Monday, 28 January 2019

கொட்டாவிக்கு பின்னால் இருக்கும் ஆச்சரியமான உண்மை

நமது வாயைப் பெரிதாக திறந்து வாய் மற்றும் மூக்கு வழியாக காற்றை சுவாசிப்பதை கொட்டாவி என்கிறோம். மேலும் கொட்டாவியானது நமக்கு வரும் போது நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் தொடரும்.



இதனால் கொட்டாவியை தொற்று செயல் என்று கூறுவார்கள். கொட்டாவியானது சோர்வு, சலிப்பு, மன அழுத்தம் மற்றும் ஆர்வமின்மை போன்றவற்றில் உண்டாகிறது. நாம் சோர்வாக இருக்கும்போது நம் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் குறைவாக கிடைப்பதால் மூச்சு விடுவது மெதுவாக இருக்கும்.


மேலும் கொட்டாவி விடும்போது உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதுடன் ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான கார்பன்-டை-ஆக்சைடு உடலில் இருந்து வெளியேறும்.

கொட்டாவி விடும்போது அதிகப்படியான அழுத்தம் காரணமாக கண்ணீர் சுரப்பிகள் தூண்டப்பட்டு கண்களின் ஓரத்தில் நீர் வருவதற்கு காரணமாக உள்ளது. மேலும் இதன் காரணமாகவே கொட்டாவி விடும்போது கண்களை மூடி கொள்கிறோம்.

No comments:

Post a Comment