Friday, 31 January 2020

மலச்சிக்கலை போக்கும் பப்பாளி இஞ்சி ஜூஸ்

தேவையான பொருள்கள் :
பப்பாளி பழம் - 1,
எலுமிச்சை பழம் - 1,
இஞ்சி - சிறிய துண்டு,
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு,
தேன் - தேவையான அளவு.

செய்முறை..:
பப்பாளி பழத்தின் தோலை நீக்கி விட்டு, கொட்டையை எடுத்து விட்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.


மிக்சியில் நறுக்கி பப்பாளி பழம், இஞ்சி, எலுமிச்சை சாறு, தேன், ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

சுவையான பப்பாளி இஞ்சி ஜூஸ் ரெடி.

பப்பாளியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணத்தை வழங்கும்.

No comments:

Post a Comment