Tuesday, 8 September 2020

அருள்மிகு ஸ்ரீ மருதாம்பிகை சமேத ஸ்ரீ மல்லீஸ்வர் திருக்கோயில்,. ரங்கமலை,

அருள்மிகு ஸ்ரீ மருதாம்பிகை சமேத ஸ்ரீ மல்லீஸ்வர் திருக்கோயில்,.
ரங்கமலை,
ஆலமரத்துப்பட்டி,
அரவக்குறிச்சி வட்டம்,
கரூர் மாவட்டம்.

 ( ஸ்ரீ விஷ்ணு பெயரில் அமைந்துள்ள இந்த ரங்க மலையில், சிவபெருமான் ஆலயம் அமைந்துள்ளது இம்மலைச்சிறப்பு.

( 🤔தன் தங்கையை திருமணம் செய்த ஈசனுக்கு, ரங்கநாத பெருமாள் தந்த அன்பு பரிசு என்கிறார்கள்)

கரூர் to திண்டுக்கல் (NH-7) தேசிய நெடுஞ்சாலையில் நீங்கள் சென்றிருந்தால், திருவண்ணாமலை தோற்றத்துடன் அதை விட சற்று பெரிதாக (சுமார் 3500-அடி உயரம்) அருட்காட்சியளிக்கும் இந்த ரங்கமலை நிச்சயம் உங்கள் பார்வை தரிசனம் கண்டிருக்கும்.



 (கரூர்- திண்டுக்கல் மாவட்ட எல்லையைப் பிரிக்கும் இம்மலைக்குச் செல்ல   வனத்துறையின் அனுமதி அவசியம்)

 அரிய வகை மூலிகைச்செடிகளும், மரங்களும், பல வகையான பறவைகளும் குடிகொண்டிருக்கும் இம்மலையின்
கரடு முரடான பாதையில் மலையேறினால் 1500-அடி உயரத்தில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட நம் இனிய ஈசனின் ஆலயமும், அடுத்த 700-அடி உயரத்தில் கார்த்திகை தீபத்தன்று ஏற்றப்படும் தீப கும்பமும், மலை உச்சியில், சிவ லிங்கமும் நந்தியும், (மலையின் காவல் தெய்வமாம்) சிறிய முனீஸ்வரர் ஆலயமும் தரிசனம் காணலாம்.

 மகா சிவராத்திரி, கார்த்திகை தீபம் மற்றும் ஆடி பெருக்கு பண்டிகை இம்மலை தலத்தின் முக்கியமான பண்டிகை நாட்களாகும்.

 இப்பகுதி மக்களால்,
முக்தி தரும் திருவண்ணாமலையைப்போல எண்ணி வழிபடப்படும் இந்த ரங்கமலை ஈசன் தம்பதியை வழிபட, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் நிச்சயம் என்கிறார்கள்).

No comments:

Post a Comment