Monday, 30 April 2018

மஞ்சள் (Curcuma longa)

மஞ்சள் (Curcuma longa) ஒரு மூலிகை இயல்புடைய தாவரம் ஆகும். தெற்காசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட மஞ்சள், தமிழ்நாட்டில் ஈரோடு எனும் இடத்திலேயே உலகில் அதிகளவில் விருத்தி செய்யப்படுகின்றது. இதன் வேர்த்தண்டுக் கிழங்கு பச்சையாகவும் அல்லது உலர்ந்தபின் பொடி செய்து மஞ்சள் தூளாகவும் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுகின்றது.

மஞ்சளில் உள்ள வேதிப்பொருள் குர்க்குமின் (curcumin) ஆகும். இதுவே மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடிய பல்வேறு பயன்களுக்கு மூலப்பொருளாக விளங்குகின்றது. பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.தமிழரின் தொன்மையான உணவுப் பழக்கமுறைகளில் மஞ்சள் பயன்படுத்துதலும் ஒன்று. அன்றைய தமிழரின் மருத்துவத்தில் இன்றியமையாத மஞ்சளின் ஒவ்வொரு குணங்களும் இன்றைய அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன.
மருத்துவ ஆற்றல்கள் – பயன்படுத்தும் முறை

1.       நுண்ணுயிர்களைக் கொல்லும் ஆற்றல்: மஞ்சள் நீரை வீடுகளில் தெளித்தல் ஒரு சிறந்த நுண்ணுயிரித் தடுப்பாகும்.2.       காயங்கள், புண்கள்: அடிபட்ட புண்ணுக்குப் மஞ்சளை அரைத்துப் போட்டால், சீக்கிரம் புண் ஆறிவிடும். வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து புண்கள் மீது போடலாம். மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, காயங்களுக்கும்புண்களுக்கும் போட்டால், விரைவில் ஆறாத காயங்கள் ஆறும்.3.       சேற்றுப் புண்: மஞ்சளையும், கடுக்காயையும் சம அளவு எடுத்து அரைத்து கலக்கவும். இரவுபடுக்கும் முன் கால் விரல்களைச் சுத்தம் செய்த பின் சேற்றுப் புண் வந்த  இடத்தில் தடவினால் சில நாட்களில் சேற்றுப்புண் குணமாகும்.  அல்லது விளக்கெண்ணெயில் மஞ்சள் தூளைக் கலந்து பூசி வரலாம்.4.       சமிபாட்டுக் குறைபாடு:கொஞ்சம் மஞ்சள் தூளை சாதம் வடித்த கஞ்சியில் கலந்து அதனைக் குடித்தால் குணமாகும். சமையலில் சேர்க்கப்படும் மஞ்சள் நிறம் சுவை மட்டுமின்றி ஜீரணத்தை
எளிதாக்கி உணவில் நச்சுத்தன்மை இருந்தால் அதையும் நீக்குகிறது. கறியில் மஞ்சள் சேர்ப்பதன் மூலம் இந்த விளைவைப் பெறலாம்.
5.       குடற்கிருமிகள் :மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரைவடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில்வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச்சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி விடும். துர்நாற்றம் நீக்கும்.

6.       சளி (சலதோசம்): மஞ்சள் துண்டு ஒன்றை எடுத்துச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்குஇழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும்.

7.       இருமல், தொண்டை எரிச்சல்: ஒரு டம்ளர் பாலில் மஞ்சள்தூள் அரைக் கரண்டி, பூண்டு, கொஞ்சம் கற்கண்டுசேர்த்து நன்கு காய்ச்சி சூட்டுடன் பருகினால் தொண்டை இதமாகும். மஞ்சள் தூளைதேனில் குழைத்துச் சாப்பிட்டால் விடாது இருக்கும் இருமல் அடங்கும். பாலில் மஞ்சள், மிளகு, பூண்டு சேர்த்து காய்ச்சி குடித்துவர சளி,இருமல்
குறையும். மஞ்சளை நெய்யில் கலந்து கொடுத்தாலும் இருமல் குறையும்.

8.       கால் ஆணி: கொஞ்சம் மஞ்சள்,வசம்பு, கொஞ்சம் மருதாணி
இலை, கற்பூரம் ஆகியவற்றை அரைத்து காலாணிக்குக் கட்டி
வர குணமாகும்.

9.       சீழ்க் கட்டி, பரு, நகச்சுற்று: முகத்தில் ஏற்படும் பருக்களை நீக்கும்.சூடாக்கிய சாதத்தோடு மஞ்சள் தூளைக் கலந்து பிசைந்து பாதிக்கப்பட்டஇடத்தின்மேல் சூட்டோடு பரப்பிக் கட்டுப் போட்டால் விரைவில் குணமடையும்.சுண்ணாம்பையும், மஞ்சளையும் சேர்த்துக் குழைத்துப் போட்டால் நகச்சுற்றுமறைந்துவிடும்.

10.   தோ…
[5:32 PM, 4/30/2018] +94 77 786 0306: இருக்கும் பீடா-அமைலோய்ட்புரதப்படிவுகளை (beta-amyloid proteins) அகற்றுகிறது என்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள், இதுவே அகவை முதிர்ந்தவர்களுக்கு ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும் அல்சைமர்நோய்க்கான (Alzheimer’s disease) காரணம் ஆகும், எனவே மஞ்சள்தூள் உணவில் சேர்ப்பதால் அல்சைமர் நோய்வருதலைத் தடுக்கமுடியும்.
·         புற்றுநோய் உயிரணுக்களைக் கொல்ல வல்லது எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக உணவுக்குழாய், குடற்புற்றுநோய்கள் வருவதைத் தடுக்கவும், குணமடையச்செய்யவும் மஞ்சள் உதவுகின்றது.
·         மஞ்சள் ஒரு சிறந்த ஒட்சியேற்று எதிரி, நச்சு எதிர்ப்பி ஆகும். இதனால் புற்றுநோய்கள், மாரடைப்பு என்பன வரும் ஆபத்து குறைக்கப்படுகின்றது.
·         வாத நோய்களைக் குணப்படுத்துமா என்பது ஆய்வில் உள்ளது. எனினும் வாத நோயால் ஏற்படும் நோயை முறிக்கின்றது எனத் தெரியவந்துள்ளது.
மேலே குறிப்பிட்டவை அனைத்தும் இன்னமும் ஆராய்வில் உள்ளது.

மஞ்சள் உபயோகம் தவிர்க்கப்படவேண்டியவர்கள் (கூடுதல் அளவில் பயன்படுத்தல்)

·         சிலவகை இதயச் செயற்பாட்டு இழப்பு
·         கல்லீரல் நோய்கள், பித்தப்பைக் கற்கள் உடையவர்கள்
பின்வருவோருக்கு மருத்துவரின் ஆலோசனை தேவை:
·         கர்ப்பமுற்ற தாய்மார், கர்ப்பமுற எதிர்பார்த்து இருக்கும் குழந்தைகள் இதுவரை பிறக்காதோர், பாலூட்டும் தாய்மார்
·         குருதி உறையா நோய் உள்ளோர்
·         வேறு மாத்திரைகள் பயன்படுத்துவோர்

இரத்த அழுத்தம்

சர்ப்பகந்தா இலைகள்   ...  இருபது இலைகள்
மூக்கிரட்டை   இலைகள் ...........  ஒரு கைப்பிடி
சீரகம்   . ............ ஒரு தேக்கரண்டி
மூன்றையும் சேர்த்து அரைத்து விழுதாக்கி நாள்தோறும் காலை மாலை கழற்சிக்காய் அளவு சாப்பிட்டுவர ஒரு வாரத்தில் குணம் அடைந்து வருவதை  உணரலாம்
இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள் கொஞ்சம் மருந்தைக் கூடுதலாகவும் சாப்பிடலாம்
நோயின் தீவிரத்தைப் பொறுத்து தினமும் காலை அல்லது மாலை ஒருவேளை மட்டும் சாப்பிடலாம்
இரத்தத்தின் அடர்த்தி குறையும்
சிறுநீரக செயல்பாடு தூண்டப் படும்
இரத்த அழுத்தத்தை சமன் செய்யும்

Sunday, 29 April 2018

ரசத்தைக் கட்டும் செப்பு நெருஞ்சில் என்னும் சிகப்பு நெருஞ்சில்

செப்பு நெருஞ்சில் அதிக அளவில் செம்பு
சத்துள்ளது. இதை பச்சையாகவே பறித்து தின்னலாம். இது சிறுநீரை அதிக அளவில் பிரிக்கும் தன்மை உடையது. பாதரசத்தைக்
கட்டக் கூடியது.

இலகு வைத்தியம்

ஒரு கைப்பிடி அளவு நாட்டு கொத்துமல்லி தழையை காலையில் வெறும் வயிற்றில் நன்றாக மென்று தின்றுவர விந்து பெருகி ஆண்மை உண்டாகும்.

பிரண்டை

பிரண்டைக்கொடி மூணு இஞ்ச் நீளம், ஒரு கணு, அதில் இருமருங்கும் இலைகள், இலைகள் புறப்படும் இடத்திலிருந்து கொடிவீசும் சல்லி வேர்கள் என நீண்டு நீண்டு போகும். சின்னப் பூவாய் வெள்ளையாயப் பூக்கும். சிறு கறிவேப்பிலைக் காய் தரத்தில் காய்த்துக் கறுப்பாக பழுக்கும். கொடியின் மூட்டில் கரும்பச்சை நிறமாகவும் தும்புப் பகுதியில் வெளிர் பச்சை நிறமாகவும் இருக்கும். பிரண்டையில் பலவகை உண்டு. பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை என நான்கு இனங்கள் உள்ளதாக பதார்த்த குண சிந்தாமணி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மாதவிடாய்_கப்

பெண்கள் தங்களது மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தக் கூடிய நாப்கின்களுக்காக பல நூறு ரூபாய்களை செலவு செய்கின்றனர்.
நாப்கின்கள் இன்றைய தலைமுறை பெண்களுக்கு வசதியானதாகவும், பயன்படுத்த எளிதானதாகவும் உள்ளது. இது போன்ற நாப்கின்களை பயன்படுத்தும் போது குறைந்தது ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறைகளாவது இதனை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியமாகிறது.
இன்றைய நவீன யுக பெண்கள் தற்போது மென்சுரல் கப்களை (#menstrual_cup) பயன்படுத்தி வருகின்றனர். இது நாப்கின்களை விட சுகாதாரமானதாகும். பயன்படுத்த எளிதானதாகும் இருக்கிறது என்று இதனை உபயோகப்படுத்தும் பெண்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இதன் மீதான முதலீடும் மிகமிகக் குறைவு தான்.

குடற்புழு பிரச்சனையை போக்கும் எளிய வீட்டு மருத்துவம்!

குடலில் ஏற்படுகிற புழுக்களின் தாக்கம் என்பது ஒருவர் வாழுமிடம், உணவுப் பழக்கம், வயது ஆகியவற்றை எல்லாம் காரணமாக இருக்கிறது. குடலில் புழுக்கள் வந்தால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும், அவற்றைத் தடுக்க என்னென்ன உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.
காரணம் : குடலில் புழுக்கள் உருவாவதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகிறது. நோய் தாக்கிய விலங்குகளை சாப்பிடுவது, அழுக்குத் தண்ணீர்,சுத்தமில்லாத இடங்களில் வசிப்பது ஆகியவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. குறிப்பாக இந்தப் பிரச்சனை குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்பட வாய்ப்புண்டு ஏனென்றால் அவர்கள் மணலில் காலணி கூட அணியாமல் விளையாடுவார் அதை விட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும் என்பதால் குழந்தைகளுக்கு ஆபத்து நேர்ந்திடும்.

குடல் இறக்க நோய்

சிற்றரத்தை,சீந்தில்,சிற்றா முட்டி, அதிமதுரம்,ஆமணக்கு வேர், நெருஞ்சில் இவைகளை சமமாக எடுத்து கஷாயம் செய்து சிறிது ஆமணக்கு எண்ணெய் கலந்து தினசரி 2 வேலை குடித்து வர குடல் இறக்க நோய் குணமாகும்…

முருங்கைக்காய் (Drumstick)

முருங்கைக்காயின் உயிரியல் பெயர் முருங்கை ஒலிபேரா. 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. முருங்கைக்காய் முதலில் இமயமலை அடிவாரம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கனிஸ்தானில் அதிக அளவு பயிரிடப்பட்டு வந்தது. தற்போது தென் இந்தியாவில் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகிறது.
ஆப்பிரிக்க மற்றும் ஆசிய கண்டங்களில் அதிக அளவு முருங்கை பயிரிடப்படுகிறது. இது வறட்சியான காலங்களிலும் நன்கு வளரக்கூடிய தன்மை உடையது. இதனால் விவசாயிகளுக்கு உகந்த பயிராக இருக்கின்றது.
ரகங்கள்:
முருங்கைக்காயில் நாட்டு முருங்கை, செடிமுருங்கை என இரண்டு வகைகள் உள்ளன. இதில் நாட்டு முருங்கையில் அதிக அளவு மருத்துவ குணங்களும் சுவையும் நிறைந்து காணப்படும். செடி முருகையில் காய்கள் நன்கு தடித்து காணப்படும், சிறிதளவு சுவை குறைந்து காணப்படும்.
செடிமுருங்கை இரண்டு ஆண்டுகள் வரை வளரும் தன்மை உடையது. அனால் நாட்டு முருங்கை அதிகபட்சம் 50 ஆண்டுகள் வரை வளரும்.

கற்பூரவள்ளி மருத்துவக் குணங்கள்

காய கற்பம் என்பது காயம் என்னும் உடலை என்றும் இளமையுடன் வைத்திருக்க உதவும் மருந்தாகும்.சித்தர்கள் தங்களின் தவப் பயனால் கண்டறிந்த மருத்துவ முறைகளில் கற்ப முறைக்கு தனிச்சிறப்புண்டு.கற்ப முறையில் 1 மண்டலம் மூலிகைகளை சாப்பிட்டு வந்தால், நோய் என்னும் காலன் நம்மை நெருங்காமல் என்றும் புத்துணர்வுடனும், இளமையுடனும் வாழலாம்.நாம் ஒவ்வொரு இதழிலும் ஒரு கற்ப மூலிகையைப் பற்றி அறிந்து வருகிறோம்.இந்த இதழில், கற்பூர வள்ளியின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வள்ளியும் நட்டு வளர்த்தனர். இரண்டும் விஷக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. கற்பூரவள்ளியை

பாலின் மருத்துவ குணங்கள்

நாளொன்றுக்கு மூன்று தம்ளர் பால் அருந்தினால் இருதய நோய் சம்பந்தமான நோய் வருவதற்கான ஆபத்து குறையும் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

பாலில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், புரதம் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.

பால் அதிகமாக குடிப்பது பார்வைக்கு பலம் சேர்க்கும்.

முருங்கை காய் பயன்

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.

பெண்கள் மாதவிடாய் வலியை போக்கும் சூப்பரான வீட்டு வைத்தியம்

பெண்களுக்கு கருமுட்டை உருவாகும் போது ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நிகழ்வுகள் ஏற்படுகிறது.

இந்த மாதவிடாய் நிகழ்வின் போது பெண்களுக்கு வயிற்றில் உள்ள கர்ப்பப்பையை சுற்றி இருக்கும் தசைகள் இறுக்கம் அடைந்து விடுகிறது.

இதனால் மாதவிடாயின் போது, பெண்களுக்கு தாங்க முடியாத வயிற்றுவலி, முதுகுவலி, இடுப்புவலி, தலைவலி, மன உளைச்சல், சோர்வு, உடம்புவலி போன்ற அனைத்து பிரச்சனைகளும் ஏற்படுகிறது.

எனவே மாதவிடாயின் போது இந்த மாதிரியான பிரச்சனைகளை தடுக்க நம் வீட்டில் உள்ளது அற்புதமான சில வழிகள்.


நீர்க்கட்டிகள் PCOD

நீர்க்கட்டி என்பது பெண்களுக்கு  சினைப்பையில் ஏற்படும் ஓர் கோளாறாகும்.  இது Poly Cystic Ovary Syndrome  அல்லது PCOD என்று ஆங்கில மருத்துவத்தில்   அழைக்கப்படுகிறது.

நீர் நிரம்பிய பல சிறிய கட்டிகள் (Cysts) சினைப்பையில் உருவாகுவதே பாலி சிஸ்டிக் ஓவரி சின்ரோம் எனப்படுகிறது.

இந்த நீர்க்கட்டிகள் குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக அமைந்துள்ளது.
எவ்வாறு இந்த குறைபாடு ஏற்படுகிறது என காரணம் கண்டுபிடிக்கப்பட வில்லை என ஆங்கில மருத்துவத்தில் சொல்லப்படுகிறது. அதனால் தற்போது  ஏராலமான செயற்கை கருத்தரிப்பு மையங்கள் உருவாகிவிட்டன.


பெண்களுக்கு பெரும் பயன் தரும் வெந்தயக்கீரை துவட்டல்

*தேவையான பொருட்கள்*

வெந்தயக் கீரை – ஒரு கப்

தேங்காய்  – ஒரு மூடி துருவியது

துவரம் பருப்பு – 100 கிராம்

சின்ன வெங்காயம் – 1 (பொடியாக அரிந்தது)

காய்ந்த மிளகாய் – 2

சோம்பு – ஒரு தேக்கரண்டி

பொரியரிசி – ஒரு கைப்பிடி

உப்பு – தேவையான அளவு


முதல் 3 மாதங்களில் கர்ப்பிணிகள் உட் கொள்ள வேண்டிய உணவுகள்!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் கவனத்துடன் நடக்க வேண்டியது அவசியமாகிறது.

மேலும் மருத்துவர்கள், இந்த காலங்களில் பெண்களை நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டுமென்றும் பரிந்துரைப்பார்கள். கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது.


அக்கி குணமாக

ஊமத்தை இலை சாறு,,சிறிது வெண்ணைய்,கொஞ்சம் மஞ்சள், சிறிது காவி கலந்து குழைத்து நாளொன்றுக்கு இருமுறை 5 நாட்கள் பூசிவர சரியாகும்.

கர்ப்பப்பை பலமடைய

ரோஜாப்பூ இதழ்களை எடுத்து நன்கு அரைத்து, அதை நெய் விட்டு வதக்கி அதனுடன் சர்க்கரை, பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை பலமடையும்.

சுக்கின் மருத்துவ பயன்கள்


🌿 தேள் கொட்டிய இடத்தில் சுக்கை அரைத்து தடவி சிறிது நெருப்பு சு+டு அதில் காட்டினால் விஷம் இறங்கும்.

🌿 உடலில் வலி, வீக்கம் போன்றவைக்கு சுக்கு சிறந்த தீர்வு எனலாம்.

🌿 சுக்கை பசு மோர் விட்டு அரைத்து சாப்பிட பேதி நிற்கும். சுக்குத்தூளுடன் நீர், வெல்லம் கலந்து சாப்பிட பித்தம் நீங்கும்.

🌿 சுக்கு, மிளகு, வெற்றிலை ஆகியவற்றை சேர்த்து அரைத்து சாப்பிட வாய்வுத்தொல்லை நீங்கும்.

நமது உடலின் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா?

Kidney : நீண்ட நேரம் கண் விழித்தல், உறக்கமின்மை.

Stomach : குளிரூட்டப்பட்ட உணவுகள்.

Lungs : புகைப்பிடித்தல்.

Liver : கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள், மது அருந்துதல்.

Heart : உப்பு நிறைந்த உணவு வகைகள்.


சிறுநீர் போகும்போது கடுகடுப்பு, எரிச்சல்

சிறுநீர் போகும்போது கடுகடுப்பு, எரிச்சல் முதலியவைகளினால் அவதிப்படுகிறவர்கள் செம்பருத்திப்பூ ஐந்து, செம்பருத்தி இலை ஐம்பது கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரிலிட்டு, கால் லிட்டராக வற்றவைத்து வடிகட்டி பாட்டிலில் பத்திரப்படுத்தவும். காலை மாலை இரண்டு அவுன்ஸ் பருகிவர, சிறுநீர் எரிச்சல் கடுகடுப்பு நீங்கும்.


நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மருத்துவம்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மருத்துவம் பற்றி தகவல்...!

சர்க்கரை நோய்க்கு இயற்கை கஷாயம் மிகவும் நல்லது. முள்ளங்கி கிழங்கு 2 எடுத்து கொண்டு நசுக்கி கொள்ள வேண்டும். வேப்பிலை, மா இலைகளை பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர், மண் பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீரில் நன்கு காய்ச்சி கொள்ள வேண்டும். தண்ணீரின் அளவு பாதியாக வற்றிய பிறகு வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும்.

தலைவலி குறைய

கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.

நச்சுகொட்டை கீரை

இடுப்பு வலியை நீக்கும், நச்சுகொட்டை கீரையை சுத்தம் செய்து பருப்புடன் மிளகு சீரகம் சேர்த்து கடைந்து ஒன்றுவிட்டு ஒரு நாள் சாப்பிட்டு வர இடுப்புவலி நீங்கும். இடுப்பு எலும்பு உறுதிபெறும்.

காலை மடக்கி உட்காரப் பழகிக் கொண்டால்.......

நாம் பொதுவாக எப்பொழுதும் காலைத் தொங்க வைத்துத்தான் அதிகமாக அமர்ந்திருக்கிறோம். இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும்பொழுது, பேருந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபா, கட்டில், சேர் இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிக நேரம் காலைத் தொங்க வைத்துக் கொண்டே இருக்கிறோம். இதனால் நமக்குப் பல நோய்கள் உருவாகின்றன. காரணம் என்னவென்றால், காலைத் தொங்க வைத்து அமரும்பொழுது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப் பகுதியில் மட்டுமே அதிகமாகச் செல்கிறது. மேல் பகுதியில் சரியாக இரத்த ஓட்டம் கிடைப்பதில்லை. நாம் காலை மடக்கிச் சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்குக் கீழே இரத்த ஓட்டம் குறைவாகவும், இடுப்புக்கு மேலே இரத்த ஓட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

காதில் சீழ் வந்தால்

ஊமத்தைஇலைசாறு,நல்லெண்ணய் சம அளவு  சேர்த்து காய்ச்சி இளம் சூடூ வந்ததும் மூன்று சொட்டுகள காதில்் விட்டால் சீழ் வடிவது நிற்கும்.

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-

கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி?

சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

தொண்டைபுண் குணமாக

சித்தரத்தையை எடுத்து இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். இந்த பொடியுடன் தேன் கலந்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.

அஜீரணகோளாறு

அஜீரணகோளாறு, மற்றும் வயிற்றுபுண்
மலச்சிக்கல்  போன்றவற்றிற்கு சிறந்த திரிபலா சூரணம் 200 மில்லி வென்னீரீல் ஒரு டீஸ்பூன் திரிபலா சூரணம் இட்டு நன்கு கலக்கி அருந்திவர மேற்கூறிய பிரச்சனைகள் நீங்கும்

வெள்ளை படுதல்

தேங்காய் எண்ணெயில் தாழம்பூ வை ஊற வைத்து அந்த எண்ணெயை அடி வயிற்றில் பெண்கள் தேய்த்து வர வெள்ளை படுதல் குணமாகும்

கால்சியம் அதிகம் இருக்கும் 19 உணவுகள்!!!

🌾பால்🌾

பாலில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பது அனைவருக்குமே தெரியும். அதிலும் பெண்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் புரோட்டீன் பொடியை சேர்த்து குடித்தால், ஒரு நாளுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறலாம்.

ஆண்மை தரும் அமுக்கரா

அமுக்கராவை பாலில் வேகவைத்து, பிறகு காயவைத்து பொடி செய்துகொள்ளவும், இதில், ஐந்து கிராம் பொடியை தினமும் காலை மற்றும் இரவு  உணவுக்குப்பின் இருவேளை சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைபாடுகள் தீரும்.


                அமுக்கரா, பாதாம், பருப்பு, முந்திரி பருப்பு, அக்ரகாரம் தலா 100 கிராம் எடுத்துபொடி செய்து கொள்ளவும் இதில், தினமும் இரவு உணவுக்குப்பின் ஐந்து கிராம் அளவுக்குசாப்பிட்டுவந்தால் உடலுறவில்  ஈடுபாடு அதிகரிக்கும்.

                அமுக்கராவை பொடி செய்து தினமும் இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை ரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்.

சோளம் பயன்கள்

சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது.

சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு.

இவை உடல் பருமனைக் குறைக்கும், வயிற்றுப்புண்ணை ஆற்றும் தன்மை இதற்கு உண்டு.


சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???

சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம்
என்பதில்தான் நல்ல உடல் நலத்துக்கான சூட்சமம் இருக்கிறதாம்.

தமிழ் நாட்டில் அதிக அளவில் சர்க்கரை நோய் இருப்பதற்கு காரணம் தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது என்று பலரும் சொல்கிறார்கள். அது தவறு.

அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்.


பலரும் இன்று குக்கரில் வேகவைத்த சாதம்
சாப்பிடுகிறார்கள்.
கஞ்சியை வடிக்காமல்
சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது.

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
மலம் கழிக்க வேண்டும்.
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.


மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும் உணவுகள்

சிலரது மனநிலை புத்துணர்ச்சியுடன் இல்லாமல்,  இருப்பதற்கு அதிகப்படியான வேலைப்பளுவும், கோபமும் தான் காரணம்.
மேலும் உடலில் மூளையை புத்துணர்ச்சியுடன் வைக்கும் சில ஹோர்மோன்களான செரோடோனின், எண்டோர்பின், டோபமைன் போன்றவை சரியான அளவில் சுரக்காததே ஆகும்.

இவ்வாறு மனதை ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வைக்கும் ஹோர்மோன்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஒரு சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் சரிசெய்து விடலாம்.


முடி கொட்டும் பிரச்னை

நாம் சாப்பிடும் உணவில் உள்ள வைட்டமின் குறைபாடு, பரம்பரைக் காரணங்கள், மரபணு மாற்றம், தலைக்கு பயன்படுத்தும் ஷாம்புவில் உள்ள ரசாயனம், கேன்சர், சர்க்கரை நோய்க்கு எடுத் துக் கொள்ளும் சிகிச்சை முறைகள், ஊட்டச்சத்து இல்லாத உணவு, மன அழுத்தம், சுற்றுச் சூழல் மாசு, வயது முதிர்வு உள் ளிட்ட பல காரணங்களால் முடி கொட்டும் பிரச் னை உள்ளது. முடிப்பிரச்னை அலோப்சியா என அழைக்கப்படுகிறது. ஒருவருக்கு 100 முடிகள் வரை உதிர்வது சாதாரண விஷயம்.

ராகி பக்கோடா

ராகி மாவு தேவையான அளவு எடுத்து பொடியாக நறுக்கிய வெங் காயம் ஒரு கப், பொட் டுக் கட லை, இர ண்டு ஸ் பூன் வெண்ணெய், நறுக் கிய கீரை ஒரு கப், உப்பு சேர்த்து சுடு தண்ணீர் விட்டு
பக்கோடா பதத்துக்கு பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த பின் பக்கோடாவாகப் போட்டு எடுக்கவும். இதில் இரும்புச் சத்து, நார்சத்து மற்றும் மைக்ரோ வைட்டமின் சத்துகள் உள்ளன.

கொத்தமல்லி சாதம்:

வேகவைத்த சாதம் 2 கப், துருவிய கேரட் அரை கப், நறுக்கிய பீன்ஸ் அரை கப், சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய கொத் தமல்லி ஒரு கப் எடுக்கவும். சீரகம், கடலைப்பருப்பு, மிளகு தலா ஒரு டீ ஸ்பூன், பட்டை கிராம்பு சிறிதளவு எடுத்து இவற்றை எண்ணெயில் வதக்கி
பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை

முகத்தில் பருக்கள் நீங்கிட - Eliminate pimples on the face

முகத்தில் பருக்கள் நீங்கிட திருநீற்றுப்பச்சிலை சாற்றை பருக்கள் மீது தடவி அரை மணிநேரம் கழித்து கழுவிடவும்.தொடர்ச்சியாக செய்துவர முகபரு மற்றும் கட்டிகள் நீங்கும்.