Monday, 28 January 2019

நகச்சுற்று ஏற்படக் காரணங்கள்

நகச்சுற்று ஏற்படக் காரணங்கள் :

​♡ நகச்சுற்று என்பது நகக்கண்ணில் வரும் புண் அல்லது நகத்தின் வெளி ஓரமாகவோ அல்லது நகத்தைச் சுற்றியுள்ளப் பக்கங்களில் உள்ள நகமடலின் தோலில் ஏற்படும் ஒரு வகை கிருமித்தொற்று தான் நகச்சுற்று. அவ்விடம் வீங்கிச் சற்று சிவந்து கடுமையான வலியையும் ஏற்படுத்தும். தொட முடியாதளவு கடும் வலி ஏற்படுத்தும்.

​♡ நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குத்தான் இது மிக அதிகமாக ஏற்படுகிறது.




​♡ கை சூப்பும் பழக்கம் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும்.

​♡ நகத்தை வெட்டும்போது சற்று ஆழமாக வெட்டி நகமடலைச் சேதமாக்குவதால் ஏற்படும் சிறுகாயங்களில் கிருமித் தொற்றிச் சீழ் பிடிப்பதால் நகச்சுற்று ஏற்படுகிறது.

​♡ சில சருமநோய்களால் ஏற்படுகிறது. பெம்பிகஸ் போன்ற நோய்களால் சருமத்தின் மிருதுத்தன்மை பாதிப்படையும்போது அதில் கிருமித்தொற்று ஏற்பட்டுகிறது.

​♡ சமையல் வேலைஇ தோட்ட வேலைஇ தச்சு வேலை போன்ற காயம் ஏற்படக்கூடிய எந்த வேலைகளின் போதும் தற்செயலாக அவ்விடத்தில் ஏற்படும் சிறுகாயங்களில் கிருமி தொற்றி நகச்சுற்றை ஏற்படுத்தும்.

​♡ நகத்தின் ஓரமாகச் சிலருக்கு தோல் வளர்ந்து நீட்டிக்கொண்டிருக்கும். இதனை ஆங்கிலத்தில் ர்யபெ யேடை என்பார்கள். இதைப் பிய்த்து எடுக்க முயலும் போது அல்லது கத்தரியால் வெட்டும்போதும் காயம் பட்டுச் சீழ்பிடித்து அதனால் நகச்சுற்று ஏற்படுகிறது.

​♡ பொதுவாகக் காயம் ஏற்பட்டு 2 முதல் 5 நாட்களில் அவ்விடத்தில் வலி தோன்றும். பின்னர் சீழ்ப்பிடித்து வீங்க ஆரம்பிக்கும்.


​நகச்சுற்று வராமல் தடுக்கும் முறைகள் :

​♡ நகத்திற்கு அருகாமையில் உள்ள மென்மையான இடங்கள் காயப்படாது வைத்திருப்பதே நகச்சுற்றைத் தவிர்க்க ஒரே வழியாகும்.

​♡ நகத்தையும் அதைச் சுற்றியுள்ள சருமத்தையும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

​♡ நகங்கள் வளரும்போது இடுக்குகளில் அழுக்குகள் தேங்க வாய்ப்பிருக்கிறது.

​♡ நகம் வெட்டும் போது அருகில் உள்ள சருமம் பாதிக்கப்படாதவாறு கவனமாக வெட்ட வேண்டும். குளித்த பின் நகங்கள் மென்மையாக இருக்கும்போது வெட்டுவதால் அருகில் உள்ள சருமம் பாதிக்கப்படாது.

​♡ பாக்டீரியாஇ பூஞ்சைகள் தேங்காத வண்ணம் அடிக்கடி கை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

​♡ நல்ல கூரான நகவெட்டியை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

​♡ கை நகங்களின் முனைப்பகுதி சற்று வளைவாகவும்இ கால் நகங்களானது நேராகவும் இருக்குமாறு வெட்ட வேண்டும்.

​♡ நகங்களை ஒட்ட வெட்டுவது தவறு.

​♡ நகம் கடிப்பதை தவிர்க்க வேண்டும்.


​நகச்சுற்று வந்தபின் காக்கும் முறைகள் :

​♡ வெந்நீரில் 10-15 நிமிடங்களுக்கு விரல்களை மூழ்க வைப்பதன் மூலம் சரியாகும். தினமும் 4 தடவைகள் செய்ய சரியாகும்.

​♡ மருத்துவரிடம் சென்றால்இ கிருமியெதிர் மருந்துகளை (யவெiடிழைவiஉள) உபயோகிப்பதன் மூலம் ஆரம்பத்தில் குணப்படுத்த முடியும்.

​♡ சற்று அதிகமானால் அவ்விடத்தை மரக்கச் செய்வதற்கு ஊசி மருந்து போட்ட பின் கீறி சீழை அகற்றுவதன் மூலம் குணப்படுத்தலாம்.

​♡ தண்ணீர் படாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

​மருத்துவம் :

​♡ ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்புஇ நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்துஇ ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலைஇ மாலை வைத்துக்கட்டினால் நோய் குறையும்.

​♡ மருதாணி இலையை அரைத்து பூசி வர நகச்சுற்று குணமாகும். இது நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்றுஇ புண்இ சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது. மேலும் நகங்களைப் பாதுகாக்கும் அரணாக மருதாணி விளங்குகிறது.

​♡ நகக்கண்ணில் புண் அல்லது நகச்சுற்று ஏற்பட்டவர்கள் மருதாணி இலையை அரைத்து நகத்தின் மீது பற்று போட்டால் நகக்கண்ணில் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.

​நகங்கள் பராமரிப்பு :

​தேயிலை மர எண்ணெய் :

​ இரவு தூங்குவதற்கு முன் தேயிலை மர எண்ணெயில் பஞ்சை நனைத்து நகங்களை சுத்தம் செய்யுங்கள். தினமும் செய்து வரஇ இறந்த செல்கள் அகன்று ரத்த ஓட்டம் அதிகரிக்கும். நகங்கள் புதுபிக்கப்படும்.

​மஞ்சள் :

​ தினமும் குளிப்பதற்கு முன்இ மஞ்சள் பொடியை ஆலிவ் எண்ணெயில் கலந்துஇ நகங்களில் தடவி வட்ட வடிவமாக மசாஜ் செய்யுங்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து குளிக்கச் செல்லலாம். இது நல்ல பலனைத் தரும். நகங்களில் ஏற்படும் தொற்றினை இது எதிர்க்கும்.

​எலுமிச்சை சாறு :

​ எலுமிச்சை சாறினை பஞ்சினால் நனைத்து அதனை நகங்களில் பூசி வந்தால்இ பூஞ்சை தொற்று மற்றும் அழுக்குகள் நீங்கும்.

​வேப்பிலை :

​ வேப்பிலை மிகவும் சக்தி வாய்ந்த மூலிகை. ஒரு கைப்பிடி வேப்பிலையை எடுத்துஇ ஒரு கப் அளவுள்ள நீரில் போட்டு கொதிக்க வையுங்கள். நன்றாக கொதி வந்ததும்இ வடிகட்டிஇ அந்த நீரில் சிறிது பூண்டுஇ எண்ணெய் மற்றும் தேயிலை மர எண்ணெயை ஊற்றி நன்றாக கலக்கி பின் அதை நகங்களில் தடவி வந்தால்இ சொத்தை மறைந்துஇ நகங்கள் பலம் பெறும்.

​சாமந்தி :

​ சாமந்தி பூக்கள் மருத்துவ குணங்கள் பெற்றுள்ளவை. சருமத்தில் ஏற்படும் தொற்றுக்களை எதிர்க்கும். சாமந்தி பூக்களை தனித் தனி இதழ்களாக பிரித்துஇ சுடு நீரில் போட்டு மூடி வையுங்கள். 20 நிமிடங்கள் கழித்து அந்த நீரில் கால்களை அமிழ்த்துங்கள். இவை நகங்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றன.

​அதிமதுரம் :

​ அதி மதுரத்தை நீரில் போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். பின்னர் நீர் வெதுவெதுப்பானவுடன் அந்த நீரில் பஞ்சை நனைத்துஇ மெதுவாய் நகங்கள் மீது தடவவும். இது நகத்தில் தங்கும் கிருமிகளை அழித்துஇ நகங்களை பாதுகாக்கும்.

No comments:

Post a Comment