Friday, 31 January 2020

எலுமிச்சம் ஊறுகாய்.

எலி சாப்பிடாமல் மிச்சம் வைத்ததால் எலுமிச்சை என்ற பெயரை பெற்றதாம் .

இப்போது இந்தப்பழம் மலிவான விலையில் கிடைக்கின்றது . ஊறுகாயை ஊறுகாய் மாதிரி தொட்டு சாப்பிட்டால் உடலுக்கு நல்லது தான் . எலுமிச்சை , நார்த்தங்காய் . அதை பார்க்கும் போதே உமிழ்நீர் சுரப்பதால் ஜிரணம் ஆவது எளிது . " இதை அறிந்தவன் தான் ". ஊறுகாய் சாப்பிடக் கூடாது என்று தவறாக மக்களுக்கு விளக்கம் கொடுத்தான் .


தேவையான பொருட்கள் :-

எலுமிச்சம் பழம் 5.
கல் உப்பு 5 டீஸ்பூன் .
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்.
மிளகாய் தூள் 3 டீஸ்பூன்.
நல்ல எண்ணெய் 5 டீஸ்பூன்.
கடுகு 1 டீஸ்பூன்.
பெருங்காயம் சிறிது .

செய் முறை :-

பழத்தை கழுவித் துடைத்து சிறிய துண்டுகளாக்கி கல் உப்பு சேர்ந்து ஒரு வாரம் காலை , மாலை நல்லா கிளறி விட்டு துணி போட்டு மூடி வைக்கவும். நல்லா ஊறிய பிறகு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பிறகு கடுகு போட்டு பொரிந்த உடன் அடுப்பை அனைத்த பிறகு அந்தச் சூட்டில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயம் போட்டு எண்ணெய்யில் கிளறியபிறகு ஊறுகாய்ல சேர்த்துக் கிளறவும்.

சுவையான ஊறுகாய் ரெடி .

No comments:

Post a Comment