Monday, 9 December 2019

மாதுளை



மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு.
மாதுளம்பழத்தை வெட்டி, அதில் ஒரு துண்டை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, ஆற வைத்துக், கண்களை கழுவினால், கண் பொங்குவது உடனே நிற்கும்.
மாதுளை சாறு, வெட்டிவேர் தூள் கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவி வந்தால், பருக்கள் மறையும்.

மாதுளை சாறை தொடர்ந்து 40 நாட்கள் குடித்து வர பெண்களின் மாதவிடாய் பிரச்னை குணமாகும். நினைவாற்றல் பெருகும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மாதுளம்பழச் சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து, அதில் ஒரு மூடி தேன் கலந்து குடித்து வர, நாள்பட்ட வறட்டு இருமல் குணமாகும்.
கல்கண்டு, பனீர், தேன், மாதுளம்பழச் சாறு ,ஒரு டம்ளர் எடுத்து, கலந்து, ஒரு சட்டியில் இட்டு காய்ச்சி இதை நெல்லிக்காய் அளவு எடுத்து, காலை,மாலை சாப்பிட்டு வர படை, தேமல் சரும நோய்கள் குணமாகும்.





மாதுளம்பழச் சாறையும் அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வர சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும்.
நாள்ப்பட்ட நோயின் பாதிப்பால் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான சத்தை தரும்.
அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டு வர மிக நல்லது. மாதுளம்பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் சூட்டு நோய்கள் நீங்கும்.
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டு வர, உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகும்.
மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு ,சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர , இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்து வர குணமாகும்.

மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக எடுத்து,ஒரு சட்டியில் இதன் எடைக்கு எட்டு பங்கு தண்ணீரீல் இட்டு பாதியாகச் சுண்டக் காய்ச்சி, காலை நேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் மலத்துடன் வெளியேறும்.
உலர்த்திய மாதுளம் பூக்கள் 10 கிராமுக்கு மாதுளம் மரப்பட்டை 20 கிராம் சேர்த்துக் கொதிக்க வைத்து, சிறிது படிகாரத்தைக் கலந்து தொண்டை வரை வாய் கொப்பளித்து வர தொண்டைப்புண், தொண்டைவலி, வாய்ப்புண் குணமாகும்.
மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து நன்கு அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், வெள்ளைபடுதல் குணமாகும்.
மாதுளம் பூக்கள் அறுகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து ஒரு சட்டியில் அரை லிட்டர் தண்ணீரில் இட்டு காய்ச்சி , காலை மாலை 30 மில்லி எடுத்து, பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்து குடித்து வர இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும். வெட்டை நோயும் நீர்க்கடுப்பும் குணமாகும்..

மாதுளம்பூச்சாறு 300 கிராம், 200 கிராம் பசு நெய் சேர்த்து பூச்சாறு சுண்டும் அளவிற்கு காய்ச்சி நெய்யை வடித்து தினமும், 100மி.லி காலை, மாலை குடித்து வர இரண்டு மாதத்தில் கடுமையான சயரோகப்பாதிப்பு, படிப்படியாகக் குறையும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் தேறும். தொடர்ந்து இருபது தினங்கள் இதே நெய்யை காலை மாலை சாப்பிட்டு வந்தால் எல்லா விதமான மூலநோயும் தீரும்.

மாதுளம் விதை, வேர்ப்பட்டை, மரப்பட்டை இவற்றைச் சமமாக எடுத்து உலர்த்திப் பொடி செய்து, காலை மாலை 5 கிராம் வீதம் வெந்நீரில் கலந்து குடித்து வர பெண்களின் கர்ப்ப நோய் அனைத்தும் குணமாகும்.
மாதுளம்பூச் சாறு 100மி.லி, கற்கண்டைப் பொடிசெய்து சேர்த்து காலை மாலை தொடர்ந்து குடித்து வர, சூட்டினால் ஏற்படும் ஆசனக் கடுப்பு, வயிற்றுக்கடுப்பு, மலம் கழித்தபின் எரிச்சல், மூலம் ஆகியவை சரியாகும்.

No comments:

Post a Comment