Tuesday, 29 January 2019

பிள்ளை வளர்த்தி என்னும் வசம்பு மூலிகை

வசம்பு மூலிகையை கிராமத்தில் பிள்ளை வளர்த்தி என்றும் பெயர் சொல்லாத மருந்து என்றும் அழைப்பர்.

வசம்பு எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.வசம்பை தண்ணீர் விட்டு உரசி சிறிது தேன் விட்டு குழந்தைகள் நாக்கில் தடவ
திக்கு வாய் மாறி நன்றாக பேசும்.
தொற்று நோய் நீங்கும்.
விஷப் புழுக்கள் அகலும்
பசியைத் தூண்டும்.

வசம்பை தண்ணீரில் ஒரு நாள் ஊற வைத்து பாசி போல் அறுத்து குழந்தைகள் இரு
கைகளிலும் கட்டி விடுவார்கள்
அக்குழந்தைக்கு சீர்அடிக்ககாது
தொற்று நோய் பரவாது.





ஒரு வெள்ளை துணியில் சோற்றுப்பு கரைசலில் நனைத்து வசம்பில் எழு சுற்று சுற்றி துணி கருக நெருப்பில் சுட்டு வசம்பை பிரித்து அரைத்து பத்திரப் படுத்தவும்.
வசம்பும் கருகி இருக்க வேண்டும்.

வாந்தி பேதி உள்ள குழந்தைக்கு லசம்பு சுட்ட
சாம்பலில் ஒரு அரிசி அளவு எடுத்து தேனில் குழப்பி கொடுக்க ஒரே வேளையில் பேதி நிற்கும். மற்றும் வயிற்றில் ஏதேனும் உணவு
தங்கி இருந்தாலும் வெளியே வந்து விடும்.

No comments:

Post a Comment