Tuesday, 8 September 2020

விநாயகரின் உருவத்தின் உண்மையான அர்த்தம்

விநாயகரின் உருவத்தின் உண்மையான அர்த்தம் எதைக் குறிக்கிறது தெரியுமா??

மேலும் சிறுவயதில் முதல்  பின் வரும் இந்த பாடலை நாம் பலமுறை பாடி இருக்கிறோம், கேட்டு இருக்கிறோம் .ஆனால் இந்த பாடலின்  உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..?

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகந்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே!


இதன்  பொருள்..

ஐந்து கரங்கள் என்பது ஐந்து புலன்கள்...
யானை முகம் என்பது எமது புலன்களின் அறிவு செயற்படும் மூளையை கீழ்ப்புறமாக நோக்கின் தெரியும் வடிவம்.... இந்தின் இளம்பிறை போன்ற கொம்புகள் என்றால் இளஞ் சந்திரன் போன்ற வளைந்த கொம்புகள் உடைய நம் புருவங்கள், அதுவே சிவத்தை மறைத்துக்கொண்டிருக்கும் நந்தியின் கொம்புகள்..
அந்தக் கொம்புகளுக்கு நடுவே புருவமத்தியில் கொழுந்து விட்டு தகிக்கும் ஞானத்தைத் தரும் சிவத்தின் திருவடியை எனது புத்தியில் வைத்துப்  போற்றுகிறேன் என்பதே..

ஆகவே மூளைக்கு நடுவில், புருவமத்தியில் இருந்து உள் நோக்கித் தெரியும் அறிவினை தூய்மைப்படுத்தும் ஜோதிவடிவான இறைசக்தியை எமது அறிவில் இருத்தி தியானிக்க வேண்டும் என்பதே இந்த பாடலில் மறைந்துள்ள  உண்மையான யோக அர்த்தம்..!!

No comments:

Post a Comment