குப்பைமேனி இலைகளை பயன்படுத்தி நோய்களுக்கு நிவாரணம் பெற....
குப்பைமேனி இலைகள் பல விதமான மருத்துவ குணங்கள் கொண்டதாகும். இந்த இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலில் இயற்கையை இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது. தொற்று நோய்கள் சுலபத்தில் உடலை தாக்காதவாறு காக்கிறது
குப்பைமேனி இலை நெஞ்சுக் கோழையை நீக்கும். இருமலைக்கட்டுப்படுத்தும் விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய், நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.
இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும், வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும்.
இலைச்சூரணத்தைப் பொடி போல் மூக்கில் இட தலைவலி நீங்கும். இலை சிறிது மஞ்சள், உப்பு அரைத்துப் உடலில் பூசி சற்று நேரம் கழித்துக் குளிக்கத் தோல் நோய் அனைத்தும் தீரும்.
குப்பைமேனி இலைகளை மஞ்சள் தூள் மற்றும் கோரை கிழங்கு பொடியுடன் சேர்த்து முகத்தில் தடவி,அது காய்ந்த பிறகு முகத்தை கழுவ வேண்டும். இது போன்று தொடர்ந்து செய்து வர தேவையற்ற முடிகள் முளைப்பதை தடுக்கலாம்.
குப்பைமேனியின் வேரை நிழலில் இலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு சுண்டக்காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும்.
குப்பைமேனி இலையைக் கீரையாக ஆமணக்கு எண்ணெய்யில் தாளித்து ஒரு மண்டலம் தொடர்ந்து உண்டுவர வாய்வுடனே சேர்ந்த பொல்லாத சேத்துமப்பிணிகள் எல்லாவற்றையும் போக்கி, உடல் நலம் பெறும்.
மூட்டுவலியுள்ள பகுதிகளில் இதனை நன்றாகத் தேய்க்க மூட்டுவலி தீரும். வண்டுக்கடி வீக்கம் குணமாக இலையை அரைத்து வீக்கத்தின் மீது பற்றுப்போட வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் சில சமயங்களில் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல், தங்களுக்கு விருப்பமான உணவுகளை அதிகம் சாப்பிட்டு விடுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து உடலை பாதிக்கிறது. குப்பைமேனி இலைச்சாறு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அருந்துவதால் ரத்தத்தில் அதிகரித்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்

No comments:
Post a Comment