சைவ சமயத்தில் சிவபெருமான் அவதாரம் எடுப்பதில்லை. பக்தர்களுக்கு அருளும் பொருட்டு அவர் வடிவம் மட்டுமே எடுக்கிறார். சைவத்தில் சிவனின் திருவடிவங்கள் மூர்த்தங்கள் எனப்படும். சைவத்தில் சிவனுக்கு 64 மூர்த்தங்கள் உள்ளது. அந்த மூர்த்தங்களில் ஒன்று முகலிங்க மூர்த்தி ஆவார்...
சிவபெருமானின் வழிபாடு, சிவலிங்க வழிபாடு(சகளம்-உருவ வழிபாடு , நடராஜர் வழிபாடு, சோமாஸ்கந்தர் வழிபாடு என பரவலாக உள்ளது .
சகளம், சகளத் திருமேனி என்று அறியப்படும் அருவுருவ நிலையானது, சதாசிவ வடிவமாக இருக்கும் முகலிங்கத்தினை குறிப்பதாக அமைகிறது. சிவலிங்கத்தில் முகம் இருந்தால் நாம் அதை முகலிங்கம் என்போம். அத்தகைய முகலிங்கம் நான்கு வகைப்படும். அவை ஆட்யம், அநாட்யம், சுரேட்டியம், சர்வசமம் என்பனவையாகும். இதில் ஆட்யம் என்பது 1001 லிங்கமுடையது. சுரேட்டியம் என்பது 108 லிங்கமுடையது. அநாட்டிய , சுரேட்டிய லிங்கங்கள் திருமுகங்களைப் பெறாதவையாகும்.சர்வசமம் என்பது ஐந்து முகம் பெறும்.
இதில் லிங்கவடிவ சிவபெருமான் ஒரு முகலிங்கம், இரு முகலிங்கம், மும்முக லிங்கம், சதுர் முகம் எனப்படும் நான்கு முகலிங்கம், ஐந்து முக லிங்கம் என வகைப்படுத்தப்படுகிறது. இதில், பஞ்சமுக லிங்கம் (ஈசானம், தத்புருடம், அகோரகம், சத்யோஜாதம், வாமம் என ஐந்தும் அடங்கும். பிரம்ம, விஷ்ணு, ருத்ர, மகேஸ்வர, சதாசிவமே முகலிங்கம் எனப்படுகிறது. இந்த ஐவரும் ஐந்தொழில்களை நடத்துகின்றவர். இவற்றிற்கு ஆதார சக்தியாக உள்ளவன்.) கொண்ட சிவதலம் இந்தியாவின் வடக்கே நேபாளத்திலும், தெற்கே காளகஸ்தியிலும் உள்ளது.
மும்முகம் கொண்ட லிங்கம் இந்தியாவிலேயே நம் தமிழகத்தில்
1 . திருவக்கரை சங்கரமௌலீஸ்வரர் கோவில்
2 . கும்பகோணம் அருகே கொட்டையூர் கோடீஸ்வரன் கோவில்
3 . காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில்
ஆகிய மூன்று இடங்களில் அமைந்துள்ளது.
இந்தியாவில் வேறெங்கும் இல்லை .
1 . திருவக்கரை சங்கரமௌலீஸ்வரர் கோவில்
திருவக்கரையில் அமைந்துள்ள சங்கரமௌலீஸ்வரர் கோயிலில் முகலிங்கமூர்த்தி சதுரமான அடி பாகத்தின் மீது அமைந்துள்ள வட்ட வடிவமான ஆவுடையாரின் மேல் மும்முகத்துடன் மூலவராக காட்சிக்கொடுக்கிறார். மூலவர் சங்கரமௌலீஸ்வரர் மும்முக லிங்கத்தின் தெற்கே அகோர முகத்தில் வாயின் இரு ஓரத்திலும் கோரைப் பற்கள் காணப்படுகின்றன. இத்தலத்தில் காளி கோவிலின் எதிரில் மேற்கே ஆத்மலிங்கம் உள்ளது. இது கண்ட லிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த லிங்கம், கோடைக் காலத்தில் குளிர்ச்சியாகவும், மழைக் காலத்தில் லிங்கத்தின் மேல் பகுதியில் நீர்த்துளிகள் மழைத் துளியைப் போல படிவதைக் காண முடியும்.
சந்நிதிக்கு எதிரில் வக்ராசுரன் பூசித்த பெரிய 'வக்கிர லிங்கம் ' உள்ளது. அர்த்த மண்டபத்தில் நடராசர் கால் மாறியாடும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்; தூக்கிய திருவடி இடுப்புக்குமேல் வரை வந்துள்ளது. இதை 'வக்கிர தாண்வம் ' என்று குறிப்பிடுகின்றனர். தேவாரப் பாடல்பெற்ற ஸ்தலம்.
கி.மு.756ஆம் ஆண்டில் வராக நதிக்கரையோரம், பல்லவர்களின் கலைவண்ணத்தில் உருவான இந்தக் கோவிலில் அம்பாள் சந்நிதிக்கு எதிரே மயான பூமி உள்ளது. ஆதி சங்கரர் அங்கு வந்து வக்கிரகாளியை சாந்தம் செய்து இடது பாதத்தில் ஸ்ரீ சக்ர ராஜ எந்திரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். இங்குள்ள சித்தர் சந்நிதியில் அமர்ந்து தியானிப்பது வேறெங்கும் காணக்கிடைக்காத வரமாகும்.
சந்திரமெளலீஸ்வரரை கடக ராசி உடையோர் வழிபட பொருட்செல்வம் மட்டுமின்றி மக்கள் செல்வம், உறவினர்கள் மரியாதை, தொழில் லாபம் உள்ளிட்டவையும் தேடி வரும். செல்வம் மிக்வராக, நோய்நொடி அற்றவராக, இந்த அண்டத்தில் புகழ்மிக்கவராக உருவெடுப்பார்கள். இத்தலத்தின் சன்னதியில் அருள்பாலிக்கும் துர்கை அம்மனை கடக ராசி பூச நட்சத்திரம், ஆயில்ய நட்சத்திரம் கொண்டோரும், கன்னி ராசியில் ஹஸ்தம், சித்திரை நட்சத்திரம் கொண்டோரும் வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும். அத்துடன் கோவிலின் முகப்பில் ஈசானியத்தை நோக்கி அருள்பாலிக்கும் வக்ரகாளியம்மனை வழிபட்டால் அரசு பதவி கிடைக்கும், திருஷ்டி தோஷங்கள் நீங்கும். இந்த அம்மனை வலதுபக்கமாக ஐந்து முறையும், இடது பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து வழிபட வேண்டும். பஞ்சமி, அஷ்டமி, பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் இத்தலத்திற்குச் சென்று வழிபடுவதால் கூடுதல் பலன் கிடைக்கும். ஞாயிறு, வெள்ளிகளில் அரளிப்பூ, எலுமிச்சைப்பழ மாலை அணிவித்து அம்பாளை வணங்கிவர சகல தோஷங்களும் நீங்கும்.
வயது கடந்தும் திருமணம் பாக்கியமற்றவர்கள் இத்தலத்தில் தாலி, புடவை, மாலை உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வேண்டினால் விரைவில் திருமணம் நடைபெறும். இத்தலத்தில் உள்ள மரத்தில் குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டுதல், எடைக்கு எடை காசு காணிக்கை செலுத்துதல் என பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். வக்கிர காளியை வேண்டி 1008 பால்குடி அபிஷேகம் செய்தல், அம்மனுக்கு சந்தனத்தால் அலங்காரம், அம்பாளுக்கு புடவை உள்ளிட்டவற்றையும் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் சாத்துகின்றனர்.
இங்குள்ள கோயில் தீர்த்தத்தில் நீராடி வில்வத்தால் அர்ச்சிக்க விரோதிகள் ஒழிந்து நட்பு பாராட்டுவர், இல்லையெனில் சிவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியும் வக்கிர காளியம்மன் அவர்களை கண்டிப்பாள். என்று நம்பிக்கை நிலவுகிறது. மேலும் பிரதோஷ காலங்களில் தும்பைப் பூ அர்ச்சனையும், சுத்த அன்னம் நைவேத்தியமும் செய்ய நல்வாழ்வு கிட்டும்
. சங்கரமௌலீஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியன்று வீதியுலா உற்சம் நடைபெறுகிறது. சித்திரை வருடப் பிறப்பு, ஆடிக் கார்த்திகை, தைழுச ஆகிய விசேச நாட்களில் இத்தலத்தில் உள்ள வக்கிர காளி அம்மனுக்கு சிறப்பு அபிசேக பூஜைகள் நடத்தப்படுகின்றன.
விழுப்புரத்தில் இருந்து திருச்சி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தால் குறிஞ்சிப்பாடியை அடையலாம். அங்கிருந்து திருக்கனூர் சாலையில் பிடரிபட்டு, சிதலம்பட்டு நான்குரோடு சந்திப்பில் இருந்து சிதலம்பட்டு, கொடுக்கூர் சாலையில் சில மீட்டர் பயணித்தால் இத்தலத்தை அடையலாம். இதன் மொத்த பயண தூரம் சுமார் 33 கிலோ மீட்டர் ஆகும். விழுப்புரத்தில் இருந்து கோழியனூர், திருபுவணி, கொடுக்கூர் வழியாகவும் சுமார் 30 கிலோ முட்டர் பயணம் செய்து இந்த சிவன் தலத்திற்கு செல்லலாம். மயிலம் செல்லும் பேருந்துகளும், சேதரப் பட்டு செல்லும் பேருந்துகளும் இக்கோவில் வழியே செல்லும். திருக்கனூர், கொடுக்கூர் செல்லும் பேருந்துகளும் திருவக்கரை செல்லும்.
அருள்மிகு சங்கரமௌலீஸ்வரர் திருக்கோவில் நடை காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும்.
2 . கும்பகோணம்அருகேகொட்டையூர் கோடீஸ்வரன் கோவில்
இத்தல இறைவன் திருமேனியில் பலாக்காய் முள் போன்று கோடி லிங்கங்களை தன்னகத்தே கொண்டு சுயம்புமூர்த்தியாகவும், தன் சிரசிலிருந்து கங்கை நீர் இன்றளவும் அரும்பும் நிலையில் காட்சியளிப்பது சிறப்பு அம்சமாகும். மார்க்கண்டேயர் பூசித்த தலம்.
காவிரி வலஞ்சுழித்து, பிலத்துவாரத்தில் சென்றபோது, திருவலஞ்சுழியில் காவிரியில் இறங்கிய ஆத்ரேயமகரிஷி காவிரியை மேலே கொண்டுவந்து இங்கு வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது அவருடைய திருவுருவம் இக்கோயிலில் உள்ளது. ஒரு சமயம் இந்த ஊர் ஆமணக்கங்காடாக இருந்தது. இறைவன் ஆமணக்கன் கொட்டைச் செடியின்கீழ் இருந்ததால் இவ்வூர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது. மற்றொரு சமயம் சோழ மன்னன் ஒருவனுக்கு கோடி லிங்கமாக தரிசனம் கொடுத்ததால் இக்கோயிலுக்கு கோடிச்சுரம் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.
கொட்டையூரில் உள்ள முகலிங்க மூர்த்தி மிகுந்த சக்தி வாய்ந்தவர். அவரை நாட்டு சக்கரையால் அபிஷேகம் செய்தால் அனைத்திலும் ஜெயம் உண்டாகும்.
கும்பகோணத்திற்கும் சுவாமிமலைக்கும் இடையே கும்பகோணத்திற்கு மேற்கே 4 கிமீ தொலைவில் கொட்டையூர் உள்ளது.
3 . காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில்
தேவர்கள் பாற்கடலைக் கடைய திருமால் ஆமையாய் மந்தர மலையைத் தாங்கி, அமுதம் உண்டு உவகை செருக்குக் கொண்டு உலகம் அழியுமாறு கடலைக் கலக்குகையில், உயிர்களின் அச்சம் கெடவும், திருமால் அகந்தை நீங்கி அறிவுறவும் சிவபெருமான் அவ்வாமையை அழித்து அதன் ஓட்டினை வெண்டலை மாலையிடையே கோர்த்து அணிந்தார்.
திருமால் தனது குற்றம் நீங்க சோதிலிங்கத்தை வழிபாடு செய்து மெய்யன்பும், வைகுந்த பதவியும் சிவன் அருள்செய்யப் பெற்றார் . அச்சிவலிங்கத்திற்குக் ‘கச்சபேசன்’ என்னும் திருப்பெயர் விளங்கவும், என்றும் அதன்
பெருமை விளங்கவும், காசியினும் அவ்விடம் சிறப்புறவும் வரம் வேண்டிய திருமாலுக்குச் சிவபெருமான் அவற்றை வழங்கினர். கச்சபேசப் பெருமானை எண்ணினோரும் சென்று கண்டவரும் இவ்வுலகத்தில் துன்பம் நீங்கி இன்பம் பெற்று முடிவில் முத்தியையும் பெறுவர்.
பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவ காஞ்சியின் அன்னை இந்திராகாந்தி சாலையில் (நெல்லுக்காரத் தெரு) மேற்கு கடைக்கோடியில் இக்கோயில் அமைந்துள்ளது.

No comments:
Post a Comment