Friday, 31 January 2020

மருத்துவ பற்பொடி

கீழ்கண்ட மூலிகைகளை பொடியாக்கி பல் துலக்கி வந்தால் பல் வலி, பல்லாட்டம், ஈறு வீக்கம், ஈறுகளில் இரத்தம் வடிதல் மற்றும் வாய் நாற்றம் ஆகியவை குறையும்.

கருவேல மரம்

ஆல மரம்

தென்னங்குரும்பை

அறிகுறிகள்:
பல் வலி.
பல்லாட்டம்.
ஈறு வீக்கம்.

ஈறுகளில் இரத்தம் வடிதல்.
வாய் நாற்றம்.
தேவையான பொருள்கள்:

கருவேலம் பட்டை = 25 கிராம்
ஆலம் விழுது = 25 கிராம்
தென்னங்குரும்பை = 25 கிராம்
பூவரசன் பட்டை = 25 கிராம்
துவர்ப்பாக்கு = 25 கிராம்
நெல்லிக்காய் = 25 கிராம்
கிராம்பு = 25 கிராம்
சுத்தமான உப்பு = 25 கிராம்
செய்முறை:

கருவேலம் பட்டை, ஆலம் விழுது, தென்னங்குரும்பை, பூவரசன் பட்டை இவைகளை பச்சையாக கொண்டு வந்து சிறு துண்டுகளாக வெட்டி நிழலில் உலர்த்தவும்.
நெல்லிக்காயை கொண்டு வந்து இடித்து விதைகளை நீக்கி விட்டு நிழலில் உலர்த்தவும்.
துவர்ப்பாக்கு, கிராம்பு ஆகிய இரண்டையும் தனித்தனியாக இடித்து கொள்ளவும்.
உப்பு நீங்கலாக மீதி அனைத்து மூலிகைகளையும் ஒன்றாக போட்டு இடித்து நன்றாக பொடியாக சலித்து கொள்ளவும். இந்த பொடியில் உப்பை கலந்து பத்திரப்படுத்தவும்.
இந்த பொடியால் பல் துலக்கி வர வேண்டும்.

தீரும் நோய்கள்:

இந்த பொடியால் தினமும் பல் துலக்கி வந்தால் பல் வலி, பல்லாட்டம், ஈறு வீக்கம், ஈறுகளில் இரத்தம் வடிதல் மற்றும் வாய் நாற்றம் ஆகியவை குறையும்.

No comments:

Post a Comment