Monday, 14 September 2020

பிரதோஷம்

அடிலகன் என்ற சிவபக்தன், பூலோக வாழ்வை முடித்து கயிலாயம் சென்றான்.
அந்தப்புரத்தில் பார்வதிதேவி சிவனை தியானித்துக் கொண்டிருந்தாள். வெளியே நந்திதேவர் காவல் காத்துக் கொண்டிருந்தார்.

சிவபார்வதியின் தரிசனம் பெற வேண்டுமென விரும்பிய பக்தன், நந்திதேவரையும் மீறி அம்பிகையின் இருப்பிடம் சென்றான். அவளைக் கண்ட மகிழ்ச்சியில் சத்தம் போட்டு வணங்கினான். பக்தனின் குரல் கேட்ட அம்பிகை, தியானம் கலைந்து எழுந்தாள். நந்தியின் காவலையும் மீறி, தன் இருப்பிடத்திற்கு பக்தன் வந்ததைக் கண்டவள், "ஏ நந்தீசா! யாரைக் கேட்டு இவனை உள்ளே அனுமதித்தாய்?'' என்று சத்தமிட்டாள்.

அவளிடம் வந்த நந்தி,""தாயே! தங்கள் பக்தன் என்பதால் தான் அனுமதித்தேன். நீங்கள் பூஜை முடித்த பிறகுதான் அவனை அனுப்பியிருக்க வேண்டும். தவறாக நடந்து விட்டேன்,

ஞாயிறு பிரதோஷம்

ஞாயிறு பிரதோஷம்... ராகுகால பிரதோஷ தரிசனம்!

ஞாயிற்றுக்கிழமையில், ராகுகால வேளையில், பிரதோஷ நேரத்தில் தரிசனம் செய்யுங்கள். சகல தோஷங்களும் விலகும். வாழ்வில் சந்தோஷம் நிலைக்கும் என்பது உறுதி. இன்று 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம். மறக்காமல் சிவ தரிசனம் செய்யுங்கள்.

இன்று பிரதோஷம். இந்த நாளில், சிவன் கோயிலுக்குச் சென்று நந்தியம் பெருமானையும் சிவபெருமானையும் வணங்கி வழிபடுங்கள். இது, மிகுந்த பலன்களை வாரி வழங்கும்.

பொதுவாகவே பிரதோஷ நேரம் என்பது, மாலை 4.30 முதல் 6 மணி வரை. ஞாயிற்றுக் கிழமையன்று ராகுகாலம் என்பதும் இந்த நேரம்தான். அதாவது மாலை 4.30 முதல் 6 மணி வரை. எனவே ராகுகாலமும் பிரதோஷ தருணமும் சேர்ந்து வரும் இந்த நாளில், சிவ தரிசனம் செய்வது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்கிறார்கள்.

Tuesday, 8 September 2020

காசி க்ஷேத்திரம் மகிமை

காசி க்ஷேத்திரத்தில் பார்வை படும் இடமெல்லாம் லிங்க ஸ்வரூபம் காணப்படும். தரையில் பல இடங்களில்ந லிங்க ஸ்வரூபம் இருப்பதால் ராமகிருஷ்ண பரமஹம்சர் காசி நகரத்தில் மலஜலம் கூட கழிக்காது நகருக்கு வெளியே செல்வார் என்றும், காஞ்சி மஹா பெரியவர் காசியில் வசிக்கும் காலங்களில் காலில் பாதுகையே அணியமாட்டார் என்றும் கூறுவர். காசியில் செயலேதும் புரியாமல் சும்மா படுத்திருந்தாலும் உயர்ந்த யோகம் செய்வதற்கும் மேலாகும் என்பது பொதுவான கருத்து.

காசி விஸ்வநாதரின் தேவி விசாலாட்சி அம்மனாகும் . 1893 -ஆம் ஆண்டு தேவிக்குத் தனிக்கோயில் நகரத்தார்களால் அமைக்கப்பெற்று இங்கும் 3 வேளை பூஜைக்கு நகரச் சத்திரத்தில் இருந்து "சம்போ' உடன் பொருள்கள் அனுப்பப்படுகின்றன. தீபாவளியின்போது மட்டும் இரண்டு நாள்களுக்கு நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்தில் உள்ள ஸ்வர்ண உற்சவ விசாலாட்சி அம்மன் தரிசனத்திற்கு மண்டபத்தில் எழுந்தருளுகின்றார்.

கடையம் வந்தால் கவலை தீரும்!

கடையத்துக்கு வந்தால் கவலைகள் பறந்தோடும் என்பார்கள். கடையத்தில்தான், வில்வங்களில் ஈடுபாடும் ஆசையும் கொண்ட வில்வவனேஸ்வரர் குடிகொண்டிருக்கிறார்.

திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது அம்பாசமுத்திரம். இங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது கடையம் . அழகிய கிராமத்தில், அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் வில்வ வன நாதர். இங்கே அம்பாளின் திருநாமம் ஸ்ரீநித்ய கல்யாணி அம்பாள்.

அற்புதமான ஆலயம். புராதனமான திருத்தலம். ஒருகாலத்தில் வில்வ வனமாக இருந்த இந்தத் தலத்தில் கோயில் கொண்டதால், சிவபெருமானுக்கு வில்வம் சார்த்தி வேண்டிக் கொண்டால் நம்மையும் நம் வாழ்வையும் சிவனார் பார்த்துக் கொள்வார்.

அருள்மிகு ஸ்ரீ மருதாம்பிகை சமேத ஸ்ரீ மல்லீஸ்வர் திருக்கோயில்,. ரங்கமலை,

அருள்மிகு ஸ்ரீ மருதாம்பிகை சமேத ஸ்ரீ மல்லீஸ்வர் திருக்கோயில்,.
ரங்கமலை,
ஆலமரத்துப்பட்டி,
அரவக்குறிச்சி வட்டம்,
கரூர் மாவட்டம்.

 ( ஸ்ரீ விஷ்ணு பெயரில் அமைந்துள்ள இந்த ரங்க மலையில், சிவபெருமான் ஆலயம் அமைந்துள்ளது இம்மலைச்சிறப்பு.

( 🤔தன் தங்கையை திருமணம் செய்த ஈசனுக்கு, ரங்கநாத பெருமாள் தந்த அன்பு பரிசு என்கிறார்கள்)

கரூர் to திண்டுக்கல் (NH-7) தேசிய நெடுஞ்சாலையில் நீங்கள் சென்றிருந்தால், திருவண்ணாமலை தோற்றத்துடன் அதை விட சற்று பெரிதாக (சுமார் 3500-அடி உயரம்) அருட்காட்சியளிக்கும் இந்த ரங்கமலை நிச்சயம் உங்கள் பார்வை தரிசனம் கண்டிருக்கும்.

அம்மணி அம்மன் கோபுரம்....

ஒரு பெண் தன்னந்தனி ஆளாக நின்று, 171 அடி உயரத்துக்கு பிரமாண்டமான ஒரு ஆலய கோபுரத்தைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல....

அதுவும் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்தபோது இந்த சாதனையை அந்த பெண் நிகழ்த்தியது பிரம்மிக்கத்தக்கது.*

அந்தப் பெண் சாதாரணப் பெண் அல்ல. அவர் ஒரு சித்தப் புருஷர். சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு உயர் சித்த நிலைப் பெற்றவர். பொதுவாக ஒவ்வொரு சித்தருக்கும் குரு என்று யாராவது இருப்பார்கள். ஆனால் இந்தப் பெண்ணுக்கு சிவபெருமானே குருவாக இருந்தார். குரு என்று வேறு யாரையும் தேடாமல் பிறவியிலேயே சிவன் மீது சித்தம் வைத்த அந்தப் பெண் நடத்திய அற்புதங்கள் ஏராளம்.

பட்டீஸ்வரர் !!! பேரூர்

ஐந்து அதிசயங்களை உள்ள‍டங்கிய ஆயிரமாண்டு ஆலயம் ஒன்று உள்ள‍து.

கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் ஆறாவது கிலோமீட்ட‍ர் தொலைவில் உள்ள‍து "பேரூர் " என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்.

நால்வரால் பாடல்பெற்ற‍ இவ்வாலயம் மேல சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு "நடராஜப்பெருமான்" ஆனந்த தாண்டவம் ஆடியபோது . . . அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தியும் உண்டு.

இக்கோவிலில் ஐந்து அதிசயங்கள் எது என்றால்,. . .

விநாயகருக்கு . அர்ச்சிக்கப்படும் ஒவ்வொரு இலைக்கும் ஒவ்வொரு பலன்

விநாயகருக்கு . அர்ச்சிக்கப்படும் ஒவ்வொரு இலைக்கும் ஒவ்வொரு பலன்
விநாயகருக்கு பல்வேறு இலைகளை கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. அர்ச்சிக்கப்படும் ஒவ்வொரு இலைக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கப்பெறுவதாக கூறப்படுகிறது.

கண்டங்கத்தரி இலை - லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

மாதுளை இலை - நற்புகழ் கிடைக்கப்பெறும்.

வெள்ளெருக்கு இலை - சகல பாக்கியங்களும் அருளப்படும்.

அரளி இலை - குடும்பத்தில் அன்பு ஓங்கி நிற்கும்.

விநாயகரின் உருவத்தின் உண்மையான அர்த்தம்

விநாயகரின் உருவத்தின் உண்மையான அர்த்தம் எதைக் குறிக்கிறது தெரியுமா??

மேலும் சிறுவயதில் முதல்  பின் வரும் இந்த பாடலை நாம் பலமுறை பாடி இருக்கிறோம், கேட்டு இருக்கிறோம் .ஆனால் இந்த பாடலின்  உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..?

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகந்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே!

விநாயகர்

’வேத காலம்’ என்று கூறப்படும் தொன்மையான காலகட்டத்திற்கும் முன்பிருந்தே விநாயகர் வழிபாடு உலகின் பலபகுதிகளிலும் இருந்து வந்ததை சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

💐கணேச புராணம்’ விநாயகர் அவதாரத்தை யுகத்திற்கொன்றாக நான்கு அவதாரமாகக் கூறுகின்றது.

💐விநாயகரின் தோற்றம் பற்றி பலவிதமான கருத்துக்கள் வழங்கப்படுகின்றன.

💐கைலாயத்தில் பார்வதி தேவி குளிக்கச் செல்லும் போது, தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு சிறுவனை உருவாக்கி உயிர்கொடுத்து காவலுக்கு நிற்கச்சொன்னார்.(உமையம்மை மஞ்சளைத் திரட்டி விநாயகர் செய்தார் என்றும் கூறுவர் ) யாரையும் உள்ளே விடவேண்டாம் எனவும் கட்டளையிட்டார்.

இந்து_மதத்தின் பெருமை!

இந்து_மதத்தின் பெருமை!
வேறு எந்த மதத்திலும் இல்லாத
ஒரு பெருமை ஹிந்து
மதக்கடவுளுக்கு உண்டு .

ஏனெனில்
கடவுளை எல்லா விதமாகவும்
வழிபடும் தன்மை ஹிந்து
மதத்தில் மட்டும் தான்...உள்ளது
1. தாயாக = அம்மன்
2. தந்தையாக = சிவன்
3. நண்பனாக = பிள்ளையார்,கிருஷ்ணன்
4. குருவாக = தட்சிணாமூர்த்தி
5. படிப்பாக = சரஸ்வதி
6. செல்வமகளாக = லக்ஷ்மி
7. செல்வமகனாக = குபேரன்
8. மழையாக = வருணன்

ஞானம்

ஞானப்பழ கதையில்
நாரதர் கொண்டு வரும் ஞானப்பழத்தை ‘ஞானத்தின்’ குறியீடாகக் கொள்வோம்.

அதை அவர் பங்கிடக்கூடாது என்கிறார். அதாவது, ஞானம் என்பது பங்கிட முடியாதது; அதாவது முழுமை அல்லது நிறைவு.

உலகைச் சுற்றி வரும் போட்டி’க்கு வருவோம். உலகம் எதை உலகம் எனச்சொல்கிறதோ அதைச் சுற்ற முருகன் கிளம்பிவிடுகிறான்.

விநாயகனோ தான் எதை உலகம் என நினைக்கிறானோ அதை முதன்மைப்படுத்துகிறான்.

எளிமையாகச் சொல்வதானால்

ஞானப்பழ கதையில்
நாரதர் கொண்டு வரும் ஞானப்பழத்தை ‘ஞானத்தின்’ குறியீடாகக் கொள்வோம்.

அதை அவர் பங்கிடக்கூடாது என்கிறார். அதாவது, ஞானம் என்பது பங்கிட முடியாதது; அதாவது முழுமை அல்லது நிறைவு.

உலகைச் சுற்றி வரும் போட்டி’க்கு வருவோம். உலகம் எதை உலகம் எனச்சொல்கிறதோ அதைச் சுற்ற முருகன் கிளம்பிவிடுகிறான்.

விநாயகனோ தான் எதை உலகம் என நினைக்கிறானோ அதை முதன்மைப்படுத்துகிறான்.

எளிமையாகச் சொல்வதானால்

முருகனைச் சமூகப்பார்வையாகக் கொள்ளலாம்; விநாயகனைத் தனியொருவனின் பார்வையாகச் சுட்டலாம்.

யாருக்கு ஞானம்(பழம்) கிடைக்கிறது, விநாயகனுக்கு அல்லவா? இக்கதையின் வழியாக நான் பெற்ற மூன்று புதிய செய்திகள் : 1)

ஞானப்பழத்திற்கான போட்டி விநாயகன், முருகன் எனும் குழந்தைகளுக்காகவே நடத்தப்படுகிறது. எனவே, ஞானம் என்பது குழந்தை மனோநிலை உள்ளவர்களுக்கே சாத்தியமாகிறது.

2) உலகம் முன்வைக்கும் வாழ்வை வாழ்கிறவனுக்கு ஞானம் கிட்டவே வாய்ப்பில்லை. எவனொருவன் தான் நினைக்கும் வாழ்வை வாழ்கிறானோ அவனுக்கே அது சாத்தியம். இன்னும் நுட்பமாகப் பார்க்க முருகனைப் புற உலகாகவும், விநாயகனை அகஉலகாகவும் நினைத்துக் கொள்ளுங்கள்.

3) வெளியே சுற்றித்திரும்பும் முருகனுக்குப் பழம் கிடைக்கவில்லை. அங்கேயே இருக்கும் விநாயகனுக்கே கிடைக்கிறது. ஆக, ஞானம் என்பது எங்கேயோ, எதிலோ இல்லை. அங்கேயே, அப்போதே இருக்கிறது."
ஞானப்பழ கதையில்
நாரதர் கொண்டு வரும் ஞானப்பழத்தை ‘ஞானத்தின்’ குறியீடாகக் கொள்வோம்.

அதை அவர் பங்கிடக்கூடாது என்கிறார். அதாவது, ஞானம் என்பது பங்கிட முடியாதது; அதாவது முழுமை அல்லது நிறைவு.

உலகைச் சுற்றி வரும் போட்டி’க்கு வருவோம். உலகம் எதை உலகம் எனச்சொல்கிறதோ அதைச் சுற்ற முருகன் கிளம்பிவிடுகிறான்.

விநாயகனோ தான் எதை உலகம் என நினைக்கிறானோ அதை முதன்மைப்படுத்துகிறான்.

எளிமையாகச் சொல்வதானால்

முருகனைச் சமூகப்பார்வையாகக் கொள்ளலாம்; விநாயகனைத் தனியொருவனின் பார்வையாகச் சுட்டலாம்.

யாருக்கு ஞானம்(பழம்) கிடைக்கிறது, விநாயகனுக்கு அல்லவா? இக்கதையின் வழியாக நான் பெற்ற மூன்று புதிய செய்திகள் : 1)

ஞானப்பழத்திற்கான போட்டி விநாயகன், முருகன் எனும் குழந்தைகளுக்காகவே நடத்தப்படுகிறது. எனவே, ஞானம் என்பது குழந்தை மனோநிலை உள்ளவர்களுக்கே சாத்தியமாகிறது.

2) உலகம் முன்வைக்கும் வாழ்வை வாழ்கிறவனுக்கு ஞானம் கிட்டவே வாய்ப்பில்லை. எவனொருவன் தான் நினைக்கும் வாழ்வை வாழ்கிறானோ அவனுக்கே அது சாத்தியம். இன்னும் நுட்பமாகப் பார்க்க முருகனைப் புற உலகாகவும், விநாயகனை அகஉலகாகவும் நினைத்துக் கொள்ளுங்கள்.

3) வெளியே சுற்றித்திரும்பும் முருகனுக்குப் பழம் கிடைக்கவில்லை. அங்கேயே இருக்கும் விநாயகனுக்கே கிடைக்கிறது. ஆக, ஞானம் என்பது எங்கேயோ, எதிலோ இல்லை. அங்கேயே, அப்போதே இருக்கிறது."

மாலையில் மகேஸ்வரன்.....🙏

ல்லோரும் காலையில் எழுந்ததும் நாராயண ஸ்மரணம் செய்ய வேண்டும். மாலையில் பரமேசுவரனைத் தியானிக்க வேண்டும். மஹாவிஷ்ணு உலகைப் பரிபாலிப்பவர்.

 காலையில் உலக காரியங்களைத் தொடங்கும் முன் அவரை ஸ்மரிக்க வேண்டும். பரமேசுவரனிடம் உலகமெல்லாம் லயித்து ஒடுங்குகின்றன. மாலையில் நம் வேலைகள் ஓய்கின்றன.

 நாம் பார்த்துக்கொண்டிருக்கும் உலகம் இருளுக்குள் ஒடுங்குகிறது.
பட்சிகள் கூட்டில் ஒடுங்குகின்றன. ஊரெல்லாம் மேய்ந்த பசுக்கள் கொட்டிலுக்குத் திரும்பி வந்து ஒடுங்குகின்றன.

வெளியிலே திரியும் எண்ணங்களையெல்லாம் அப்போது இருதயத்துக்குள் திருப்பி பரமேசுவரனை ஸ்மரிக்க வேண்டும்.

எச்சம்மா

நமது  குடும்பங்களில் சிலவற்றில் அல்ல பலவற்றில்  லக்ஷ்மி  என்கிற  பெயர்  லஷ்மி, லெஷ்மி, லெச்சுமி, எச்சுமி,  லெச்சம்மா, எச்சம்மா என்றெல்லாம்  அபிமானத்தோடு அழைக்கப்படுபவை.  இப்போது நாகரிகமாக பெயர்கள் வைத்துக்கொள்ளும்  பெண்கள் இப்படி கூப்பிட்டால்  எப்படி ஏற்றுக் கொள்வார் கள்,  REACT பண்ணுவார்கள் என்று  எண்ணிப்பார்க்க பயமாக இருக்கிறது.

திருவண்ணாமலையில் ஒரு எச்சம்மா பாட்டி இருந்தாள் பாவம் அடுத்தடுத்து கணவன், பிள்ளை, ரெண்டு பெண்களை இழந்து அனாதையானவள். இருந்தும்  குரு கடாக்ஷத்தால் வாழ்வில்  துன்பங்கள் தொடராது என்று நம்பிக்கை கொண்ட வள்.  இளம் வயதில் விதவை, படிப்பு வாசனை கிடையாது,  பணமோ சொத்து சுதந்தரமோ இல்லாதவளு க்கு போக்கிடம் எது? 

உங்கள் நட்சத்திரப்படி சிவவழிபாடு செய்ய உதவும் தேவாரப்பாடல்!!!

கீழே அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்குரிய ஒவ்வொரு தேவாரப்பாடல் தரப்பட்டுள்ளன.நீங்கள் உங்களது பிறந்த நட்சத்திரத்தின் பாடலை ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி,சிவபெருமானை வணங்கி வந்தால்,நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.

1. அசுவினி :
தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து உந்தன் சரண் புகுந்தேன்
எக்கால் எப்பயன் நின் திறம் அல்லால் எனக்கு உளதே
மிக்கார் தில்லையுள் விருப்பா மிக வடமேரு என்னும்
திக்கா! திருச்சத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே.

2. பரணி :
கரும்பினும் இனியான் தன்னைக் காய்கதிர்ச் சோதியானை
இருங்கடல் அமுதம் தன்னை இறப்பொடு பிறப்பு இலானைப்
பெரும்பொருள் கிளவியானைப் பெருந்தவ முனிவர் ஏத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம் அழகிதாம் நினைந்தவாறே.

வேல்

வடிவேல் என்ற தமிழ்ச்சொல் அழகானது. வினைத்தொகை! வடிக்கப்பட்ட வேல், வடிக்கப்படும் வேல், வடிக்கப் படப்போகும் வேல். 

ஒருவித dynamic ஆயுதம், வளரும் ஆயுதம்! தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும், கூர்ப்படுத்திக் கொள்ளும் உயிர்ப்புள்ள ஆயுதம்.  ஏதோ ஒரு யுகத்தில் பார்வதியால் தன் பிள்ளைக்காக வடிவமைத்துக் கொடுக்கப்பட்டு, சூர பத்மாவைத் துளைத்துச் சென்று  கொன்று போட்டதுடன்  அதன் வேலை முடிந்து விடவில்லை என்று தோன்றுகிறது. வடி-வேல், growing, evolving!

கதாயுதம்  துர்க்கையிடமும் இருக்கும். அனுமனிடமும் இருக்கும். சூலாயுதம் சிவனிடமும் இருக்கும், பார்வதியிடமும் இருக்கும். பாசம் விநாயகரிடம் இருக்கிறது. யமனிடமும் இருக்கிறது. ஆனால் வேல்? முருகனுக்கே உரியது. பிரத்யேகமானது.  மற்ற தெய்வத்துக்குப் பொருத்திப் பாருங்கள். odd ஆக இருக்கும். வேல் மட்டுமே  destructive weapon ஆக மட்டும் இல்லாமல் constructive weapon ஆக இருக்கிறது. ஞான வேல்! ஞான திரிசூலம், ஞான வாள், ஞான வில் என்றெல்லாம் சொல்வதில்லை. ஆயுதத்தை அறிவாக மாற்றும் ரசவாதம்!  ஆயுதத்தை positive ஆக ஞானத்துடன் ஒப்பிடுவது இங்கு தான். அறியாமை அழிந்தாலே எஞ்சி இருப்பது ஞானம் தானே?  வேலுக்கு வடமொழியில் 'சக்தி' என்றே பெயர். ஆற்றல் வடிவற்றது. கட்புலனாகாதது. ஒருவேளை ஆற்றலுக்கு ஒரு வடிவம் கொடுக்க முடிந்தால் அது வேல் வடிவிலேயே இருக்கும் என்று தோன்றுகிறது.

வேலின் வலிமை எறிபவன் கையில் இருக்கிறது. அதன் வேகத்தில் இருக்கிறது. வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி ஆக்கும் வடிவேல்! அறிவின் கூர்மை, அறிவின் வேகத்தில் இருக்கிறது. அறிவு, ஞானம் static ஆக இருந்து பயனில்லை. applied knowledge. எறிபவன் வேண்டும்! அறிவு பயணிக்க ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு வேலும் அதற்குரிய முருகனைத் தேட வேண்டும்!  கிரௌஞ்ச மலையை முருகனது வேல் பிளந்து பொடியாக்கியதால் ஒவ்வொரு மலையும் வேலிடம் பயப்படுகிறதாம். (நிபிடமுடி நெடியகிரி எந்தமைக்கா எனவும் நிகழ்கின்ற துங்க நெடு வேல்!) ஆனாலும் மலை தோறும் முருகன் வீற்றிருப்பது அழகிய முரண்!

கதாயுதத்தைத் சதா தூக்கிச் சுமக்க முடியாது. கனம்!  வில்லுக்கு அம்பு வேண்டி இருக்கிறது. அம்பு இல்லையேல் வில் வீண்! வாளுக்கு உறை வேண்டி இருக்கிறது. இல்லையேல் கையைக் கிழித்து விடும். கேடயம் என்ற துணைக்கருவி தேவைப்படுகிறது. திரிசூலம் கூட மூன்று இடங்களில் குத்துகிறது. சிக்கிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம். இரண்டு சூலாயுதங்கள் சண்டையிட்டால் அடிக்கடி சிக்கிக்கொண்டு விடும்! ஆனால் வேல் ஒரு perfect ஆயுதம். handy! peak கில் மட்டும் கூர்மை. கையில் பிடித்துக் கொள்ளலாம். சுலபமாக எறியலாம்!

முருகனுக்கு இரும்புப்  பட்டறையில் 24 x 7 வேல் வடிக்கும் வேலை தானா என்று நாத்திகர்கள் சிலர் கேலி செய்யலாம். ஆனால் அந்தத் தொழிலில் ஒன்றும் தவறு இல்லையே? சேனாதிபதி ஒருவனுக்குப் பட்டறையில் வேலை இருப்பது பெரிய விஷயம் இல்லையே? ஆயுதங்கள் பளபளப்பாக showcase சில் அடுக்கி வைத்திருந்தால் அது வீரனுக்கு அழகல்லவே? மேலும் demand இருக்கும் வரை production னும் இருக்கும் தானே? கெட்டவை முளைத்துக்கொண்டே இருக்கின்றன. அவற்றைக் குத்திக் கிழிக்க வேல்கள் வடிக்கப்பட்டு வந்து கொண்டே இருக்கின்றன.மேலும், வேல் வடிக்கும் formula வை பணியாளர்களுக்குச்  சொல்லிக் கொடுத்து விட்டு முருகன் கல்லாவில் வந்து அமரக் கூடாதா என்ன? சொல்லப்போனால் உலகின் மிகப்பெரிய இரும்புக்கடை முதலாளி முருகன் தான். முருகனின் 'செட்டி' என்ற பெயரைக் கவனிக்கவும். ஏரகத்துச் செட்டியார்! மிகப்பெரிய வணிகர். missile supplier!

சஷ்டி கவசத்தில் இந்த வரிகள் மனம் கவர்ந்தவை:

வீசியதை அள்ளலாம்; பேசியதை அள்ள முடியாது என்று சொல்வார்கள். பேசிய வார்த்தைகள் பேசியவை தான். அவற்றின் consequence-சில் இருந்து நாம் தப்பவே முடியாது. வாய் இருக்கிறது என்று பேசி விட்டு எத்தனை பேர் அதன் legal consequence ஐ அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்? ஆனால், முருகனின் பெருவேல் அதிலிருந்தும் நம்மைக் காக்கிறதாம். குற்றம் இறந்தகாலத்தில் past-டில் நிகழ்ந்து இருந்தாலும் நம்மைக் காக்கிறதாம்.  'பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க'. பேசும் வாய் இல்லை. பேசிய வாய்! போய பிழையும் புகுதருவான்!!

"அடியேன் வசனம் அசைவுள நேரம்கடுகவே வந்து கனகவேல் காக்க"

- இதற்காகவே  நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் வேல் உற்பத்தி வேண்டுமே ஐயா! மனிதர்கள் சதா வசனித்துக் கொண்டே இருக்கிறார்களே. 'என்னுடைய வசனங்கள் கொஞ்சம் அப்படி இப்படி அசைந்தாலும் உடனே வந்து கனகவேல் காக்க வேண்டும்' என்று வேண்டிக் கொள்கிறார் இந்த அடியவர். இந்தப்பக்கம், அந்தப்பக்கம் சாயாத நடுநிலை நியாய வசனம்! மனிதர்களுடன் ஓர் இரண்டு நிமிடம் பேசினாலே அவர்கள் சார்பு வெளிப்பட்டு விடுகிறதே, சாயம் வெளுத்து விடுகிறதே, தொண்டை வழியே மண்டையில் இருக்கும் கொண்டை வெளிப்பட்டு விடுகிறதே, நடுவு நிலைமையில், கோர்ட் தராசு போல எத்தனை பேரால் அசைவின்றிச் சாயாமல் சிதறாமல் சரியாமல் சறுக்காமல் பேசிவிட முடியும்?

தராசு செய்பவன் கதை ஒன்று வருகிறது. ஒரு ஆள், இப்படித்தான் பட்டறையில் தினமும் நூற்றுக் கணக்கில் தராசு செய்து சந்தையில் விற்பவன். ஒரு கட்டத்தில் வாழ்க்கை சலித்து விடுகிறது. ஞானத்துக்கான தேடல் வந்து விடுகிறது. தொழிலைத் துறந்து விட்டு, மனைவி மக்களை விட்டுத் தொலைதூரம் காடுமலை கடந்து சென்று ஞான குரு ஒருவரைச் சந்திக்கிறான். அவர் சிரித்து  விட்டு, 'அட, நீ செய்யும் வேலையைத் தான் நானும் செய்கிறேன் அப்பா, என்னைத் தேடியா வந்தாய்? நானும் தராசு செய்பவன் தான், இந்தப் பக்கம் அந்தப்பக்கம் அசையாத அந்தத்  தராசின் முள் தான் ஞானம், போ, திரும்பிப் போ, தராசைக் கவனி, அதே நேரம் உன் மனதையும் கவனி, எந்தப் பக்கம் முள் சாய்கிறது என்று கவனி, சாய்ந்தால் ஏற்றி நிறுத்து, அதுதான் ஞானம் " என்று உபதேசித்துத் திருப்பி அனுப்புகிறார்.

சூரபத்மனை அழித்தது கூட வேலுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

மயில் என்பது வேலின் by-product மற்றொரு வடிவம் தான். மரத்தைப் பிளந்ததும் ஒரு பாதி மயிலாகிறது. ஒரு பாதி கொடியாகிறது. ஒன்று முருகனைச் சுமக்கிறது. ஒன்றை முருகன் சுமக்கிறான். again, அத்தனை பெரிய ஆகிருதியை அத்தனை சிறிய feathery பறவை எப்படிச் சுமக்கும் என்ற நாத்திக வாதம் உள்ளே வருகிறது. மாமரம் பறக்க ஆசைப்படுகிறது. பரிணாமத்தில் முன்னேற விரும்புகிறது. மரத்தால் நகரக் கூட முடியாது, பறப்பது எப்படி? முருகனின் வேலால் அதற்கு விமோசனம் வருகிறது. சிறகுகள் வருகின்றன. நன்றி மறவாமல், சிறகு தந்தவனைத் தூக்கிச் சுமக்கிறது மர மயில். நமக்குச் சிறகு தந்தவர்களை, பறக்க வைத்தவர்களை, தூக்கி விட்டவர்களைக் காலமெல்லாம் நாம்   தூக்கிச் சுமக்க வேண்டும் என்ற நன்றி மறவாமை மயிலின் தத்துவம்!

சூரன் தன்னை ஒரு மாமரமாக disguise செய்து கொள்கிறான். ஒரே ஒரு மாறுவேடம் தான். வேல் அவனைச் சுலபமாகப் பிளந்து செல்கிறது. ஆனால் இன்றைய உலகின் அரக்கர்கள் எத்தனையோ மாறுவேடங்களைப் புனைந்து கொண்டு விடுகிறார்கள். மண்ணாக, மரமாக, மலையாக, மனிதனாக, மகானாக! சிலநேரம் பக்தர்களாகவும் வேடம் போடுகிறார்கள். வேலே சிலநேரம் குழம்பிப்போய் விடும்படி. மரமாக நின்றால் பிளக்கலாம். மரவுரி தரித்து மகா தபஸ்வியாக வேடமிட்டால்? மயிலும் மயங்குமே! இப்படி ஒவ்வொரு மாறு வேடத்துக்கும் ஒவ்வொரு வேல் தேவைப்படுகிறது. factory யில் assembly line களில் அதன் உற்பத்தி நிற்பதே இல்லை. 24 x 7 non stop production!

சில நேரங்களில் ஞான விநியோகம், பல நேரங்களில் சூர சம்ஹாரம்!

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - 2020 - 2022

வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று ராகு-கேது பெயர்ச்சி நடைபெறபோகிறது. அப்போது மிதுன ராசியில் இருக்கும் ராகு பகவான் #ரிஷப ராசிக்கும், தனுசு ராசியில் இருக்கும் கேது பகவான் #விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். பெயர்ச்சியாகும் இவர்கள் 1.9.2020 முதல் 21.3.2022 வரை அந்தந்த ராசிகளில் அமர்ந்து 12 ராசிகாரர்களுக்கும் பலாபலன்களை வழங்குவார்கள்.

மேஷம்

ராகு பலன்கள்: இது நாள் வரை ராசிக்கு   3 ம் இடத்தில் இருந்து காரியங்களில் வெற்றியும் , மன தைரியத்தையும் அளித்து வந்த ராகு பகவான் இப்போது ராசிக்கு 2 ம் வீட்டில் அமரபோகிறார்.  பேச்சில் சற்று நிதானம் தேவை. வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும் ஆகவே சேமிப்பை #அதிகபடுத்தவும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குலையும் எனவே விட்டுக்கொடுத்து போவது நல்லது. எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும். யாருக்காகவும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். பெண்களுக்கு நாவடக்கம் மிக முக்கியம்.

முகலிங்க மூர்த்தி

சைவ சமயத்தில் சிவபெருமான் அவதாரம் எடுப்பதில்லை. பக்தர்களுக்கு அருளும் பொருட்டு அவர் வடிவம் மட்டுமே எடுக்கிறார். சைவத்தில் சிவனின் திருவடிவங்கள் மூர்த்தங்கள் எனப்படும். சைவத்தில் சிவனுக்கு 64 மூர்த்தங்கள் உள்ளது. அந்த மூர்த்தங்களில் ஒன்று முகலிங்க மூர்த்தி ஆவார்...

சிவபெருமானின் வழிபாடு, சிவலிங்க வழிபாடு(சகளம்-உருவ வழிபாடு , நடராஜர் வழிபாடு, சோமாஸ்கந்தர் வழிபாடு என பரவலாக உள்ளது .

சகளம், சகளத் திருமேனி என்று அறியப்படும் அருவுருவ நிலையானது, சதாசிவ வடிவமாக இருக்கும் முகலிங்கத்தினை குறிப்பதாக அமைகிறது. சிவலிங்கத்தில் முகம் இருந்தால் நாம் அதை முகலிங்கம் என்போம். அத்தகைய முகலிங்கம் நான்கு வகைப்படும். அவை ஆட்யம், அநாட்யம், சுரேட்டியம், சர்வசமம் என்பனவையாகும். இதில் ஆட்யம் என்பது 1001 லிங்கமுடையது. சுரேட்டியம் என்பது 108 லிங்கமுடையது. அநாட்டிய , சுரேட்டிய லிங்கங்கள் திருமுகங்களைப் பெறாதவையாகும்.சர்வசமம் என்பது ஐந்து முகம் பெறும்.

சிவசங்கரி சிவானந்தலஹரி

தர்பாரி கானடா இராகம்

சீர்காழி கோவிந்தராஜன்

* அம்மன் பக்தி கீதம்*
👇👇👇

சிவசங்கரி.....
சிவசங்கரி.....

சிவானந்த லஹரி
சிவானந்தலஹரி

சிவசங்கரி....
சிவசங்கரி...

சந்திரகலாதரி ஈஸ்வரி
கருணாம்ருதம் தனைப்
பொழிகவே அம்மா

மனது உருகி வா
மகிமை தோன்ற வா

ஏழை பாலனையும்
காக்க வா....

சிவசங்கரி சிவானந்த லஹரி
சிவசங்கரி

நாத விந்துக லாதீ நமோநம

*திருப்புகழ் *
சுதா ரகுநாதன்
👇👇👇

நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித சாமீ நமோநம ......
வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம ......
பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம ......
கிரிராஜ

🔥ராகு கேது🐍 பெயர்ச்சி 2020 - 2022

🦅இன்று செப்டம்பர் 1 ராகு கேது பெயர்ச்சி 2020.

🦅கடந்த 1 1/2 வருடங்களாக மிதுனத்தில் இருந்த ராகு ரிஷபத்திற்கும், தனுசில் இருந்த கேது விருச்சிகத்திற்கும் பெயர்ச்சியாகிறது...

🦅இது உலகளாவிய பல மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது... குறிப்பாக, 🐍கொரோனா எனும் கொடிய வைரஸிடம் இருந்து விடுதலை கிடைக்கப் போகிறது...

🐍ராகு பகவான் தனது குருவான சுக்கிராச்சாரியாரின் வீடான ரிஷபத்தில் நின்று உச்சம் பெறுகிறார்... இது மிகவும் சிறப்பு...
மக்கள் சுகபோத்தில் திழைத்து விளங்கப் போகிறார்கள்...

🦅ஆடை, அணிகலன், ஆடம்பர பொருட்களின் விலை அதிகரிக்கும்...

சிவபெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்

"சிவபெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்"
யோக யாத்ரா என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதி அற்புத நிகழ்வு இது.
1879- ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்தது. ஆங்கிலேய அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் மார்ட்டின் அகர் மால்வா ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு எதிரான போரில் படையை தலைமை ஏற்று வழி நடத்திக் கொண்டிருந்தார். கர்னல் மால்வா தன் மனைவிக்கு தன் நலன் குறித்து கடிதங்கள் அனுப்புவது வழக்கம். ஆனால் இந்த போர் நீண்டு கொண்டு சென்றது. மேலும் கர்னிலிடமிருந்து எந்தக் கடிதமும் அவரது மனைவிக்கு வரவில்லை. கர்னலின் மனைவி கடிதம் வராதது கண்டு துயருற்றார். ஒரு நாள் குதிரை சவாரி சென்றவரின் கண்களில் பைஜிநாத் கோவில் தென்பட்டது. அந்த கோவிலின் உள்ளிருந்து ஒலித்து கொண்டிருந்த சங்கொலியும் மந்திர ஒலிகளும் அவரை ஈர்க்க, உள்ளே சென்று அங்கே பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்த வேதியர்களைக்

ஆத்தி வரதரின் பழம்பெரும் வரலாறு

ஆத்தி வரதார், காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலின் அசல் சிலை, ஒரு அத்தி மரத்திலிருந்து மரத்தினால் ஆனது, பிரம்மா அஸ்வமேதாயகம் (யாகம்) செய்தபோது புனிதமான தீப்பிழம்புகளிலிருந்து வெளிப்பட்டது.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சின்னச் சின்னது, மேலும் 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை கர்பக்ரஹத்தில் இந்த மூர்த்தி பிரதான தெய்வமாக இருந்தது.