Monday, 16 December 2019

கை வைத்தியங்கள்

1.காலில் குத்திய முள் வெளியேற்ற முள் குத்திய இடத்தில் தினசரி எருக்கன் பாலை விட்டுக் கொண்டே வந்தால் மூன்று நான்கு நாட்களில் அந்த இடம்  பழுத்து முள்  வெளியேறிவிடும்.

2.அடிபட்ட வீக்கம் மற்றும் எந்தவிதமான வீக்கமாக இருந்தால் எருக்கன் இலை பழுப்பு இலையைக் கொண்டு வந்து அதன் மேல் வேப்ப எண்ணெய் வைத்து வதக்கி அதை வீக்கத்தில் வைத்துக் கட்டி வந்தால் வீக்கம் வாடிவிடும்.



3.உடம்பில் சதா அரிப்புகள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தால் ஆவாரம்பூ ஒரு கைபிடி எடுத்து அதனுடன்சம அளவு பச்சை பருப்பையும் சேர்த்து மைபோல அரைத்து உடல் முழுவதும் பூசி20 நிமிடம் கழித்த பின்னர்சீக்காய் தூள் போட்டு வெந்நீரில் குளித்துவர ஐந்து நாட்களில் உடல் அரிப்பு குணமாகும்.

4.தேள் கடிக்கு ஒன்பது துளசி இதழ்களை எடுத்து தண்ணீரில் அலசி விட்டு நன்கு மென்று முழுங்கிட வேண்டும் பின்பு முற்றிய தேங்காயை ஒரு மூடி உடைத்து அதை மெதுவாக மென்று தின்னும் படி செய்தால் தேள் கடி விஷம் இறங்கும் .

No comments:

Post a Comment