Friday, 31 January 2020

மருத்துவ பற்பொடி

கீழ்கண்ட மூலிகைகளை பொடியாக்கி பல் துலக்கி வந்தால் பல் வலி, பல்லாட்டம், ஈறு வீக்கம், ஈறுகளில் இரத்தம் வடிதல் மற்றும் வாய் நாற்றம் ஆகியவை குறையும்.

கருவேல மரம்

ஆல மரம்

தென்னங்குரும்பை

அறிகுறிகள்:
பல் வலி.
பல்லாட்டம்.
ஈறு வீக்கம்.

கண்வலிக்கிழங்கு

1) மூலிகையின் பெயர் -: கண்வலிக்கிழங்கு.

2) தாவரப்பெயர் -: GLORIOSA SUPERBA.

3) தாவரக்குடும்பம் -: LLIACEAE.

4) வேறு பெயர்கள் -: கலப்பைக்கிழங்கு, செங்காந்தள்மலர்,வெண்தோன்றிக் கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு, காந்தள்மலர்ச்செடி, நாபிக்கொடி, போன்றவை.

5) வகை -: க்ளோரியோசா சிற்றினங்கள், சிங்களேரி என்பன.

6) மூலப்பொரிட்கள் -: கோல்ச்சிசின் (Colchicines) மற்றும் சுப்பர்பின் (Superbine)

தயிர் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்

தயிர் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த உணவாகும். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றது. தினமும் தயிர் எடுத்துக் கொள்ளும் போது உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது. இதன் மூலம் டைப் 2 வகை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் ‘பி’ யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.

பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்.

உடல்சூடு, வயிற்றுவலிக்கு நிவாரணம் தரும் வெந்தயம்

வெந்தயம் கொஞ்சம் கசக்கும். அது தரும் பலன்களோ மிகவும் இனிக்கும். மேதி, வெந்தை, மெந்தியம் என பல்வேறு பெயர்களை கொண்ட வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும்.

சிறுநீர் பெருக்கி, காமம்பெருக்கி, உரமாக்கி என பல செய்கைகளையும் கொண்டது. ‘வெச்சென்ற மேனி மிகவுங் குளிர்ச்சியதாம் அச்சமில்லை வெந்தயத்துக்காய்ஞ்‘ என வெந்தயம் சார்ந்த பாடல், அதன் குளிர்ச்சித்தன்மை குறித்தும், பித்தம் சார்ந்த நோய்களுக்கான பயன்பாடு குறித்தும் எடுத்துரைக்கிறது.

வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி, நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் வயிற்றுவலி, உடல்சூடு, வெள்ளைப்படுதல், கழிச்சல் போன்றவற்றுக்கு நிவாரணம் கிடைக்கும். உடல் மெலிந்தவர்கள், வெந்தயம் சேர்த்து தயாரித்த அடையை, கருணைக்கிழங்குடன் சாப்பிட்டால் உடல் பருமனாகும் என்கிறது, சித்தர் தேரையரின் பாடல்.

புங்கமரம்(PONGAMIA PINNATA)

ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து புங்க மரம்தான். எந்தப் பகுதியிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடியவை. அதிக நிழலை தரக்கூடியது. பசுமை படர்ந்த மரமாக காட்சியளிக்கும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும். சாலை ஓரங்களில் நிழல் தரவும்,, மண் அரிப்பைத் தடுக்கவும் புங்கை மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

புவி வெப்பமயமாதலை தடுக்கும் தன்மையுள்ள மரங்களில் புங்க மரமும் ஒன்று. வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி சீரான சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தும் குணம் இதற்கு உண்டு.

புங்க மர விதையிலிருந்து பயோடீசல் (Biodisel) உருவாக்கும் திட்டத்தைப் பற்றி மஹாராஷ்டிர அரசு ஆலோசனை செய்து வருகிறது. இந்த விதைகளிலிருந்து 30 - 40 சதவீத எண்ணெய்ச் சத்து உள்ளதாக கண்டறிந்துள்ளனர்.

தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, புழுக்களும் வெளியேறிவிடும்.

இதய பிரச்சனைகளான ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க மற்றும் உடல் உறிஞ்ச தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற மிக சிறந்தது.

பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது. சமைத்தால் அதன் இயல்பு தன்மை வெகுவாக பாதிக்கப்படும். இயற்கையாகவே, சமைத்து கெடாத பூண்டு துண்டங்களை நன்கு கடித்து உமிழ் நீரில் செரிமானம் செய்தலே, பூண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் சரியான முறையாகும்.

பிஸ்தா பருப்பில் உள்ள மருத்துவ குணங்களும் அதன் பயன்களும்....!!

பிஸ்தா சாப்பிடுவது, உடலில் உள்ள கெட்ட எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கும், ஆரோக்கியம் தரும் எச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கும். டைப் 2 நீரிழிவு நோயில் இருந்தும் பிஸ்தா காக்கிறது. ஒரு கப் பிஸ்தா பருப்பில் 60 சதவீதம் மினரல், பாஸ்பரஸ் இருக்கிறது.

பிஸ்தா பருப்பு வைட்டமின் ஏ மற்றும் இ போன்ற சக்துக்கள் உள்ளதால் இரத்த நாளங்களை பாதுகாக்கும். மேலும் இதயநோய் அபாயத்தை குறைக்கும் சக்தி கொண்டது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. அதோடு இது, செல்களுக்கு ஆக்சிஜனையும் கொடுக்கிறது.

பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

சத்துக்கள்:

வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது.

முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.

மருத்துவ பயன்கள்:

1. அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி பலனைத் தரும்.

அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனையை எதிர்த்துப் போராடவும் வெள்ளை பூசணி சாறு உதவும்.

சப்போட்டா பழத்தின் பயன்கள்

சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை.

இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதையும் தடுக்கும் சக்தி கொண்டது.இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு கூட சப்போட்டா பழம் நல்ல மருந்தாக அமைகிறது .

சப்போட்டா பழ ஜூஸ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு டம்பளர் சப்போட்டா பழ ஜூஸ் குடித்தால், நன்கு தூக்கம் வரும்.

நாவல் பழம்

நாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா...!

நாவல் பழங்கள், விதை, இலை மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது.

நாவல் பழத்தின் விதையை பொடி செய்து, அதனை நீரில் கலந்து குடிக்கலாம். இல்லாவிட்டால், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு குடித்து வரலாம்.

செல்போன்களில் மூழ்கிடும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன...?

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் எந்த நேரமும் செல்போன்களில் மூழ்கிக்கிடப்பதையே பார்க்கமுடிகிறது. செல்போனை வெகுநேரம் பார்ப்பதால் சிறுவயதிலேயே கண்பார்வை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது.

இணைய தகவல்களை அள்ளிக் கொண்டு வருவது முதல், செல்பி, போட்டோக்கள், வீடியோக்கள், விளையாட்டுகள் என அத்தனை வாய்ப்புகளையும் ஸ்மார்ட்போன்கள் வாரி வழங்குகின்றன. இதனால் ஸ்மார்ட் போன் வைத்திருப்போரின் சுட்டுவிரலுக்கும் வேலைப்பளு அதிகமாகிவிட்டது.

தேன் - தினை லட்டு

தேன் - தினை லட்டு.:

தேவையான பொருட்கள்.:
தினை மாவு - ஒரு கப்,
வெல்லம் (அ) கருப்பட்டித் தூள் - முக்கால் கப்,
தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய் - ஒரு டீஸ்பூன்.

சுரைக்காய் ஜூஸ்

சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா...?

சுரைக்காய் ஜூஸ் தயாரித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான அமிலம் மட்டுப் படுத்தப்படும் மற்றும் சுரைக்காயில் சக்தி வாய்ந்த சிறுநீர்ப் பெருக்கியாக செயல்படுகிறது.

சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ்,இரும்புச் சத்து, வைட்டமின் பி போன்றவை உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்க சுரைக்காய் ஜூஸை குடித்தால் கல்லையும் ஜீரணுக்கும் சக்தியை கொடுக்கும்.

பீட்ரூட்

இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவும் பீட்ரூட்...!!

இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

தேமல்

முகம் அழகாகவும், உடல் ஆரோக்கியமாக இருக்கும் பலர் தேமல், சொரி, படையை போக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

குளியல் சோப்பை மாற்றினாலும், தேமல் தொல்லை மறைவதில்லை. உடல் அரிப்பும், நமைச்சலும் குறைவதில்லை. அதற்காக மருந்து மாத்திரை சாப்பிட்டால், அது தற்காலிகமாக மறைந்து மீண்டும் வந்து விடுகிறது.

இதற்கு ஒரே வழி, உடலில் இயற்கையான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்கிறது இயற்கை மருத்துவம்.

வெப்ப மண்டல பகுதிகளில் வசிப்போருக்கு, தோல் நோய்கள் அதிகம் வருகிறது. இது பெரியவர் முதல் சிறியவர் வரை, யாரையும் தாக்கலாம். இருப்பினும், இளம்பருவத்தினருக்கே தேமல் அதிகம் வருகிறது.

அரிப்பு

அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் நம்மை ‘எச்சரிக்கை மணி’ அடிக்கும் அறிகுறிதான் அரிப்பு. நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் எதிராளி தொல்லை கொடுத்தால், உடனே தோலைச் சொறிய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகிற ஓர் எதிர்வினை இது.

இது சில நேரம் இதமாகவும், இன்பமாகவும் இருக்கும். அதுவே பல நேரம் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதாக மாறிவிடும். உடலியல்ரீதியில் சொன்னால் அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. இதைச் செயல்படுத்துவது நம் தோலில் உள்ள ‘#மாஸ்ட்_செல்கள்’.

குப்பைமேனி இலை

குப்பைமேனி இலைகளை பயன்படுத்தி நோய்களுக்கு நிவாரணம் பெற....

குப்பைமேனி இலைகள் பல விதமான மருத்துவ குணங்கள் கொண்டதாகும். இந்த இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலில் இயற்கையை இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது. தொற்று நோய்கள் சுலபத்தில் உடலை தாக்காதவாறு காக்கிறது

குப்பைமேனி இலை நெஞ்சுக் கோழையை நீக்கும். இருமலைக்கட்டுப்படுத்தும் விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய், நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.

இறைவன் தந்த வாழ்க்கையில்

இறைவன் தந்த வாழ்க்கையில் !!!*

*1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.*

*2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.*

*3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.*

*4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.*

*5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.*

சித்த மருத்துவக் குறிப்புகள்!!

உடலை நோயின்றி வைக்கும் சித்த மருத்துவக் குறிப்புகள்!!

தலைவலி, மூக்கடைப்பு நீங்க: நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி 1/2 லிட்டர் சாறு எடுத்து அதில் அளவு உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணையை கொதிக்க வைத்து அதில் நெல்லி சாறு கலந்து கொதிக்க வைத்து கொண்டு மூக்கில் நுகர தலைவலி போகும்.

தலைவலி குணமாக: விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.

இருமல் குணமாக: அரசு மரத்துப்பட்டையை காயவைத்து வறுத்து கா¢யானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீரில் 1 கரண்டி போட்டு கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை பால் சேர்த்து குடிக்க இருமல் குணமாகும்.

அரைக்கீரை

இயற்கையில் கிடைக்கும் அற்புத சத்துக்கள் நிறைந்த அரைக்கீரை!!

அரைக்கீரையிலுள்ள சத்துக்கள் தாய்ப்பாலில் கலந்து பிறந்த குழந்தைக்கு நோய் அணுகாமல் தடுக்கின்றன; குழந்தைக்குப் பலத்தையும் உரத்தையும் ஊட்டி வளர்க்கும் தன்மை பெற்றது.

அரைக்கீரையை மிளகு ரசத்துடன் உண்ண நோய்களைக் கண்டித்து நல்ல குணமளிக்கும். ஏனெனில் அரைக்கீரை சூடு; மிளகு நீர் குளிர்ச்சி. இவ்விரண்டும் ஒன்று சேருமேயானால் உடல் நலத்தைச் சமன்படுத்தி ஒரு சீராக வைத்திருக்க உதவுகிறது.

அரைக்கீரையுடன் துவரம் பருப்பு உலர்ந்த மிளகாயும் சேர்த்து தாளிதம் செய்த அவியலானது இருமல், கபஇருமல் போன்ற நுரையீரல் காய்ச்சல்களைக் கண்டிக்கவல்லது. வாயுவைப் போக்கும். குளிர்ந்த தேகத்தோருக்கு உதவும். மூலநோய் உள்ளவர்களுக்கு ஆகாது.

அருகம்புல்லின் பயன்கள்

இயற்கை மருத்துவத்தில் அருகம்புல்லின் பயன்கள்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.

பலன்கள்:

* நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். இரத்த அழுத்தம் குணமாகும்.

* வயிற்றுப் புண் குணமாகும். நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

சர்க்கரைக்கொல்லி (சிறுகுறிஞ்சான்)

1. வேறுபெயர்கள்- சிறுகுறிஞ்சான், இராமரின் ஹார்ன், சிரிங்கி.

2. தாவரப்பெயர்- Gymnema Sylrestre, Asclepiadaceae.

3. வளரும் தன்மை- இது ஒரு கொடிவகைப் பயிர். எதிர் அடுக்கில் அமைந்த இலைகளையும் இலைக்கொணத்தில் அமைந்த பூ கொத்துக் களையும் உடைய கற்றுக் கொடி. இதனுடைய இளங்கொடி பசுமையாகவும், அதன் மேல் வெளிரிய பசுமையுடன் இலைகளும், மஞ்சள் நிறப்பூக்களும் இருக்கும். இக்கொடி பசுமை இலைக் காடுகளிலும், பருவமழைக் காடுகளிலும் காணப்படும்

கொத்தமல்லி கீரையின் பயன்கள்

தினம்தோறும் கடைகளிலும், சந்தைகளிலும் காய்கறிகள் வாங்கும்போது கொஞ்சம் கொத்தமல்லி தழையை கொடுப்பார்கள். காசில்லாமல் இனாமாக கிடைக்கும் கொத்தமல்லி தழையை உணவில் வாசத்திற்காக சேர்ப்பதாய் நாமும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதன் மருத்துவ குணங்கள் காலத்திற்கும் நம்மை ஆரோக்யமாக வாழ வழி செய்யக்கூடியவை.

கொத்தமல்லி கீரை வகையை சார்ந்தது. இதை வீட்டு தோட்டங்களிலும், சிறு தொட்டிகளிலும் கூட எளிதாக வளர்க்கலாம்.

ஒரே மாதத்தில் 10 கிலோ வெயிட் குறைக்கலாம்

இதை ஒவ்வொரு நாளும் குடித்து வந்ததால் ஒரே மாதத்தில் 10 கிலோ வெயிட் குறைக்கலாம்

சில இயற்கையான மருந்துப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த நீர் உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புகளை மிக எளிமையாகக் கரைத்துவிடுகிறது.
அப்படிப்பட்ட இந்த இயற்கை பானத்தை தினமும் காலையில் குடித்து வந்தால், எந்த அதிகப்படியான டயட்டும் இல்லாமல் ஒரே மாதத்தில் 10 கிலோ வரையிலும் எடையைக் குறைக்க முடியும்.

தேவையான பொருட்கள்

சீரகப்பொடி – 1 ஸ்பூன்
பட்டைத்தூள் – கால் ஸ்பூன்
இஞ்சி பவுடர் – அரை ஸ்பூன்
எலுமிச்சை தோல் – 2 துண்டு

ஒரு வாரத்தில் நரம்பு தளர்ச்சி நீங்கி ஆண்மை பெற

உடல் கட்டுக்கோப்பாக இருப்பதற்கு எலும்பும்,நரம்பும் தான் காரணம்.வளர்ச்சி அடைந்த எலும்பு தளராது ஆனால் நரம்பில் தளர்ச்சி ஏற்படும் பலம் குறையும் இதன் காரணமாக உடல் சோர்வு அடையும்,கை கால்கள் சக்தி இழந்த நிலை தோன்றும்.சிலருக்கு கை கால் நடுக்கம் ஏற்படும்,சோம்பல் ஏற்படும்,வேலையில் உற்சாகம் இருக்காது,உடல் உறவில் இன்பம் காண முடியாது,ஆண்குறி தளர்ச்சி அடையும்.இந்த கோளாறுகள் ஏற்பட்டவுடன் இவர்கள் இதை வெளியில் சொல்வதில்லை,நாளடைவில் இவர்கள் உடல் மோசமாகி பல கஷ்டங்களையும் அனுபவிப்பார்கள்.இவர்கள் உடலை தேற்றிக்கொள்வதற்கு இயற்கை மருத்துவம்

காளான்

காசநோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புத்தன்மை வழங்கும் சிறந்த மருத்துவ உணவாக காளானை பயன்படுத்தலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

காச நோயை உருவாக்கும் பாக்டீரியா கிருமிகள், நோய் தாக்கியவர்களின் உடலில் வைட்டமின்-டி சத்துக்களை சேரவிடாமல் தாக்குதல் நடத்திவிடுகிறது. உடலின் அத்தியாவசிய வைட்டமின்களில் ஒன்றான இது தடுக்கப்படுவதால் நோயாளிகள் தீவிரமாக பாதிக்கப்பட்டு மரணத்தை எதிர்கொள்கிறார்கள்.

இதற்காக வைட்டமின்-டி நிறைந்த உணவுப்பொருட்களை காசநோயாளிகளுக்கு வழங்குவது வாடிக்கை. தற்போது அவர்களுக்கு சிறந்த மாற்று உணவுப்பொருளாக சிப்பிக் காளானை வழங்கலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார் ஜெர்மனைச் சேர்ந்த ஹோகென்கெய்ம் பல்கலைக் கழக மருத்துவ முனைவர் பட்ட ஆய்வாளர் சேயோம் கெப்லி.

லிச்சி பழத்தை சாப்பிடுவதால் என்னெவெல்லாம் பயன்கள்

லிச்சி பழத்தை சாப்பிடுவதால் என்னெவெல்லாம் பயன்கள் உண்டு தெரியுமா!!

லிச்சி பழத்தில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த லிச்சி பழம் பார்ப்பதற்கு பிங்க் நிறத்தில், முட்டை வடிவில் இருக்கும். இந்த லிச்சி பழம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையுடன் இருக்கும்.

லிச்சி பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் வயிற்று கோளாறுகள் உள்ளவர்கள் இந்த லிச்சிப் பழம் அதிகளவு உட்கொள்ளவது மிகவும் நல்லது.

சின்ன வெங்காயம்

எதற்கெல்லாம் மருந்தாகிறது சின்ன வெங்காயம் தெரியுமா...?

வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், வெங்காயத்தை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும் காரணம் ஆகும்.

வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. ஜலதோஷம் வந்தால் ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.

முருங்கை இலையை பொடி செய்து சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்!!

முருங்கையின் காய்கள், வேர்கள், பட்டை, மலர்கள், விதைகள், பட்டை, மலர்கள், விதைகள் அனைத்தும் மருத்துவ குணம் மிகுந்தவை.

முருங்கை பொடியில் பல ஊட்ட சத்துக்கள் உள்ளடக்கியது. முருங்கையில் அதிகளவு விட்டமின்களும், மினரல் மற்றும் அமினோ ஆக்ஸிடண்டுகள் உள்ளன.

முருங்கை இலை பவுடரில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள், செல்களில் ஏற்படும் சேதம், மன அழுத்தம், வீக்கங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துகின்றன. உடலில் உள்ள உயிரணுக்கள் சேதமாவதை தடுக்கவும் இது உதவுகிறது.

முருங்கை இலையின் பொடியானது பல்வேறு அழற்சிகளில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது. குறிப்பாக நீரிழிவு, கார்டிவாஸ்குலர் இதய நோய், ஆர்த்தரிட்டிஸ், உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது.

இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் மூலிகைகள்!

குறைந்த எண்ணிக்கையிளான பிளேட்லெட் (இரத்த தட்டு) களின் எண்ணிக்கை ஒருவரின் ஆரோக்கியக் குறைபாடைக் குறிக்கின்றது. சரியான அளவை விட கீழே குறையும் பிளேட்லெட்களின் எண்ணிக்கை ஒருவர் நோய்வாய்பட்டிருக்கின்றார் என்பதைக் குறிக்கின்றது.

மருத்துவ உலகம் இந்த நோயை த்றோம்போசைடோபீனியா என அழைக்கின்றது. ஒருவருக்கு சாதாரண சூழ்நிலையில், ஒரு மைக்ரோ லிட்டர் ரத்தத்தில் சுமார் 1,50,000 முதல் 4,50,000 க்கு இடையேயான எண்ணிக்கையில் பிளேட்லெட்கள் உள்ளன. அதே நபர் நோய் வாய்ப்பட்டால் இந்த எண்ணிக்கை சுமார் 1,50,000 க்கு கீழ் சென்று விடும்.

கருப்பு திராட்சை

கருப்பு திராட்சை விதைகளில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் பயன்கள்...!

திராட்சை சதைகளில் கிடைக்கும் மிகப் பெரிய சத்து புரோ ஆன்தோ சயனிடின் என்பதாகும். இதையே புரோ சயனிடின், பைக்னோ ஜெனால் என்பதுண்டு. இந்த புரோ ஆன்தோ சயனிடின் திராட்சை சதைகளில் 20 உள்ளது. ஆனால் அதன் விதைகளில் 80 உள்ளது.

கருப்பு திராட்சை விதைகளில் புரோ ஆன்தோ சயனிடின் 80 உள்ளது. அதே போல் நாம் உண்ணுகின்ற மற்ற பழங்களிலும், காய்கறிகளிலும், தேநீரிலும் கூட இச்சத்து உள்ளது. சத்துக் கிடைக்கும் அளவு மிகமிகக் குறைவாகும். திராட்சை விதைகளின் சத்தில் எவ்விதமான பக்கவிளைவுகளும் கிடையாது.

பித்தப்பை கற்கள்!

பித்தப்பை என்பது நமது உடலில் கல்லீரலில் ஒரு பகுதியுடன் இணைந்திருக்கும். பல்வேறு காரணங்களால் பித்தபையில் கற்கள் உருவாகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் பித்தப்பை கற்கள் வரலாம்.

பித்தப்பை என்றால் என்ன?

பித்தப்பை என்பது நமது உடலில் பேரிக்காய் வடிவம் போன்று காணப்படும் ஒரு உறுப்பு. இது கல்லீரலின் ஒரு பகுதியுடன் இணைந்து இருக்கும். 7 முதல் 12 செ.மீ. நீளம் இருக்கும். அதன் கொள்ளளவு 50 மி.மீ. இதன் மற்றொரு பகுதி வயிற்றுடன் இணைந்து இருக்கும். நாம் ஒவ்வொரு முறை உணவு

வெள்ளரி

வெள்ளரியின் கொழுந்து, பிஞ்சு, காய், பழம், வேர் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது. நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரியைச் சாப்பிடுவதால் தாகம் தணிப்பதோடு, நாவறட்சியைப் போக்கி பசியை உண்டாக்கக்கூடியது. மேலும் சிறுநீர் பிரிவைத் தூண்டுவதோடு இரைப்பையில் ஏற்படும் புண், மலச்சிக்கலைக் குணப்படுத்துகிறது.

மலச்சிக்கலுக்காக ஏதேதோ மருந்து சாப்பிடுகிறவர்கள் தினமும் இரண்டு வெள்ளரிக்காய்களை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்னை இல்லாமல் குடல் சுத்தமாகி விடும். உடலுக்குக் குளிர்ச்சியை உண்டாக்கக்கூடியது என்பதால் வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு இது அருமருந்தாகிறது

உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...?

உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...?

* குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது...

* அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது...

* கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது...

* அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது...

* ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது. சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்க...

எலுமிச்சம் ஊறுகாய்.

எலி சாப்பிடாமல் மிச்சம் வைத்ததால் எலுமிச்சை என்ற பெயரை பெற்றதாம் .

இப்போது இந்தப்பழம் மலிவான விலையில் கிடைக்கின்றது . ஊறுகாயை ஊறுகாய் மாதிரி தொட்டு சாப்பிட்டால் உடலுக்கு நல்லது தான் . எலுமிச்சை , நார்த்தங்காய் . அதை பார்க்கும் போதே உமிழ்நீர் சுரப்பதால் ஜிரணம் ஆவது எளிது . " இதை அறிந்தவன் தான் ". ஊறுகாய் சாப்பிடக் கூடாது என்று தவறாக மக்களுக்கு விளக்கம் கொடுத்தான் .

மகளிர் மருத்துவம்

திருமணமான – திருமணமாகாத பெண்களுக்குப் பொதுவாக வரும் நோய்களும் அவற்றிற்கான மருந்துகளும் கீழ்வருமாறு :

1. வெள்ளைபடுதல் – அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகி வர நிற்கும்.

2. பிறப்புறுப்பில் புண் – மாசிக்காயை அரைத்துத் தடவிவர ஆறும்

3. சீரற்ற மாதவிலக்கு – அரிநெல்லிக்காயைப் பச்சையாகச் சாப்பிட்டு வரச் சீர்பெறும்.

4. மாதவிலக்குக் கால வயிற்றுவலி – முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர நிற்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் என்ன...?

உடல் சக்தி என்பது மிகவும் முக்கியம். உடல் சக்தி குறைந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து போகும், இது வலுவிழந்தால் தானாய் நோய் பாதிப்புகள் அதிகரிக்கும். எனவே, உடல் சக்தியானது நமக்கு மிகவும் முக்கியமானது அதனை சரிசெய்ய நாம் அன்றாட உனவில் சாப்பிடவேண்டிய உணவுகள் பற்றி பார்ப்போம்.

டீ: கிரீன் டீ மற்றும் ப்ளேக் டீ இரண்டுமே நமது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு வலுவை அதிகரிக்கும் தன்மை கொண்டவை ஆகும். ஆயினும் கூட ஓர் நாளுக்கு ஓரிரு தடவைக்கு மேல் நீங்கள் இவற்றை பருகுவதை தவிர்க்க வேண்டும்.

கற்பூரவல்லி மருந்துக் குழம்பு

கற்பூரவல்லி மருந்துக் குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்:

கற்பூரவல்லி இலைகள் – 2 கப், மிளகு, சீரகம், ஓமம், சுக்கு, வெந்தயம், தனியா – தலா ஒரு ஸ்பூன், ஆய்ந்த கறிவேப்பிலை – ஒரு கப், உரித்த பூண்டு – கால் கப், புளி – எலுமிச்சை அளவு, நல்லெண்ணெய் – ஒரு கப், கடுகு, மஞ்சள்தூள் – தலா ஒரு ஸ்பூன், பொடித்த வெல்லம் – 2 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கற்பூரவல்லி இலைகளை அலசி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் வாணலியில் மிளகு, சீரகம், ஓமம், சுக்கு, வெந்தயம், தனியா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் ஒன்றாகப் போட்டு நைசாக பொடிக்கவும். புளியை கெட்டியாக கரைத்து

முட்டியை வலுப்படுத்தும் முட்டை கோஸ் இலை..!

முட்டைக்கோஸ் பல நூற்றாண்டாக மூட்டு வலியை சரிசெய்யும் நிவாரணியாக செயல்பட்டு வருகிறது.

இதற்கு காரணம் இதில் உள்ள வைட்டமின், பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள்,க்ளூட்டமைன், ஆந்தோசையனின்கள் ஆகியவை தான் காரணம்.

காய்கறிகளில் மிகவும் உட்டச்சத்து மிகுந்த காய்கறி முட்டைகோஸ்.

இதில் வைட்டமின் சி, கே மற்றும் பொட்டாசியம் அதிகளவில் உள்ளது.

மலச்சிக்கலை போக்கும் பப்பாளி இஞ்சி ஜூஸ்

தேவையான பொருள்கள் :
பப்பாளி பழம் - 1,
எலுமிச்சை பழம் - 1,
இஞ்சி - சிறிய துண்டு,
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு,
தேன் - தேவையான அளவு.

செய்முறை..:
பப்பாளி பழத்தின் தோலை நீக்கி விட்டு, கொட்டையை எடுத்து விட்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

Thursday, 16 January 2020

A GUIDE TO ESSENTIAL OILS

அத்தியாவசிய எண்ணெய்களுக்கான வழிகாட்டி

இன்று உங்கள் வேலை நாள் எப்படி சென்றது? சில நேரங்களில் அவை மிகவும் நிறைந்ததாகவும் மன அழுத்தமாகவும் இருக்கக்கூடும் என்பதை நாங்கள் காண்கிறோம். அது அப்படியே பெறத் தொடங்கும் போது, ​​அரோமாதெரபி ஆவியாக்கிக்குச் சென்று காற்றை சிறிது அமைதியாக நிரப்ப விரும்புகிறோம். எங்கள் அத்தியாவசிய எண்ணெய்களின் அற்புதமான நறுமணம் எப்போதும் தெளிவையும் கவனத்தையும் மீட்டெடுக்கிறது.

தேவைப்படும் காலங்களில், அத்தியாவசிய எண்ணெய்கள் நேர்மறையாக இருக்க நமக்கு மிகவும் பிடித்த வழியாகும், ஒவ்வொரு நறுமணமும் கடினமான காலங்களில் வேறுபட்ட

THE BENEFITS OF OLIVE LEAF

ஆலிவ் இலைகளின் நன்மைகள்

ஆலிவ் இலை என்பது ஒரு பாரம்பரிய மருந்தாகும், இது பண்டைய எகிப்துக்கு முந்தைய மருத்துவ பயன்பாட்டிற்கான தோற்றம் கொண்டது. அந்த நேரத்தில் அதன் ஆண்டிமைக்ரோபியல் எண்ணெய்கள் எகிப்திய மன்னர்களை மம்மியாக்க பயன்படுத்தப்படுகின்றன.

இது பின்னர் பல்வேறு கலாச்சாரங்களுக்கு பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஜப்பானியர்கள் குடல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க இதை எடுத்துக்கொள்கிறார்கள், அதே நேரத்தில் கிரேக்கத்தில் இது உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.


Asparagus

அஸ்பாரகஸ்

நீங்கள் அஸ்பாரகஸை நேசிக்கிறீர்கள் மற்றும் நீங்களே வளர விரும்பினால், தொடங்குவதற்கு நேரத்தை வீணாக்காதீர்கள். சிறந்த கவனிப்புடன் கூட, ஒரு அஸ்பாரகஸ் படுக்கை பல ஆண்டுகளாக அதன் முன்னேற்றத்தைத் தாக்காது. ஆனால் அது நடந்தவுடன், படுக்கையானது வசந்த காலத்திற்குப் பிறகு குறைந்தது அடுத்த 20 முதல் 30 வருடங்களுக்கு ஏராளமான ஈட்டிகளை வளர்க்கும்.

படுக்கையைத் தயாரித்தல்
பழைய நாட்களில், தோட்டக்காரர்கள் 18 "ஆழமான அகழியைத் தோண்டி அஸ்பாரகஸ் படுக்கையைத் தயாரிக்கும்படி கூறப்பட்டனர், பின்னர் அதை உரம் மற்றும் மண்ணின் கலவையுடன் நிரப்புகிறார்கள். நியூ ஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்திலும் பிற இடங்களிலும் தாவர

Thursday, 2 January 2020

List of Fruits


  1. Apple
  2. Avocado
  3. Banana
  4. Blackberry
  5. Blackcurrant
  6. Blueberry
  7. Cherry
  8. Grape
  9. Kiwifruit

List of Vegetables


  1. Asparagus
  2. Beans
  3. Beet
  4. Broccoli
  5. Brussels sprouts
  6. Cabbage
  7. Carrot
  8. Cauliflower
  9. Celery
  10. Chinese cabbage
  11. Corn

Install Plugin in Wordpress

We can install plugin using three methods in wordpress. We can see briefly about all the three methods for plugin installation in this post.

After Wordpress installation we should know the basic things in the wordpress like Theme installation, Plugin installation, Menu Creation, Posts Management and Page Management.