Tuesday, 8 September 2020

ஞானப்பழ கதையில்
நாரதர் கொண்டு வரும் ஞானப்பழத்தை ‘ஞானத்தின்’ குறியீடாகக் கொள்வோம்.

அதை அவர் பங்கிடக்கூடாது என்கிறார். அதாவது, ஞானம் என்பது பங்கிட முடியாதது; அதாவது முழுமை அல்லது நிறைவு.

உலகைச் சுற்றி வரும் போட்டி’க்கு வருவோம். உலகம் எதை உலகம் எனச்சொல்கிறதோ அதைச் சுற்ற முருகன் கிளம்பிவிடுகிறான்.

விநாயகனோ தான் எதை உலகம் என நினைக்கிறானோ அதை முதன்மைப்படுத்துகிறான்.

எளிமையாகச் சொல்வதானால்

முருகனைச் சமூகப்பார்வையாகக் கொள்ளலாம்; விநாயகனைத் தனியொருவனின் பார்வையாகச் சுட்டலாம்.

யாருக்கு ஞானம்(பழம்) கிடைக்கிறது, விநாயகனுக்கு அல்லவா? இக்கதையின் வழியாக நான் பெற்ற மூன்று புதிய செய்திகள் : 1)

ஞானப்பழத்திற்கான போட்டி விநாயகன், முருகன் எனும் குழந்தைகளுக்காகவே நடத்தப்படுகிறது. எனவே, ஞானம் என்பது குழந்தை மனோநிலை உள்ளவர்களுக்கே சாத்தியமாகிறது.

2) உலகம் முன்வைக்கும் வாழ்வை வாழ்கிறவனுக்கு ஞானம் கிட்டவே வாய்ப்பில்லை. எவனொருவன் தான் நினைக்கும் வாழ்வை வாழ்கிறானோ அவனுக்கே அது சாத்தியம். இன்னும் நுட்பமாகப் பார்க்க முருகனைப் புற உலகாகவும், விநாயகனை அகஉலகாகவும் நினைத்துக் கொள்ளுங்கள்.

3) வெளியே சுற்றித்திரும்பும் முருகனுக்குப் பழம் கிடைக்கவில்லை. அங்கேயே இருக்கும் விநாயகனுக்கே கிடைக்கிறது. ஆக, ஞானம் என்பது எங்கேயோ, எதிலோ இல்லை. அங்கேயே, அப்போதே இருக்கிறது."

No comments:

Post a Comment