்பு, பொரி அரிசி இவற்றைப் பொடி செய்யவும். கீரை வெந்ததும் இறக்கி வைத்து, தேங்காயத் துருவலைப் போடவும். துவரப் பருப்பு வெந்ததை போடவும். சோம்பு, பொரி அரிசி பொடிகளைப் போடவும். உப்பைத் தூள்செய்து போடவும். மதிய உணவில் சேர்த்து சாப்பிடவும். மாதவிடாய் நாட்களில் 6 நாட்கள் இவற்றை சாப்பிடவும்.

*பயன்கள்*

     பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் சீராகும். வயிற்று வலி குணமாகும். இரும்புச் சத்து உண்டாகும்.
 உடல் குளிர்ச்சி அடையும்.
பெண்களின் தலைமுடி வளர உதவும்.

No comments:

Post a Comment