Friday, 6 December 2019

வெஜிடபிள்ஸ் க்ரிஸ்பி

தேவையானவை:
கோஸ் - 100 கிராம், கேரட், குடமிளகாய், வெங்காயம் - தலா ஒன்று, பூண்டு - 3 பல், மைதா - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 4 டீஸ்பூன், மிளகுத்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை:
கோஸ், கேரட், குடமிளகாய், வெங்காயம் ஆகியவற்¬றை நீள நீளமாக ஒரு இன்ச் அளவுக்கு மெல்லியதாக நறுக்கவும். இதனுடன் நறுக்கிய பூண்டு, மைதா, மிளகாய்த்தூள், கார்ன்ஃப்ளார், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசிறி, சூடான எண்ணெயில் பொரித்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

No comments:

Post a Comment