பின்பற்ற ♦வேண்டியவைகள் :-
நிறைய காய்கறிகள் சாப்பிட வேண்டும்
நிறைய பழம்கள் சாப்பிட வேண்டும்
நிறைய தண்ணீர் சாப்பிட வேண்டும்
தினமும் நீண்ட தூரம் நடக்க வேண்டும்
சின்ன சின்ன வீட்டு வேலைகள் செய்யலாம்
♦பின்பற்ற ♦வேண்டாதவைகள் :-
எண்ணெய் கலந்த உணவுப்பொருட்களை தவிர்த்தல் நல்லது.
கர்ப்பம் அடைந்த ஐந்து மாதங்களுக்கு மேல் கடினமான
வேலை பார்க்ககூடாது.
ஒரே நினையில் தூங்க கூடாது.
நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டாம்.
பப்பாளி, எள் போன்ற உணவுப்பொருட்களை தவிர்த்தல் நல்லது.
♦சுகப்பிரசவம் - மற்ற குறிப்புகள் :-
மகப்பேறு காலத்தில்
உணவு முறை,
வாழ்க்கை முறை
சிந்தனை முறை
ஆகியவை சரியாக பின்பற்றப்பட வேண்டும்.
இவை மூன்றும் தாயும்,
சேயும் நலமாக இருக்க நேரடி தொடர்பு வகிக்கிறது.
தாய் உட்கொள்ளும்
உணவு கருவின் வளர்ச்சியிலும், குழந்தை பிறந்த
பிறகு தாயின் உடல்
நலனிலும் பங்கு வகிக்கிறது. கர்ப்பக்காலத்தில் முதல் மூன்று
மாதங்களிலும் மற்றும் 7-ம் மாத முடிவிலும் உடல்நலனில் அதிக
அக்கறை செலுத்த வேண்டும்.
இந்த காலக்கட்டத்தில் தாய்க்கு திரவ உணவுகள்
மற்றும் பழங்கள்
பரிந்துரைக்கப்படுகிறது.
இது கரு வளர்வதற்கு
பெரிதும் பயன்படுகிறது. ஆகவே, திரவ உணவுகளான பால், இளநீர்,
பழம் மற்றும் பழச்சாறுகள் ஆகியன எடுத்துக் கொள்ளவேண்டும்.
முதல் மாதம் மற்றும்
இரண்டாம் மற்றும் மூன்றாம் மாதங்களில் பால்மற்றும் மென்மையான உணவு வகைகளையும், கொடுக்க வேண்டும்.மூன்றாம் மாத
முடிவிலிருந்தே சிசு உணவை தாயின் இரத்தத்தின் மூலம்
ஏற்றுக்கொள்கிறது. ஆகவே இருவர் உணவும் ஒரே உணவாக
அமைகிறது. இந்த காலங்களில்
இவர்கள் சில உணவுப்பொருட்களை
விருப்பப்பட்டு கேட்க நேரும். நாம் அதை பூர்த்தி செய்யவேண்டும்.
அதே நேரத்தில் தேவையற்ற உடல் பருமனை தவிர்க்க உணவு
கட்டுப்பாடு முக்கியமானதாகும்.
இக்காலக்கட்டத்தில் சிசுவுக்கு
தொப்புள் கொடியின் வழியாக ஆகாரம் கிடைக்கிறது.
அரிசி சாதம்,
பால், நெய், வெண்ணெய், பழ வகைகள் மற்றும் காய்கறிகள் சிறந்த உணவுகளாகும்.இந்த வகையான உணவுகள் சிசுவின் வளர்ச்சிக்கும், தாயின் உடல் நலத்திற்கும் சிறந்ததாகும். முக்கியமாக கர்ப்பகாலத்தில்
சத்து நிறைந்த உணவுக்கான பருப்பு வகைகள் மற்றும் நெல்லிக்காய் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மருத்துவ குணம் கொண்ட
மூலிகை பொருள்களான அஸ்வகந்தா, கிரான்ச்,
சிந்தில் கொடி
ஆகியவை தசைகளுக்கு பலமாகவும், கருவிற்கு சிறந்த போஷாக்காகவும் அமைகிறது.
கொழுப்பு உப்பு மற்றும் நீரைச்சற்று குறைத்து,
அரிசி கஞ்சியை நெய்யுடன் சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு துளசியை உட் கொண்டால் பிரசவ வலி குறையும்.
♦கர்ப்பிணி பெண்கள் எளிதாகக் குழந்தை பெற விதி:
1)சிவனார் வேம்பு கொண்டுவந்து முலைப்பாலில் அரைத்து தொப்புளில் சுற்றி தளமாய்ப்பூசினால் சீக்கிரத்தில் பிரசவமாகும்.
2) பசலையிலைச்சாறு அரிக்கால்படி,நல்லெண்ணெய் அரிக்கால்படி இவ்விரண்டையும் ஒன்றாய்க்கலந்து கொடுக்க எளிதில் பிரசவமாகும்.யாதொரு வலியும் இல்லாமல் நஞ்சுக்கொடியும் விழும்.
3) சாதம் கொதிக்கும்போது ஒரு தம்ளர் நீர் எடுத்து அதனுடன் பசு வெண்ணெய் சிறிது போட்டு சீரகத்தூள் கலந்து தினசரி குடிக்க வேண்டும். எப்போதும் வீட்டில் சுக்கு காப்பி போட்டு வைத்துக்கொண்டு அவ்வப்போது குடிக்க கொடுத்து வர வேண்டும். சுக்கு காப்பியில், சுக்கு, மிளகு, திப்பிலி, அக்கரா, சித்தரத்தை, நறுக்குமூலம் ஆகிய மூலிகைகளுடன் சாரணை வேர் கட்டாயம் சேர்த்து தயாரித்து கொடுக்க வேண்டும்.
பிற மூலிகைகள் ஐந்து கிராம் சேர்த்தால் சாரணை வேர் 10 கிராம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கடைசி மாதத்தில் ஆடாதோடை வேர் கஷாயம் 200 மிலி கொடுக்க வேண்டும். இது இடுப்பு எலும்புகளை இளக்கமாக (flexible) வைத்துவிடும். இதனால் எடை அதிகம் கொண்ட குழந்தையாகவோ மாலைசுற்றிய குழந்தையாகவோ இருந்தால் கூட நிச்சயம் சுகபிரசவம்தான்.
4) சுகமான பிரசவம் ஆக
காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் ஆகும்.
5) சுகப்பிரசவம் ஆக:
முடக்கற்றான் இலையைத் தேவையான அளவுகொண்டு வந்து அதைக் காரமில்லாத அம்மியில் வைத்து மை போல்அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ, களைப்போ தோன்றாது. மருத்துவமனை அருகிலில்லாத கிராமங்களில் உள்ள மருத்துவம் பார்க்கும் பெண்களும், பாட்டி மார்களும் இந்த முறையையே கையாண்டு வருகின்றனர். இது கை கண்ட முறையாகும்.
6) சுகப் பிரசவத்திற்கு...
அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.
7) சுகப்பிரசவம் ஆக
ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள் தொடர்ந்து
சாப்பிட்டுவர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.
8) குங்குமப் பூ கர்ப்ப சூடு எனும் உடல் சூட்டை சமப்படுத்தும்.
எனவே கர்ப்பிணிகள் 5ஆம் மாதம் முதல் இரவில் நாள் தோறும்
பாலில் இட்டு காய்ச்சி குடித்து வர, பிறக்கப்போகும் குழந்தை
கர்ப்ப சூடும், நோயும் இன்றி அழகுடன் விளக்கும்.
9) பாலைக் காய்ச்சும்போதே ஒரு சிட்டிகை குங்குமப் பூவை
போட்டு நன்கு காய்ச்சிக் குடிப்பது கர்ப்பிணிகளுக்கு நல்லது.
10) நடைப் பயிற்சியும், வீட்டு வேலைகளை குனிந்து நிமிர்ந்து
செய்வதும், கர்ப்பப்பைக்கு தளர்ச்சியைக் கொடுத்து
சுகப் பிரசவம் ஆக வழி வகுக்கும்.
11) பிரசவ வலி வந்தும், குழந்தை வெளியில் வராமல் இருக்குபோது, 4 கிராம் குங்குமப் பூவை பாலில் கரைத்து குடிக்கக் கொடுத்தால் உடனடியாக சுகப்பிரசவம் ஆகும்.
12) கர்ப்பிணிகள் வெற்றிலையுடன் சிறிது குங்குமப் பூவை சேர்த்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.
13) கர்ப்பிணிகளுக்கும் குங்குமப்பூ ஒரு வரப்பிரசாதம். கரு உண்டான நாள் முதல், காய்ச்சிய பசும்பாலில் ஒரு சிட்டிகை குங்குமப்பூவைச் சேர்த்து இரவில் அருந்தி வந்தால் சுகப்பிரசவம் ஏற்படும். கருவுற்ற ஐந்தாம் மாதத்தில் இருந்து ஒன்பதாம் மாதம் வரை இதைச் சாப்பிடுவதன்மூலம் தாய்க்கும் சேய்க்குமாகச் சேர்த்து முழுப் பலன் கிடைக்கும்.
14) பிரசவ காலச் சிக்கல் ஏற்படக்கூடும் என மருத்துவர் சொல்லியிருந்தால்,
பெருஞ்சீரகத்தை (சோம்பு) நீர்விட்டுக் கொதிக்க வைத்து, அரை சிட்டிகை அளவு குங்குமப்பூ சேர்த்துச் சாப்பிடக் கொடுத்தால் சிரமம் இல்லாமல் குழந்தை பிறக்கும்.
சோம்பை நீர்விட்டு காய்ச்சி கஷாயமாக்கி அதில் 5 கிராம்
குங்குமப் பூவை கரைத்துக் கொடுக்க பிரசவம் எளிதாகும்.
பொதுவாக, 7-வது மாதத்திலிருந்து இந்தப் பெருஞ்சீரக டீயைக் குடிக்கலாம். ஆனால், குங்குமப்பூ சாப்பிடுவதால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும்
என்பதெல்லாம் மூடநம்பிக்கை.
15) குழந்தை பிறந்ததும், 3 கிராம் குங்குமப் பூவை விழுதாக அரைத்து சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் அழுக்குகள் நீங்கும்.
குழந்தை பிறந்த பிறகும் குங்குமப்பூவைச் சாப்பிட்டு வருவதன் மூலம் பிரசவ அழுக்குகள் வெளியேறும். உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் ரத்தத்தைச் சீராக எடுத்துச் செல்ல குங்குமப்பூ உதவுவதால், செரிமானமும் பசியும் மேம்படும். மேலும், இது இரைப்பைக் குடலில் ஒரு ஜவ்வு போல ஏற்படுத்தி அசிடிட்டியில் இருந்தும் பாதுகாக்கும்.
♦ஆரம்ப மாதங்கள்ல……
வாய்வு அதிகம் உள்ள உணவுகளான வாழைக்காய், உருளைக்கிழங்கு, இறால்மீன் எல்லாம் சாப்பிடக் கூடாது.
♦கர்ப்பமான நாள் முதல், பிரசவமாகுற வரைக்கும்... !!!
முருங்கை இலை, சின்ன வெங்காயம், சீரகம் எல்லாத்தையும் சேர்த்து சூப் வெச்சு சாப்பிட்டு வந்தா... சுகப்பிரசவமாகும்.
மூனாவது மாசம் முதல், பிரசவமாகற வரைக்கும் வெந்தயக்கஞ்சி சாப்பிடறது சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும்.
வெந்தயம் ஒரு ஸ்பூன்,
பூங்கார் அரிசி ரெண்டு ஸ்பூன் உடைச்சுப் போட்டு கஞ்சியா காய்ச்சி... பால் சேர்த்து, மூணு நாளைக்கு ஒரு தடவை சாப்பிடலாம்.
5-வது மாசத்துல இருந்து எலுமிச்சை அளவு வெண்ணெயை, ஒரு டம்ளர் கொதிநீர்ல கலந்து காலை அல்லது மதிய வேளையில சாப்பிடலாம்.
7-வது மாசத்துக்குப் பிறகு, சின்ன வெங்காய வடகத்தை பொரிச்சி, அதில ஒரு டம்ளர் தண்ணிவிட்டு கொதிக்க வெச்சு அரை டம்ளரானதும் குடிக்கலாம். இதை வாரத்தில 2 நாள் செஞ்சுட்டு வந்தா சுகப்பிரசவமாகும்.
கர்ப்ப காலங்கள்ல சிலருக்கு
கை - கால் வீக்கம் வரும். இதுக்கு நெல்லிக்காய்,முருங்கைக்காய், முள்ளங்கி சாப்பிடலாம்.
ஒரு சிட்டிகை பெருஞ் சீரகத்தை சட்டியில போட்டு வறுத்து வெடிச்சதும் தண்ணிவிட்டு காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம்.
பத்து குப்பைமேனி இலையை மென்னு சாப்பிடலாம்... இதெல்லாம் வீக்கத்தை வடிச்சுடும்.
★இந்த நேரத்துல கருஞ்சீரகம், அன்னாசிப்பழம், வெல்லம் சாப்பிடக் கூடாது. அது கருவைக் கலைக்கலாம்.
பிரசவ நாள் நெருங்கினதும் சிலருக்கு அடிக்கடி வயிறு வலி வரும். அது சாதாரண வலியா இருக்கலாம். அஞ்சு வெத்திலை, ஒரு ஸ்பூன் ஓமம், 3 பூண்டு எடுத்து, ஓமத்தை வறுத்து அது வெடிச்சதும் நசுக்கிய பூண்டு, பிய்த்துப்போட்ட வெத்திலை எல்லாத்தையும் போட்டு ஒண்ணரை டம்ளர் தண்ணி விட்டு கொதிக்க வெச்சி, முக்கா டம்ளரானதும் எலுமிச்சை அளவு வெண்ணெய் இல்லைனா பனைவெல்லத்தை சேர்த்துக் குடிச்சா... சாதாரண வலியா இருந்தா நின்னுடும்.
★வலி தொடர்ந்தா, மருத்துவச்சிக்கிட்ட போக வேண்டிய நேரம் வந்தாச்சு!!
♦நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பெண்களை வீட்டில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாகவே பார்த்துக் கொள்வார்கள்.
எனினும், சில முறைகளை அவர்கள் கையாள வேண்டும்.
அதாவது, நிறைமாதமாக இருக்கும் பெண்கள் அதிகமாக சாப்பிடக் கூடாது. அளவோடுதான் சாப்பிட வேண்டும். அதிமாகச் சாப்பிடுவதாலும் வயிற்று வலி ஏற்படலாம். அதனால் பயந்து மருத்துவமனைக்கு ஓடும் நிலை ஏற்படும்.
தண்ணீர் அவ்வப்போது குடித்து வர வேண்டும். குளிர்ந்த நீரைப் பருக வேண்டாம். சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும். பிரசவ காலத்தில் சளி பிடிப்பது பிரச்சினைக்குரியதாக ஆகிவிடும்.
மிகவும் கடினமான காரியங்களில் ஈடுபடக் கூடாது. வேலை செய்தாலும் மிகவும் சாதாரணமாகவும், அமர்ந்த நிலையில் தான் வேலை செய்யலாம்.
வெயிலில் அலைவதோ, மிகவும் கூட்டமான இடத்திற்குச் செல்வதோ தவிர்க்கப்பட வேண்டும்.
வீட்டிற்கு அருகில் உள்ள கார் அல்லது ஆட்டோ ஓட்டுநரின் செல்பேசி எண்ணை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். உங்களது நிலையை விளக்கி, எப்போது அழைத்தாலும் உடனே வருவதற்கு அறிவுறுத்தி வையுங்கள்.
குதிகால் அதிக உயரம் கொண்ட செருப்புக்களை அணியாதீர்கள். அதிகமான நகைகளையும் அணிந்திருக்காதீர்கள்.
சுகப்பிரசவம் நடக்க சில வழிமுறைகள்…
கர்ப்பிணிகள் வீட்டு வேலைகளை செய்து வந்தாலே எளிதாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு. முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை ஊன்றித்தான் எழுந்திருக்க வேண்டும்.
ஒருக்களித்தபடி படுக்கும் போது வயிறு தளர்வான நிலையில் இருக்கும். ஆனால் மல்லாந்து படுத்தால் வயிறு இழுத்த நிலையில் இருக்கும். அப்படி இருக்கும் போது கரு குழந்தையாக உருவாவதில் சிக்கல் ஏற்படும். அதன் பிறகும் மல்லாந்து படுப்பதை தவிர்க்க வேண்டும். மல்லாந்து படுத்தால் குழந்தைக்கு குடல் சுற்றிக் கொள்ளும் ஆபத்து ஏற்படும்.
அதேப்போல, ஒரு பக்கம் ஒருக்களித்து படுத்திருக்கும் போது அடுத்த பக்கத்திற்கு அப்படியேத் திரும்பக் கூடாது. எழுந்து உட்கார்ந்து பிறகுதான் அடுத்த பக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். இது குழந்தை சுகப்பிரசவம் ஆக உதவும். இப்போதெல்லாம் இந்த பழக்கத்தை நிறைய கர்ப்பிணிகள் கடைபிடிப்பதில்லை. அதனால்தான் குழந்தை தலை திரும்புவதில் பிரச்சினை ஏற்படுகிறது.
தலை திரும்பாமல் இருந்தால் சிசேரியன் மூலமாகத்தான் பிரசவமாகும். மேலும், எல்லோருமே குனிந்து நிமிர்ந்து வேலை செய்தாலே சுகப்பிரசவமாகும். வீட்டு வேலைகளை தாங்களாகவே செய்து கொண்டால் எல்லோருக்கும் சுகப்பிரவமாகும் வாய்ப்பு உள்ளது. அதேப்போல கர்ப்பிணிகள் ஏற்கனவே யோகாசனம் செய்து வந்து கொண்டிருந்தாலும் முதல் மூன்று மாதங்களுக்கு செய்யக் கூடாது.
அதன் பிறகும் எளிதான பயிற்சிகளை செய்யலாம். ஆனால் கர்ப்பம் தரித்த பிறகு புதிதாக யோகாசனம் செய்யவேக் கூடாது. சுகப்பிரசவம் ஆவதற்கான ஆசனத்தையும் 7ஆம் மாதத்தில் இருந்து செய்யத் துவங்கலாம். ஆனால், சுகப்பிரசவம் ஆவதற்கு எந்த பயிற்சியும் தேவையில்லை. நீங்கள் சுறுசுறுப்பாக உங்கள் வேலைகளை செய்து கொண்டு வந்தீர்களானால்.
ஒரு வேளை எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்களுக்குத்தான் இந்த பயிற்சிகள் தேவைப்படும். மேலும், வீட்டில் குனிந்து நிமிர்ந்து செய்யும் வேலைகளான வீட்டை பெருக்குதல், துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்யும் போது வயிறு சுருங்கி விரியும் தன்மையை பெறுகிறது. தற்போது சில பெண்களுக்கு சுகப்பிரவம் என்றால் பயம் ஏற்படுகிறது. சிசேரியன்தான் எளிது என்கிறார்கள். முதலில் அந்த பயத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும்.

No comments:
Post a Comment